Published:Updated:

"உலக அளவில் உதைபட்டுக் கொண்டிருக்கிறதே இந்தியா..!" - பா.ஜனதா வேதனை!

Vikatan Correspondent
"உலக அளவில் உதைபட்டுக் கொண்டிருக்கிறதே இந்தியா..!"  -  பா.ஜனதா வேதனை!
"உலக அளவில் உதைபட்டுக் கொண்டிருக்கிறதே இந்தியா..!" - பா.ஜனதா வேதனை!
"உலக அளவில் உதைபட்டுக் கொண்டிருக்கிறதே இந்தியா..!"  -  பா.ஜனதா வேதனை!

புதுடெல்லி: அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் இந்தியா, உலக அளவில் சுற்றி சுற்றி உதை வாங்கிக் கொண்டிருப்பதாக மாநிலங்களவை பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி வேதனையுடன் கூறினார்.

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் இந்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் நிறைவேற்றிய இத்தீர்மானத்திற்கு பதிலடியாக இந்தியாவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள நிலையில்,,இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

##~~##
இது ஒருபுறமிருக்க நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ .க்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று இது தொடர்பாக பேசிய பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி,  பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.என்றார்.
மேலும் கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 2 கப்பல் பாதுகாவலர்களை திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி மறுப்பதையும் சுட்டிக் காட்டிய ஜெட்லி, இந்தியா இப்படி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி உதைக்கப்படுகிறதென்றால், நமது வெளியுறவு விவகாரங்களை கையாள்வதில் எங்கோ தவறு உள்ளதாகத்தான் அர்த்தம்.என்றார்.