Published:Updated:

“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி

“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி

“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நட்பு வட்டத்தில் இருந்த வீணை காயத்ரி, சசிகலா அணியின ருக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக செய்திகள் றெக்கை கட்டி வந்தன. இந்த நிலையில்,  ஆட்சியாளர்கள் பக்கம் தாவியிருக்கிறார். அணி மாற்றம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்குப் பதில் தேடி அவரைச் சந்தித்தோம்.

“பழிவாங்கினார் ராம மோகன ராவ்” - மனம் திறக்கிறார் வீணை காயத்ரி

‘‘கடந்த மாதம் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நீங்கள், திடீரென இப்போது சசிகலா அணிக்குத் தாவியதன் நோக்கம் என்ன?’’

‘‘ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கடந்த ஆண்டுகளில் என்னுடைய பொறுப்பைத் திறம்பட செய்து வந்தேன். இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பில் இருப்பவர் தமிழக முதல்வர்தான். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்தபோது, எனது பணியினைப் பாராட்டியவர், மேலும் மூன்று ஆண்டுகள் எனக்குப் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதாக வாய்மொழி உத்தரவையும் வழங்கி னார். அதன் அடிப்படையிலேயே, 2016-ம் ஆண்டுக்குப் பிறகு எனது பணி நீட்டிப்பை அமல் படுத்தக்கோரி, கடந்த  காலங்களில் முதல்வர் பொறுப்பு வகித்து வந்த  ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்து முறையிட்டேன். அவ்வளவுதான். நான் எந்த அணியிலும் இல்லை!’’

‘‘கடந்த காலங்களில் சசிகலா அணியினர் உங்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தனவே?’’

‘‘எங்கள் பல்கலைக்கழகம், கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் வருகிறது. இந்தத் துறையில், செயலாளர் மற்றும் ஆணையர் பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து என்மீது தனிப்பட்ட விதத்தில் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அவர்களது இந்தச் செயல்களுக்குப் பின்னணியாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இருந்ததாக நான் சந்தேகிக்கிறேன். துணைவேந்தர் பொறுப்பில் இருந்து என்னைத் தூக்கிவிட்டு, அவருக்கு வேண்டிய நபர்களை நியமிக்கும் எண்ணத்தோடு அவர் செயல்பட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இதனாலேயே 2016-ம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு, எனக்கு கிடைக்க வேண்டிய பணி நீட்டிப்பு ஆணையும் கிடைக்காமல் காலந் தாழ்த்தப்பட்டது. இதுதான் உண்மையான பிரச்னை. இதில் சசிகலாவை சம்பந்தப்படுத்தி யார் எழுதினார்கள், ஏன் எழுதினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், இதுகுறித்து துறைரீதியாக மட்டுமே எனது புகார்களை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்.’’

‘‘தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், தினகரனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பது ஏன்?’’

‘‘எனக்குத் துணைவேந்தர் பொறுப்பைக் கொடுத்த அதே கட்சிதான் இன்றைக்கும் ஆட்சியில் இருக்கிறது. அந்தவகையில், எனது பணி நீட்டிப்பு கோரிக்கையை வைப்பதற்காக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற வகையில் தினகரன் ஆகியோரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன்.

3-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில், டி.டி.வி தினகரனைச் சந்தித்தேன். அம்மாவின் ஆணையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார் டி.டி.வி தினகரன். விரைவில் எனது பணி நீட்டிப்பு ஆணை கிடைக்கும் என்று நம்புகிறேன்.’’

- த.கதிரவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz