Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 குறைந்தது!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 குறைந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 குறைந்தது!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 குறைந்தது!

புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றி வருகின்றன.

அதன்படி, கடந்த 1ஆம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.40 ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.78 காசாக அதிகரித்தது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் பெட்ரோல் விலையை நேற்று லிட்டருக்கு ரூ.2.54 காசாக குறைத்தன. இந்த விலை குறைப்பினால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.73.95ல் இருந்து ரூ.71.41 காசாக குறைந்தது.

##~~##
வரிக்கழிவையும் சேர்ந்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.2.40 காசு குறைந்து, ரூ.68.34 காசானது. இதேபோல் வரிக்கழிவையும் சேர்ந்து மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.2.52 காசு குறைந்து, ரூ.75.14 காசானது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.2.50 காசு குறைந்து, ரூ.75.84 காசானது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
டீசல் விலை லிட்டருக்கு 40 முதல் 50 காசு வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.