‘ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஆளும்கட்சிக்குப் பெரும் பீதியைத் தந்திருக்கும் போல! அந்த உண்ணாவிரதத்துக்கு முன்பே ஜெ. மருத்துவ அறிக்கையை வெளியிட்டு, தங்களை பரிசுத்தர்களாகக் காட்டிக்கொள்ள முயன்றனர், தமிழக ஆட்சியாளர்கள். ஓ.பி.எஸ் அணியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினாலும், தலைநகர் சென்னையில் நடந்த போராட்டத்தின் மீதுதான் கவனம் குவிந்திருந்தது.

காக்கிகள் காட்டிய கரிசனம்!

‘பன்னீர் அணி நடத்தும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம்’ என்று காவல்துறைக்கு ஆளும்கட்சியில் இருந்து உத்தரவு போனது. மற்ற மாவட்டங்களைவிட ‘சென்னையில் உண்ணாவிரதம் நடக்குமா?’ என்ற சந்தேகம்தான் ஆரம்பத்தில் இருந்தே நீடித்தது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜைச் சந்தித்த ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள், உண்ணாவிரத அனுமதியை வேண்டி பழைய நீதிமன்ற உத்தரவு ஒன்றை நீட்டினார்கள். முந்தைய தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த சுரேஷ்ராஜனைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனச் சொல்லி கன்னியாகுமரியில் உண்ணாவிரதம் நடத்த அ.தி.மு.க முடிவெடுத்தது. ஆனால், தி.மு.க அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஜெயலலிதா ஆலோசனையின்பேரில் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத்தான் அந்த உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கினார்கள். அந்த நீதிமன்ற உத்தரவைத்தான் ஜார்ஜிடம் காட்டினார்கள். அதன்பிறகுதான், அனுமதி தருவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்றன. முதலில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகேதான் போராட்டம் நடத்த இடம் கேட்டார்கள். “சேப்பாக்கத்தில் நடத்தினால் குறைவாகத்தான் ஆட்களை உட்கார வைக்க முடியும். ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடத்துங்கள். அது உங்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்று போலீஸ்தான் ஐடியா கொடுத்திருக்கிறது. போலீஸ் மீது பாசத்தைக் காட்டுபவர் ஜெ. அவர் மரணத்தின் மர்மம் அவிழ்க்கப்பட வேண்டும் என்பதில் காக்கிகளுக்கும் கவலை இருந்திருக்கும்போல. அதனால்தான் அதிகமானவர்கள் உட்காரக்கூடிய ராஜரத்தினம் ஸ்டேடியத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார்கள்.

களத்தில் ஐ.டி அணி!

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இவ்வளவு ‘புரொமோஷன்’ கிடைத்ததற்கு முக்கியக் காரணமே அ.தி.மு.க-வின் ஐ.டி அணிதான். தமிழகக் கட்சிகளில் முதன்முறையாகத் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கியவர் ஜெயலலிதாதான். அவர் மறைவுக்குப் பிறகு, அந்த அணி அப்படியே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டது. உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பரப்பி, ஆதரவு திரட்ட ஐ.டி அணி முழுமையாகக் களமிறங்கியது. சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றபோது, ஸ்பாட்டிலேயே அ.தி.மு.க-வின் ஐ.டி விங் ஆட்கள் இருந்தார்கள். உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களின் பெயர்கள், பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவுசெய்தார்கள். அவர்களின் மொபைல் நம்பர்களையும் வாங்கியிருக்கிறார்கள். இதைவைத்து கட்சியினரை ஒருங்கிணைக்கும் வேலைகளையும் தொடங்கியிருக்கிறார்கள். வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கிப் பிரசாரத்தை முடுக்கிவிடவும் முடிவுசெய்திருக்கிறார்கள்.

சசிகலா மாவட்டத்தில் மவுசு இல்லை!

அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதம் நடைபெற்றபோதும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. தஞ்சாவூரும் திருவாரூரும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ள பகுதிகள் என்பதால் இந்த நிலை. புதுக்கோட்டையில் பன்னீர் அணியினருக்குச் சரியான நிர்வாகிகள் இல்லை. அத்துடன், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டம் வேறு அங்கே நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கூட்டம் குறைவாக இருந்தது.

நோட் பண்ணும் நோட்டரி பப்ளிக்!

உண்ணாவிரத ஐடியாவைப் பன்னீருக்குச் சொன்னவர் கே.பி.முனுசாமியாம். உண்ணா விரதத்துக்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என பன்னீர்செல்வமே நினைக்கவில்லை. சசிகலா அணியில் இருந்த பலரும், உண்ணாவிரதத்துக்குப் பிறகு, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தொண்டர்களாக இருந்தால் பெயர்களை மட்டும் ஐ.டி அணியினர் தங்கள் கம்ப்யூட்டர் தகவல் தொகுப்பில் பதிவுசெய்துகொள்கிறார்கள். கட்சியில் ஏதாவது பொறுப்புகளில் இருந்தால், ஓ.பி.எஸ் அணியில் இணையும்போது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் கையெழுத்துப் பெறப்படுகிறதாம். ‘‘மிரட்டி எங்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்” என்று பிறகு யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த உஷார் ஏற்பாடு.

இரட்டை இலைக்கு சீல்!

‘ஓ.பி.எஸ் அணி’ என்றுதான் மீடியா உட்பட பலரும் அழைக்கிறார்கள். ‘அ.தி.மு.க’ என்கிற பெயர் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என பன்னீர் நினைக்கிறார். அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதுதான் அவரின் தற்போதைய ஒரே இலக்கு. அதற்காகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன. ‘சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது’ எனச் சொல்லி, தேர்தல் ஆணையத்தில் பன்னீர் அணியினர் புகார் கொடுத்திருந்தனர். சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இதுபற்றி விளக்கம் கேட்டது தேர்தல் கமிஷன். சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்ட தினகரன்தான் விளக்கத்தை அனுப்பினார். அதை ஏற்றுக்கொள்ளாத தேர்தல் கமிஷன், ‘எங்களிடம் இருக்கும் தகவல்களின்படி, தினகரன் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை’ எனச் சொல்லி ‘பத்தாம் தேதிக்குள் சசிகலாவோ அல்லது உரியவரோ விளக்கம் தர வேண்டும்’ என்று கெடு விதித்தது. ‘பொது உறுப்பினர்கள் அனைவராலும் தான், பொதுச்செயலாளர் தேர்வுசெய்யப்பட வேண்டும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்சியில் இருந்தால்தான் நிர்வாகியாக முடியும்’ என்பதெல்லாம் அ.தி.மு.க-வின் சட்டவிதி. அந்த விதிப்படி, சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அவைத்தலைவரும் பொருளாளரும். அதாவது, மதுசூதனனும் பன்னீர்செல்வமும். ‘பன்னீர்செல்வம்தான் உண்மையான அ.தி.மு.க’ என்று தேர்தல் கமிஷன் அறிவித்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஒருவேளை, அப்படி நடக்காமல்போனால், இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது முடக்கிவிடுவது என்பதில் ஓ.பி.எஸ் அணி தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக தாம் நியமிக்கப்பட்ட சரியானதுதான் என்று 70 பக்கங்கள்கொண்ட விளக்கக் கடிதத்தை தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா அனுப்பியுள்ளார்.

பன்னீருக்கு, பி.ஜே.பி-யின் ஆதரவு இருக்கிறது என்பது பல சந்தர்ப்பங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. அ.தி.மு.க-வில் சசிகலா குடும்ப ஆதிக்கத்தை மத்திய அரசு விரும்பவில்லையாம். அதனால், அவர்களின் ஆதரவுடன் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள் பன்னீர் அணியினர்.

அடுத்து பொதுக்குழு!

‘சசிகலாவின் தேர்வு செல்லாது’ என தேர்தல் ஆணையம் அறிவித்தால், அவர் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது. அவைத்தலைவர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரத்துக்கு மதுசூதனன் வந்துவிடுவார். அதனால், அடுத்து பொதுக்குழுவைக் கூட்டும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலைக் கையில் எடுத்துள்ள ஓ.பி.எஸ் அணியினர், அவர்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு பேச உள்ளார்கள். ‘நீங்கள் ஏன் சசிகலாவைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற விளக்கத்துடன் அவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

மெகா மகா கூட்டங்கள்!

தமிழகத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய ஆறு இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தவும் பன்னீர் அணி திட்டமிட்டு வருகிறது. முதல் கூட்டம், சேலத்தில். ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஐந்து லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயத்திருக்கிறார்கள். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட, சூடு பிடித்திருக்கிறது அ.தி.மு.க அதிகார யுத்தம்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஜெரோம், ஸ்ரீனிவாசலு

உண்ணாவிரத மைக்கில் இருந்து...!

ஓ.பன்னீர்செல்வம்: “கட்சியையும் ஆட்சியையும் தனிப்பட்ட குடும்பம் கபளீகரம் செய்திருக்கிறது. அதனால்தான் தர்மயுத்தத்தைத் தொடங்கியிருக்கிறோம். அப்போலோவுக்குக் காலையில் செல்வோம். மாலையில் வருவோம். அம்மாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை. ‘தொடர்ந்து அம்மா சிகிச்சையில் இருக்கிறார்களே, அப்படி என்னதான் அவருக்கு நேர்ந்தது? லண்டன், அமெரிக்கா சென்று வைத்தியம் செய்லாம்’ என பலமுறை மன்றாடினேன். அவர்கள் (சசிகலா உறவினர்கள்) காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. என்னிடம் தகவல் சொன்னதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொய் சொல்கிறார். அதை அவர் வாபஸ் பெறாவிட்டால், வழக்குத் தொடர்வேன். உண்மையில், நீதி விசாரணை நடந்தால், முதல் குற்றவாளி அமைச்சர் விஜயபாஸ்கர்தான்!’’

பி.ஹெச்.பாண்டியன்: “74 நாள்கள் நடந்த சதித்திட்டத்தின் உச்சகட்டம்தான் அம்மாவின் மரணம். அந்தச் சதியை செய்தது யார் என்பது தெரியும்.

ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு தடயத்தினை விட்டுச் செல்வான். இப்போதும்கூட அங்கே போனால், நானே தடயத்தைக் கண்டுபிடித்துவிடுவேன். அம்மா இல்லம் இருக்கும் ஏரியா செல்போன் டவர் வழியாக, செப்டம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரையில் நடந்த செல்போன் உரையாடல்களை சோதித்தால் உண்மைகள் பல வெளிவரும். முக்கியமானவர்களின் ‘கால் டீட்டெயில்ஸ்’களை எடுத்துப் பார்த்தால், உலகுக்கு உண்மை தெரியவரும்.’’

டாக்டர் சேதுராமன் (அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர்): “கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களிடம், ‘அடுத்து நாங்கதான் தமிழ்நாட்டுக்கு முதல்வர்’ என சொல்லியிருக்கிறார். ‘இப்போதுதான் தேர்தல் முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகி இருக்கிறார். அதற்குள் வேறு ஒருவர் எப்படி முதல்வராக முடியும்? தேர்தலுக்குப் பல கோடிகள் செலவிடப்பட்டிருக்கிறது. இது சாத்தியமா?’ என அவரிடம் கேட்டிருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கு அவர், ‘நாங்க சி.எம் ஆக கோடி ரூபாய்கள் வேண்டாம். ஒரு தலையணை போதும்’ என சொல்லியிருக்கிறார். அப்படி அவர் சொன்னதின் அர்த்தம் செப்டம்பர் 22-ம் தேதி புரிந்தது.”

- சி.தேவராஜன்