Published:Updated:

மே.வ. தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மம்தா

கொல்கத்தா, மார்ச்.3,2011

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்றும், தேர்தல் பிரசாரம் மட்டும் செய்யப்போவதாகவும் ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.##~~##

இதுகுறித்து கொல்கத்தாவில் நிருபர்களிட்ம அவர் கூறுகையில், "தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். பிரசாரத்தில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன். ரயில்வே அமைச்சராக இருந்து எனது கடமையை நிறைவேற்ற இருக்கிறேன்.

சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், 6 மாதங்களுக்குள் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக முடியும். அதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது," என்றார் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 18ம் தேதி தொடங்கி மே 10-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மும்முரமாக தயாராகி வருகிறது. கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு