Published:Updated:

அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அதிரடி!

Vikatan Correspondent
அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அதிரடி!
அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அதிரடி!
அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அதிரடி!

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில்," விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கு.கண்ணன், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.கவுதம்சாகர், பொருளாளர் பொறுப்பில் இருக்கும் டி.வி. கண்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக  எம்.மணி என்ற ராஜரத்தினம், மாவட்ட துணைச்  செயலாளராக எம்.கண்ணன், மாவட்ட பொருளாளராக என்.ஐ. ஜனாகிராமன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.தென்னரசு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.எஸ்.ஜெயச்சந்திரன் விடுவிக்கப்படுகிறார். அந்தப் பொறுப்பில் வி.ஆர். கருப்பசாமி நியமிக்கப்படுகிறார்.

##~~##
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஒன்றியச் செயலாளர் பொறுப்பில்  இருக்கும் எஸ்.மாணிக்கராஜ், அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.எம்.டி.தாயப்பராஜா, அம்பாசமுத்திரம் நகரச் அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.செல்வராஜ் ஆகியோர் அவரவர் வசித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் டி.அமலிராஜன், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் மு.ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் வெ.ஆறுமுகநயினார், ஸ்ரீவைகுண்டம் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் செ.முருகன், கோவில்பட்டி நகரச் செயலாளர் எஸ்.விஜயபாண்டியன் ஆகியோர் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளராக அமலி டி.ராஜன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக செ.முருகன், கோவில்பட்டி நகர செயலாளராக எஸ்.சங்கரபாண்டியன் நியமிக்கப்படுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகரச் செயலாளர் என்.ஜெயபால் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்ட பிரதிநிதியாக இருந்த அ.பக்கிரிசாமி அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரச் செயலாளர் எம்.கே.ஜமால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பெயிண்டர் எஸ்.வி.கணேசன் நியமிக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. .