Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.

 முன்பு வாடிவாசல்... தற்போது நெடுவாசல்... அடுத்து..?

! எப்போதும் தெருவாசல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்!

ஸ்ரீராமன், பெங்களூரு-32.

 தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க பி.ஜே.பி விளையாடும் விளையாட்டே, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி மோதல் என்பது சரியா?

!  என்ன விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடட்டும். தாமரை 117 தொகுதிகளில் வெற்றி பெறுமா என்பதுதான் கேள்வி. கவிழ்ப்பு அரசியல் கவிழவே செய்யும் என்பது பி.ஜே.பி-க்குத் தெரியும்.

கழுகார் பதில்கள்!

டி.சந்திரன், ஈரோடு.

 ‘சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?


! அவரை திருச்சி சிறையில் வைத்த கோபமாக இருக்கலாம்.

கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

 கருணாநிதியின் உடல்நிலை எப்படி உள்ளது?

! மிகமிக நெருக்கமானவர்களை அடையாளம் கண்டு லேசாகச் சிரிக்க முயற்சிசெய்கிறார் என்று சொல்கிறார்கள். ஏதோ சொல்ல முயலுகிறார். ஆனால், முடியவில்லையாம்!

கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

குன்ஹா, ஆச்சார்யா, நல்லம நாயுடு - கூட்டணி எப்படி?


! சேரவே இல்லை. ஆனால், வீழ்த்திவிட்டார்கள்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘தமிழகத்தைக் காப்பாற்ற ஸ்டாலினால்தான் முடியும்’ என்கிறாரே ராதாரவி?


! ‘ராதாரவியைக் காப்பாற்ற....’ என்று மாற்றி வாசிக்கவும்.

கழுகார் பதில்கள்!

பி.கம்பர் ஒப்பிலான், சென்னை-129.

 சிறைக்குச் சென்றதால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி பறிபோகுமா?


! சிறைக்குச் செல்வதால் பறிபோகாது. யாரைப்  பொதுச் செயலாளராக  வைத்துக்கொள்வது என்பது அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். கட்சிப் பதவிக்கு வரக்கூடிய நிர்வாகி அந்தக் கட்சியின் சட்டதிட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளாரா என்பதைத்தான் தேர்தல் கமிஷன் பார்க்கும். கட்சிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடியாத நிலையில், எப்படிப் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் கேள்வி. பொதுச்செயலாளர் என்பவர், அ.தி.மு.க சட்டவிதிகளின்படி அனைத்துப் பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சசிகலா, நியமிக்கப்பட்டவர்தான். இவை எல்லாம்தான் சிக்கலே!

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது’ என்கிறாரே ஜெ.தீபா?


! அது சிரமம் ஆனது அல்ல என்பதை தினமும் தீபாவே நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

கழுகார் பதில்கள்!

‘திராவிடக் கட்சிகளுக்கு இது சோதனையான காலகட்டம்’ என்று வைகோ சொல்வது பற்றி..?

! ஒரு திராவிடக் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இன்னொரு திராவிடக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. சோதனை என்று வைகோ எதை சொல்கிறார் என்பது தெரியவில்லையே!

கழுகார் பதில்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

  சரக்கு விற்பனையில் சசிகலாவின் மிடாஸ் நிறுவனம் கடந்த    14 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளியதாமே?

! மிடாஸ் கோல்டன் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மதுபான உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவக்குமார், கலியபெருமாள் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கிறார்கள். 2010-11-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 360 கோடி ரூபாய். அ.தி.மு.க அரசு 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபிறகு இரண்டே ஆண்டுகளில் அதன் வருவாய் ஆண்டுக்கு 1077 கோடி ரூபாயை எட்டியது. மற்ற மதுபான ஆலைகளிடம் இருந்து கொள்முதல் செய்ததைவிட மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகமாகக் கொள்முதல் செய்தார்கள். ‘டாஸ்மாக் கொள்முதலில் 20 முதல் 25 சதவிகிதம் மிடாஸ் ஆலையில் இருந்து மதுபானம் வாங்க வேண்டும்’ என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. மதுபான நிறுவனங்கள் ஒருசில மதுபான வகைகளைத்தான் தயாரிப்பார்கள். ஆனால் மிடாஸ் நிறுவனம் எதைத் தயாரித்தாலும் விற்க முடியும் என்ற நினைப்பில்
30 வகையான மதுபானங்களைத் தயாரித்தது. ஆண்டுக்கு ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளை இந்த நிறுவனம் தயாரித்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த அடிப்படையில் கணக்குப் போட்டால் நீங்கள் சொல்லும் கணக்கு எட்டப்பட்டு இருக்கும்.

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

 ‘தனுஷ் யாருடைய வாரிசு’ என்பதில் என்ன பிரச்னை?


! ‘தனுஷ் யாருடைய வாரிசு’ என்ற பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை அவர்கள் தீர்க்கட்டும். ஆனால், தனுஷ் தரப்பு தாக்கல் செய்த சில ஆவணங்கள் சந்தேகத்துக்குரியனவாக இருப்பதே, குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!