Published:Updated:

"பரஸ்பரம் சம்மதத்துடன் 16 வயதில் செக்ஸ் தவறில்லை"

Vikatan Correspondent
"பரஸ்பரம் சம்மதத்துடன் 16 வயதில் செக்ஸ் தவறில்லை"
"பரஸ்பரம் சம்மதத்துடன் 16 வயதில் செக்ஸ் தவறில்லை"
"பரஸ்பரம் சம்மதத்துடன் 16 வயதில் செக்ஸ் தவறில்லை"

புதுடெல்லி: சம்மதத்துடன் நடக்கும் ‘செக்ஸ்’ உறவுக்கான வயது வரம்பை 18இல் இருந்து 16 ஆக குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, கற்பழிப்புக்கு எதிராக தண்டனையை கடுமையாக்க அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு மாற்றாக தயாரிக்கப்பட்டு வரும் புதிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக, மத்திய அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த மசோதாவை பரிசீலிப்பதற்காக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதாவில் முக்கியமாக பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் ‘செக்ஸ்’ உறவுக்கான வயது வரம்பை 18இல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சத்தில்தான் கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதனால், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரிக்கும் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

##~~##
ஆனால், இதன்மூலம், பொய்யான கற்பழிப்பு புகார்களை தடுக்க முடியும் என்பது வயது வரம்பை குறைக்க வேண்டும் என்பவர்களின் வாதமாக இருந்தது. முடிவில், வயது வரம்பை 16 ஆக குறைக்கும் முடிவு, சட்ட திருத்த மசோதாவில் ஏற்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சமான ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பொதுவான வார்த்தைக்கு பதிலாக, கற்பழிப்பு என்ற வார்த்தையை மசோதாவில் சேர்ப்பது குறித்தும் உடன்பாடு ஏற்பட்டு, ஏற்கப்பட்டது.
இந்த சட்ட மசோதா வரும் 18ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது.