Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

நோ பிளாஸ்டிக்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மே 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்குத் தடை விதித்திருக்கிறார், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். காரணம், வெறுமனே சுற்றுச்சூழல் மீதான அக்கறை அல்ல! ‘பிளாஸ்டிக் பைகளை உணவாக சாப்பிடுவதால் மாடுகள் பரிதாபமாக இறக்கின்றன. பிளாஸ்டிக்கை தடை செய்வது மாடுகளுக்கு நல்லது’ என பிரதமர் மோடி சமீபத்தில் பேசியதே இந்த முடிவுக்குக் காரணமாம்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

அண்ணன் வந்தார்!

உத்தரப்பிரதேச  சட்டசபை தேர்தல் களத்துக்குப் புதுவரவு, பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் சோம் மோடி. பிரதமரின் அண்ணனாக இருந்தாலும், இவருக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இந்தியா முழுக்க பிரசாரத்தில் மோடி பிஸியாக இருந்ததால், தம்பி சார்பில் மக்களிடம் ஓட்டு கேட்க அண்ணன் வந்தார். இப்போதும் பிரதமர் பல வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், வாரணாசி பகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் சோம் மோடி. எளிமையாகப் பயணித்து, வீடு வீடாகச் சென்ற அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

விநோதக் கூட்டணி


மகாராஷ்டிராவை ஆள்வது பி.ஜே.பி, சிவசேனா கூட்டணிதான். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களில் இரு கட்சிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. ஆனாலும் ஆட்சி கவிழவில்லை. ‘அது வேற டிபார்ட்மென்ட்’ என்ற காமெடியாக இருக்கிறது இவர்களின் கூட்டணி. ‘‘முரண்பட்டாலும், நாங்கள் கவிழ்க்க மாட்டோம். ஆனால், எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. முன்பு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள்தான் பி.ஜே.பி-யின் முகங்களாக இருந்தனர். இப்போது கொலைகாரர்கள்தான் அந்தக் கட்சியின் அடையாளமாக இருக்கிறார்கள். தாவூத் இப்ராஹிம் இந்தியா திரும்பினால், அவரைக்கூட பி.ஜே.பி-யில் சேர்த்துக்கொள்வார்கள்’’ எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

``நான் இல்லை!’’

உத்தரப்பிரதேச தேர்தலில், மத்திய அமைச்சர் உமாபாரதியை பெரிதும் முன்னிலைப்படுத்துகிறது பி.ஜே.பி. ‘ஒருவேளை பி.ஜே.பி ஜெயித்தால் அவர்தான் முதல்வரா?’ என்ற கேள்வியைக் கேட்டால் அலறுகிறார் உமா. ‘‘நான் ஏற்கெனவே மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவள். என்னை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலைவராக நானே கருதவில்லை. கண்டிப்பாக நான் முதல்வர் இல்லை’’ என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism