Published:Updated:

`தேதியைக் குறியுங்கள்; ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்!’ - தமிழிசைக்கு அன்புமணி பதில்

வீ கே.ரமேஷ்
க .தனசேகரன்
`தேதியைக் குறியுங்கள்; ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்!’ - தமிழிசைக்கு அன்புமணி பதில்
`தேதியைக் குறியுங்கள்; ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்!’ - தமிழிசைக்கு அன்புமணி பதில்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசையோடு ஒரே மேடையில் விவாதிக்கத் தயார் எனத் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் பா.ம.க இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

தமிழிசை செளந்தரராஜனுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் கருத்து மோதல் முற்றியிருக்கிறது. இந்த நிலையில், சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக அன்புமணி ராமதாஸ் இன்று சேலம் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணி, ''தமிழிசையோடு ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்'' என்று அறிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ''என்னை தமிழிசை விவாதத்துக்கு வரச் சொல்கிறார். நான், விவாதத்துக்கு வரத் தயார். ஜூன் 29-ம் தேதிக்கு மேல் ஒரு தேதியைக் குறிக்கச் சொல்லுங்கள். இந்த விவாதம், அறிவாளி யார் என்று தீர்மானிக்கும் விவாதம். என்னைவிட தமிழிசை அறிவாளி. ஏனென்றால், நான் மெரிட்டில் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவர் ஆனேன். ஆனால், அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரை பெற்று மருத்துவர் ஆனார். அதனால் அவர் என்னைவிட அறிவாளி.

தமிழிசை, ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி 21 பேர் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட பிறகும், போராடி 20 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்று ,எங்கள் இளைஞர்கள், மாணவர்கள் முன்னேறிவருகிறார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். அதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆனால் அவர் சார்ந்த சமுதாயம், சி.பி.எஸ்.சி., பாடப் புத்தகத்தில் இழிவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதை நாங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினோம். போராட்டங்கள் நடக்கும்போது, தற்காப்புக்காக மரங்கள் வெட்டப்பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டத்தில்கூட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பெரியார் கூட கல்லுக்கடை மறியல் செய்தபோது மரங்களை வெட்டியுள்ளார். நாளை, தமிழ்நாடு முழுவதும் பா.ம.க சார்பாக மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசியலை தனது அப்பாவிடம் தமிழிசை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். காலை எழுந்ததும் இன்றைக்கு எத்தனை மைக் வரும், எப்படியெல்லாம் உளறலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர் தமிழிசை’’ என்றார். சமீபத்தில், 'அன்புமணியுடன் நேரடி விவாதத்துக்குத் தயார்' என தமிழிசை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.