Published:Updated:

நாட்டியாஞ்சலி: மேடையில் உயிர்துறந்த வித்வான்!

Vikatan Correspondent

 நான் மேடையில் இருக்கும்போதே மரணம் வந்தால், சந்தோஷமாக மரணம் அடைவேன் என்பது கலைத்தாகம் உள்ளவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அப்படி மேடையில் மரணம் அடைந்தவர்கள் சரித்திரமாகி இருக்கிறார்கள். அந்த சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார் சிதம்பரத்தில் சிவசக்தி நாட்டியப் பள்ளி நடத்திவரும் சம்பத்குமார்.

மிருதங்க வித்வானான சம்பத்குமார், சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவின் கடைசி நாளான நேற்று விழாவை துவக்கிவைக்கும் விதமாக, மிருதங்கம் வாசித்தார். தன்னை மறந்து ஆக்ரோஷமாக வாசித்து முடித்த அவர், வியர்வையில் குளித்த உடம்போடு கீழே இறங்கி நாற்காலியில் அமர்ந்தார். அவரை பாராட்ட அருகே வந்தவர்கள் அவர் சாய்ந்தபடி கிடப்பதைப் பார்த்து பதறிப்போய், மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்கள். ஆனால், அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 

நாட்டியாஞ்சலியின் குழப்படிகளை பார்த்து பலி வாங்கிவிட்டாரா நடராஜர்? இல்லை, தன் பரம பக்தனின் பக்தியை மெச்சி தன்னுடன் அழைத்துக்கொண்டாரா? அந்த நடராஜனுக்கே வெளிச்சம்!

-கரு.முத்து