Published:Updated:

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Vikatan Correspondent
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டுவரவிருக்கின்ற தீர்மானங்களை குறித்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில், தி.மு.க.வைப் பொறுத்தவரையில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

##~~##
இந்த திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகிவிடும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.