Published:Updated:

“ ‘கட்சித்தாவல்’ தடைச் சட்டத்துக்கு எதிரானது!’’ - சொல்வது பண்ருட்டிதான்!

“ ‘கட்சித்தாவல்’ தடைச் சட்டத்துக்கு எதிரானது!’’ - சொல்வது பண்ருட்டிதான்!
பிரீமியம் ஸ்டோரி

‘‘சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு கோருவது, கட்சித்தாவல் தடைச் சட்டத்துக்கு எதிரானது’’ எனச் சொல்லியிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தனை முறை கட்சித் தாவல் நடத்தியிருக்கிறார் என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ ‘கட்சித்தாவல்’ தடைச் சட்டத்துக்கு எதிரானது!’’ - சொல்வது பண்ருட்டிதான்!

பண்ருட்டியாரின் அரசியல் என்ட்ரியே தி.மு.க-வில்தான். அடுத்து அ.தி.மு.க-வுக்குப் போனார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சரானார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு பா.ம.க-வில் சேர்ந்து எம்.எல்.ஏ ஆனார். அங்கிருந்து தாவி ‘மக்கள்நல உரிமைக் கழகம்’ என்ற புதிய கட்சியை கொஞ்ச காலம் நடத்தினார். அது போனியாக வில்லை. விஜயகாந்த்தின் தே.மு.தி.க நன்றாக போய்க் கொண்டிருந்தபோது அங்கே ஜாகையை மாற்றினார். கட்சியின் அவைத் தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிகள் எல்லாம் அனுபவித்து விட்டு, ‘டாக்டர்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.... அதனால அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்’ எனச் சொல்லி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டார். திடீரென ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துவிட்டு, போயஸ் கார்டனுக்குள் புகுந்தது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்! ‘‘சொந்த வீட்டிக்கு வந்துவிட்ட உணர்வு’’ என பண்ருட்டியார் பஞ்ச் வைத்தார். டாக்டர்கள் பேச்சையும் கேட்காமல் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் நின்று, தெருத் தெருவாக பிரசாரம் செய்தார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் ‘சின்னம்மா’வின் தலைமைக்கு பணிந்து அரசியல் செய்கிறார் அரசியல் ஞானி பண்ருட்டியார்!

பண்ருட்டியார் B.E., (Hons) படித்தவர். அவரை ஓய்வு எடுக்கச் சொன்ன டாக்டர் MBBS படித்தவரா?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
வரைகலை: எம்.ஆசாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism