Published:Updated:

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

Vikatan Correspondent
தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)
தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

மதுரை: உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க.வினரிடம் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இதனிடையே, தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, தீர்மான குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று சந்தித்து தார்மீக ஆதரவு தெரிவித்தனர்.

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

அப்போது, அந்த மாணவர்கள், "எங்களுக்கு ஆதரவு தருவது இருக்கட்டும், உண்மையிலேயே தமிழ் குடிமக்களை காப்பாற்ற வேண்டும் என்று உணர்வு உங்களுக்கு இருக்குமானால் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறக் கோரி உங்கள் தலைமைக்கு தகவல் கொடுங்கள்" என்று கூறினர்.

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

அவர்களும் உங்கள் கருத்தை தி.மு.க. தலைமைக்கு தெரிவிக்கிறோம் என்று கூறிவிட்டு சென்றனர். இதேபோல், அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 30 பேர் 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்று காலை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட உயரதிகாரிகளை மற்ற மாணவர்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
 

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

இதனிடையே, உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் 3 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

புதுக்கோட்டை மன்னர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 14 மாணவர்கள் 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையி்ல் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்கள் இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தி.மு.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் (படங்கள்)

பின்னர் அங்கிருந்த தபால் அலுவலகத்தை இழுத்துமூடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தபால் நிலையம் திறக்கப்பட்டது.

படங்கள்: பா.காளிமுத்து & எம். ராமசாமி