Published:Updated:

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி
இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

-குள.சண்முகசுந்தரம்
படங்கள்:
உ .பாண்டி

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற‌ தன் நாட்டு பாதுகாப்பு வீரர்களை, இந்தியாவுக்கு  திருப்பி அனுப்பவே முடியாது என இத்தாலி அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இத்தாலி வீரர்களை அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்த‌ விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்து சந்தேகம் கிளப்பும் பி.ஜே.பி-காரர்கள் இன்னொரு விவகாரத்தை கிளப்பு கிறார்கள்.

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

இதுகுறித்து நம்மிடம் பேசினார் ராமேஸ்வரத்தில் வசிக்கும் பி.ஜே.பி-யின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் '' இத்தாலி கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் இங்கு வந்து தான் ஓட்டளிக்க வேண்டும் என்பதில்லை அவர்கள் இந்தியாவில் இருந்தபடியே  இ மெயில் மூலம் ஓட்டளிக்க முடியும்'  என்று இத்தாலி அமைச்சர் சொல்கிறார். அப்படி இருந்தும் இத்தாலி வீரர்களை இந்தியா எதற்காக அங்கே அனுப்பி வைத்தது. இதன் பின்னணியில் யாருடைய உத்தரவுகள் ஒழிந்தி கிடக்கிறது. சோனியா கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இத்தாலிக்காரர்களை அவர்கள் நாட்டிற்கு மாலை மரியாதை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பது எங்களின்  பகிரங்க குற்றச்சாட்டு.

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில்

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

கொள்ளவேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் நிமிடத்திற்கு நிமிடம் அடித்து துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்காக மத்திய அரசு துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

கடந்த 28.11.11-ல், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாந்த்,

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

லாங்கெட் ஆகிய ஐந்து  மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அடித்து இழுத்துச் சென்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் ஐவர் மீதும் ஹெராயின் கடத்தியதாக பொய்யான வழக்கை பதிவு செய்து சிறையில் தள்ளியது இலங்கை அரசு. மத்திய உளவுத் துறையும், மாநில உளவுத்துறையும், 'அவர்கள் ஹெராயின் கடத்தலில் ஈடுபடவில்லை" என திட்டவட்டமாக அறிக்கை அனுப்பி இருந்தும் இந்திய அரசாங்கம் அந்த ஐந்து மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தாலிக்காரனுக்கு ஒரு நீதி ; இந்தியனுக்கு ஒரு நீதியா? - கொந்தளிக்கும் பி.ஜே.பி

ஐந்து மீனவர்களும் க‌டந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொழும்பு வெளிக்கடவு சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வழக்குச் செலவை தமிழக அரசு தான் செய்து வருகிறது. இவர்களின் குடும்பத்திற்கு மாதாந்திர‌ உதவித் தொகையையும் தமிழக அரசுதான் அளித்து வருகிறது.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்ககக் கோரி அவரது உறவினர்கள், பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப,.சிதம்பரத்தையும் நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் மத்திய அரசு, இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை.

ஆனால், இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிக்காரர்களை இவர்களாகவே சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்தியனுக்கு ஒரு நீதி இத்தாலியனுக்கு ஒரு நீதியா? மண்ணின் மைந்தர்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்காமல் அன்னிய சக்திகளிடம் இந்திய தேசத்தின் அதிகார சக்கர‌த்தை ஒப்படைத்ததன் பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என்று சொன்னார் முரளிதரன்.