Published:Updated:

வரதட்சணை புகாரால் ஒடிசா சட்ட அமைச்சர் ராஜினாமா

Vikatan Correspondent

ஒடிசா: வரதட்சணை புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததையடுத்து ஒடிசா சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் மொகந்தி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஒடிசா சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ரகுநாத் மொகந்தி. இந்த நிலையி்ல வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக இவரது மருமகன் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அமைச்சர் ரகுநாத் மொகந்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தனது அமைச்சர் பதவியை மொகந்தி இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் நவீன் பட்நாயக்குக்குஅவர் அனுப்பி வைத்துள்ளார்.

வரதட்சணை புகார் தொடர்பாக அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.