Election bannerElection banner
Published:Updated:

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

##~~##
சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு