Published:Updated:

பாகிஸ்தானைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Vikatan Correspondent
பாகிஸ்தானைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
பாகிஸ்தானைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
பாகிஸ்தானைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுடெல்லி  இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது என்று பாகிஸ்தானை கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நாடாளுமன்ரத்தில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக இந்தியா சார்பில் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
 
இதனைத் தொடர்ந்து மக்களவையில் இன்று சபாநாயகர் மீராகுமார், பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அந்த தீர்மானத்தில், 'நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக 14-3-2013 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்த அவை முற்றிலும் நிராகரிக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

##~~##
மேலும் பாகிஸ்தான், இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் உறுதியாகவும், ஒற்றுமையுடனும் எதிர்கொள்வோம்.
 
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதிதான். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது. அப்போதுதான் பாகிஸ்தானுடன் சுமுகமான உறவுகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தீர்மானத்தினை கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் வரவேற்றனர். இதனையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று மாநிலங்களவையிலும், பாகிஸ்தான் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர்.