Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன்,  பொன்னியம்மன்மேடு.

? பெங்களூரு சிறைக்குச் செல்லும் முன்பு, ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை தட்டினாரே சசிகலா... அவர் சொன்னது என்னவாக இருக்கும்?


! ‘என்னை இப்படி தனியாக மாட்டி விட்டுவிட்டீர்களே?’ என்று நினைத்திருக்கலாம். ‘சுப்ரீம் கோர்ட்டில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும்’ என்று சொல்லி ஏமாற்றியவர்களுக்கு எதிரான சபதமாக இருந்திருக்கலாம். ‘உங்களின் உடன்பிறவா சகோதரியின் நிலைமையைப் பார்த்தீர்களா?’ என்ற வேதனையாக இருக்கலாம். ‘நல்லவேளை, சிறையைவிட கல்லறை நல்லது என்று நீங்கள் போய்விட்டீர்கள்’ என்ற கலக்கமாக இருக்கலாம். முப்பது ஆண்டு கால வேதனையின் வெளிப்பாடு அது. சமாதிகளில் சத்தியம் செய்வது சர்வசாதாரணமானதுதான். ஆனால், சசிகலா ஓங்கி அடித்ததும், அப்போது அவர் முகத்தில் காட்டிய உணர்வுகளும்தான் பதறவைக்கின்றன.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுப்ரமண்ய பாரதி, பொன்னவராயன் கோட்டை.

? பாஞ்சாலி சபதம், கண்ணகி சபதம், சசிகலா சபதம்..?


! சூதாட்டத்தில் நாடு நகரத்தை இழந்தவர்கள் பாஞ்சாலியையும் பணயம் வைத்தார்கள். செய்யாத பாவத்துக்குத் தண்டிக்கப்பட்டவள் பாஞ்சாலி. சிலம்பு திருடியதாக கோவலன் கொலையுண்டதற்கு நியாயம் கேட்டு வருகிறாள் கண்ணகி. பாஞ்சாலியும் கண்ணகியும் அநீதி இழைக்கப்பட்டவர்கள். அதனால், அவர்களுக்கு சபதம் போட உரிமை உண்டு. சசிகலா, அநீதி இழைத்ததாக தண்டிக்கப்பட்டவர். அவருக்கு உண்டா சபதம் போடும் உரிமை?

கு.நீலமேகம், விழுப்புரம்.


? அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பு இப்போது யாரிடம் இருக்க வேண்டும்?


! அ.தி.மு.க தலைமை என்பது அதன் பொதுச்செயலாளரான சசிகலாதான். அவர் இப்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார். தனக்குப் பதிலாக அதிகாரம் செய்ய தனது அக்கா மகனான தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டுப் போயிருக்கிறார் சசிகலா. அவரே ஒரு நியமனம். ‘ஒரு நியமனம் இன்னொரு நியமனத்தை எப்படி நியமிக்கலாம்’ என்று தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-வின் சட்டப்படி, கட்சி உறுப்பினர்கள் முறைப்படி தங்களுக்கான பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதுதான் சரியானது. சசிகலாவுக்கு தண்டனை தரப்பட்டதும் எப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராக புதிதாக ஒருவரைத் தேர்வு செய்தார்களோ அதேபோல், புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்தால் மட்டும்தான் அக்கட்சிக்கு எதிர்காலம் உண்டு. இல்லாவிட்டால், சசிகலாவுக்குத் தரப்பட்ட தண்டனைக்கு விளக்கம் சொல்வதிலேயே அக்கட்சியின் ஆயுள் கரைந்துவிடும்!

சம்பத்குமாரி, பொன்மலை.

? ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்ற நிலையில் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா?


! வழங்கப்படாது. அ.தி.மு.க-வினரும் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று அவ்வளவு தீவிரமாக கோரிக்கையும் வைக்க மாட்டார்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

? தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க பி.ஜே.பி-க்கு இன்னும் ஆள் கிடைக்கவில்லையா?


! ஆளுக்கா பஞ்சம்? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நியமிக்கும் எண்ணம் இல்லை. அவ்வளவுதான். ‘போதும்... போதும்... தமிழ்நாட்டுக்குத் தனியாக கவர்னர் எதற்கு?’ என்ற அலட்சியம்தான் இதற்குக் காரணம்!

கழுகார் பதில்கள்

ஜி.வி.மனோ, தூத்துக்குடி.

? ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் தீர்ப்பின் நிலை என்னவாக இருக்கும்?

! சந்தேகம் என்ன? பதவி விலகி இருப்பார். பரப்பன அக்ரஹாரா சிறையில் இப்போது இருந்திருப்பார்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

? அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக கழுகார் இருந்திருந்தால்?

! எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி..?

கழுகார் பதில்கள்

கே.ஆர்.ஜி.கே.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு.

? காலம்... சரியான நேரத்தில் தீர்ப்பு அளித்துவிட்டது பற்றி?

! ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பார்கள். சட்டம் நின்று, காலதாமதம் ஆனாலும் தண்டித்து உள்ளது. ‘தாமதம் ஆகும் நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்று சொல்வார்கள். தாமதம் ஆனாலும் சரியான தீர்ப்பு வந்ததால், நிலைநிறுத்தப்பட்ட நீதி ஆகிவிட்டது. ‘இப்படி ஒரு தீர்ப்பை நாங்கள்

கழுகார் பதில்கள்

அளிக்காவிட்டால் தேசத்துக்கே பின்னடைவு ஏற்படும். நியாய தர்மத்துக்கு பயந்து வாழ்பவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள். தேசத்தில் எப்போதும், இருப்பவர் - இல்லாதவர் இடையே மோதல் நடப்பதைப்போல, நியாயவான்கள் - அநியாய மனிதர்களுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. அநியாய மனிதர்கள் அதிகமாகி விடுவார்கள். ஊழலுக்கு எதிரான யுத்தத்தை இந்தத் தீர்ப்பில் இருந்து தொடங்குவோம்’ என்று நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் தீர்ப்பில் சொல்லி இருந்தார்கள். இது, காலம் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒலி. இந்தக் குரல் தீவிரமானால்தான், இந்திய அரசியல் சுத்தமாகும்!

எஸ்.பவதாரிணி சீனிவாசன்,  ஆலத்தம்பாடி.


? இன்னொரு பொம்மை முதல்வர் தயார் செய்யப்படுகிறாரா?


! ஒரே பொம்மையைத் தொடர்ந்து பயன்படுத்தமாட்டார்கள். இன்னொரு பன்னீர்செல்வம் உருவாகிவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருப்பார்கள். அதனால், எடப்பாடி பழனிசாமி சில மாத காலத்துக்குத்தான். டி.டி.வி.தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் யாரையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள். இவர்களை நடராசன், திவாகரனால்கூட சமாளிக்க முடியவில்லை. எடப்பாடி எம்மாத்திரம்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கா மக்கள் வாக்களித்தார்கள்?


! எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, சசிகலா முதலமைச்சர் ஆவதற்காகவும் மக்கள் வாக்களிக்கவில்லை. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டதைக் கூட, ‘மக்களால் நம்பப்பட்ட ஜெயலலிதாவின் நியமனம்’ என்ற அடிப்படையில் ஏற்கலாம். மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism