Published:Updated:

காங்கிரஸ் பிரமுகர் வீட்டு திருமணத்தில் திவாகரன்

Vikatan Correspondent
காங்கிரஸ் பிரமுகர் வீட்டு திருமணத்தில் திவாகரன்
காங்கிரஸ் பிரமுகர் வீட்டு திருமணத்தில் திவாகரன்
காங்கிரஸ் பிரமுகர் வீட்டு திருமணத்தில் திவாகரன்

மன்னார்குடி: அ.தி.மு.க-வை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட‌ பிறகு வெளியில் தலைக்காட்டாமல் இருந்த திவாகரன் இன்று, காங்கிரஸ் பிர‌முகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரையும் வியப்படைய வைத்தது.

சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்டவர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியிலிருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. மேலும். திவாகரன், நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குகளை போட்டு துரத்திப் பிடித்து கைதும் செய்தது போலீஸ். இந்த நிகழ்வுகளால் வெளியில் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் திவாகரன்.

##~~##
இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸின் முன்னாள் தலைவர் மன்னை மதியழகன் மகள் ஆர்த்தி பிரியதர் ஷினிக்கு மன்னார்குடியில் இன்று திருமணம் நடைபெற்றது. த‌மிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தங்கபாலு முன்னாள் காங்கிரஸ் எம்.பி.  பி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்களும் டி.ஆர்.பாலுவின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு உள்ளிட்ட தி.மு.க. பிரபலங்களும் கலந்து கொண்ட இந்த‌ திருமண விழாவில் திவாகரனும் தனது மனைவி ல‌தாவுடன் வந்து கலந்து கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதுவும் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமணவிழாவில் திவாகரன் குடும்ப சகிதம் கலந்து கொண்டது மன்னார்குடி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
- வீ.மாணிக்கவாசகம்