Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

? உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க நிலவரம் எப்படி இருக்கும்?


! கலவரமாக இருக்கும். அதனால்தான் தேர்தலைச் சந்திக்கத் தயங்குகிறார்கள்.

எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

? மகாராஷ்டிரா மாநிலத்தைப் பிரிக்க பி.ஜே.பி முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி..?


! என்ன செய்தாலும் அங்கு சில பகுதிகளில் சிவசேனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், மாநிலத்தைப் பிரித்து அதைச் செய்யலாமா என்று பார்க்கிறார்கள் போலும்.

என்.காளிதாஸ், சிதம்பரம்.

? ‘தமிழக விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் சொல்லி இருக்கிறாரே?


! ஒட்டுமொத்தமாக மத்திய அரசு, கடந்த பதினைந்து ஆண்டு காலமாக இந்திய விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, இதில் தமிழக விவசாயிகளை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

? ‘கைப்பாவை முதல்வர் இருக்கும் வரை நான் தமிழன் அல்ல. அதற்குப்பதில் நான் இறப்பதே மேல்’ என்று சொல்லி இருக்கிறாரே முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு?


! எதற்காக கட்ஜு இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறார்? கைப்பாவை முதல்வர் இருப்பதைப் பார்த்து தமிழக மக்கள் உணர்ச்சிவசப் படுகிறார்களா என்ன?!

கழுகார் பதில்கள்!

பிரவீண் பாலா, சத்துவாச்சாரி.

? அ.தி.மு.க எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது?


! எதை நோக்கிப் போகிறது என்பது தெரியவில்லை. அது சரியான திசையில் போகவில்லை என்பது மட்டும் உண்மை.

மு.முத்துக்குமார், சென்னை-10.

? ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா சண்டையில் பொதுமக்களுக்கு நன்மை உண்டா?


! பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவே! ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களிடம் பேசினார்’ என்றெல்லாம் பொன்னையன் சொல்லி வந்தார். ‘பொன்னையன் பொய் சொல்கிறார்’ என்று இதுவரை மற்றவர்கள்தானே சொல்லி வந்தோம். இதோ, அவர் பன்னீர் அணிக்கு மாறிவிட்டதால் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் அவரை வெளுத்து வாங்குகிறது.

‘‘அம்மா இன்று இட்லி சாப்பிட்டாங்க... அம்மா இன்று உப்புமா சாப்பிட்டாங்க... அம்மா வழக்கமான உணவுகளை எடுத்துக் கொண்டாங்க... என்றெல்லாம் அப்போலோ மருத்துவமனை வாசலில் நின்று நாள் தவறாமல் நாட்டு மக்களுக்கு செய்தி வாசித்த நாக்குப்பூச்சி ‘பொய்’யையன் இன்று போக்கு மாறிச் சென்று துரோக பன்னீருக்கு தீவெட்டி தூக்கி அலைகிறார்’’ என்று எழுதி இருக்கிறார்கள். அவர்களே ‘பொய்’யையன் என்ற பிறகு, அவர் சொல்லி இருந்தது எப்படி உண்மையாகும்.

கழுகார் பதில்கள்!

பன்னீரை குற்றம்சாட்டும் வகையில், ‘பரிசுத்தமானவரா ஓ.பன்னீர்செல்வம்?’ என்று கலைராஜன் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ‘‘பன்னீர் வகித்து வந்த துறைகளில் எல்லாம் கொள்ளையோ கொள்ளை! பொதுப்பணித் துறையிலோ அனைத்து ஒப்பந்தங்களும் இவரது குடும்பத்தினருக்கும் பினாமிகளுக்கும். இப்படி அள்ளிய கோடிகள் ஒன்றா, இரண்டா? ஒரு லட்சத்துக்கும் மேல். பதவியோ உச்சப்பதவி, பணமோ எண்ணிக்கையில் அடங்காத பணம்! அயல் நாடுகளில் பல ஹோட்டல்கள், இந்தோனேஷியா, மொரீஷியசில் பல தீவுகள்! கேரளாவில் ஆடம்பர ஹோட்டல்கள். பண்ணை வீடுகள், பங்களாக்கள், காப்பித் தோட்டங்கள். இன்னும் எழுத முடியாத இத்யாதி இத்யாதி சொத்துக்கள்!’’ என்று கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழில் வந்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சி எந்த லட்சணத்தில் நடந்துள்ளது என்பதற்கு அவர்களது மோதல் மூலமாக வெளிச்சம் பிறக்கிறது.

கழுகார் பதில்கள்!

நெல்லை தேவன், தூத்துக்குடி.

? எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?


! தமிழக சட்டமன்றத்தில் அவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்துகொண்ட முறை, அவருக்கும் அவர் வகித்து வரும் பதவிகளுக்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை. அன்றைய தினம் முறையற்ற செயல்களில் இறங்கிய தி.மு.க உறுப்பினர்கள் ரங்கநாதன், கு.க.செல்வம், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜனநாயகத்தைப் பற்றி ஸ்டாலின் இனி பேச முடியும்.

அரசி சண்முகசுந்தரம், சென்னை-81.

? போயஸ் கார்டன் வீட்டில் இப்போது யார் யார் தங்கி இருக்கிறார்கள்? அவர்களை வெளியேற்ற முடியாதா?


! தினகரன் மனைவி அனுராதா, விவேக் மனைவி கீர்த்தனா ஆகிய இருவரும் வந்து போகிறார்கள். சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் கார்டன் வீடு இருக்கிறது. ‘அவர்களை வெளியேற்றலாமா, கூடாதா’ என்பது, ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தங்களான தீபாவும் தீபக்கும் எடுக்க வேண்டிய முடிவு.

கழுகார் பதில்கள்!

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

? தீபாவும் தனிக்கட்சி தொடங்கிவிட்டாரே?


! ‘இது கட்சி அல்ல, அமைப்பு’ என்று அவரே சொல்லி இருக்கிறார். ‘அது அமைப்பு அல்ல, காமெடி’ என்று பொதுமக்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

‘எம்.ஜி.ஆர் - அம்மா - தீபா பேரவை’ என்ற பெயரே அவரைக் கடுமையான கிண்டலுக்கு ஆளாக்கிவிட்டது. ‘‘நான் பொருளாளர்’’ என்றார். பிறகு, ‘‘நான் பொதுச்செயலாளர்’’ என்றார். அவருக்கு என்ன கொள்கை என்று தெரியவில்லை. எதற்காக இந்த அமைப்பு என்றும் புரியவில்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!