Published:Updated:

திமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

Vikatan Correspondent
திமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி  குற்றச்சாட்டு
திமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
திமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி  குற்றச்சாட்டு

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற நேரிடும் என தாம் விடுத்த எச்சரிக்கை குறித்து மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நேற்றையதினம் நீங்கள் மத்திய அரசு பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்; அதற்கு மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்துள்ளதா?
 
இதுவரையில் வரவில்லை. வந்தால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
 
 மத்திய அரசிடம் பல நாட்களாக இந்தப் பிரச்னை பற்றி சொல்லி வருகிறீர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை அதன் நிலையை வெளிப்படையாகச் சொல்லவில்லையே? அது எந்த அளவிற்கு உங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது?
 

##~~##
அதனால்தான் நாங்களும் எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கிறோம்.
 

மத்திய அரசின் நிலைப்பாடு உங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தத்தைத் தருகிறது?
 

மத்திய அரசு வழக்கம் போலச் செயல்படுகிறது.
 
உங்களுடைய இறுதியான எதிர்பார்ப்பு என்ன?
 
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 
மத்திய அரசிடமிருந்து பதில் வருவதற்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா?
 
 காலக்கெடு என்பது இதுபற்றி மத்திய அரசு தருகின்ற பதில்தான். அதற்கிடையே உள்ளதுதான் காலக்கெடு.
 
 டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராமல் இருப்பதால், எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கவிருக்கிறீர்கள்?
 
அதனால்தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கருணாநிதி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.