Published:Updated:

'எங்க நிலத்தை அநியாயமா அபகரிக்குது அரசு'- கே.பாலகிருஷ்ணனிடம் கண்ணீர் விட்ட விவசாயிகள்

''நாங்கள் காலங்காலமா பண்படுத்திய நிலத்தை அநியாயமா போலீஸை வைத்து அரசு அபகரித்துச் செல்கிறது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள் கண்ணீர் மல்கக் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் ஆகியோர், சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட பருத்திக்காடு, ராம்நகர், ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள், ''நாங்கள் காலங்காலமா பண்படுத்திய நிலத்தை அநியாயமா போலீஸை வைத்து அரசு அபகரித்துச் செல்கிறது'' என்று கண்ணீர் மல்கக் கூறினர். அதற்கு பாலகிருஷ்ணன், '' விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து 8 வழிச் சாலையை தடுத்து நிறுத்தலாம்'' என்று உறுதிமொழி அளித்தார்.

மேலும் அவர், ''சேலம் டு சென்னை 8 வழிச் சாலையை எதிர்த்து மக்கள் அதிக அளவு போராடுகிறார்கள். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சி கவிழும் நேரத்தில் ரோடு போட்டு கமிஷன் எடுக்கவே இந்த 8 வழிச் சாலையைப் போட முனைப்புக் காட்டுகிறார்கள். கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்றபோதும், கலெக்டர் இவர்களைச் சந்திக்கவில்லை. முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், அந்நிய நாட்டு இராணுவப் படையெடுப்பைப் போல கல் நட்டுவிட்டுச் செல்லுகிறார்கள். எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளைக் கைதுசெய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, வீட்டில் யாரும் இல்லாதபோது நிலத்தை அளக்கிறார்கள். சேலம் டு சென்னைக்கு ஏற்கெனவே 2 நான்கு வழிச்சாலைகள் இருக்கின்றன. ஒரு இரண்டு வழிச் சாலை இருக்கிறது. 4-வதாக எதற்கு 8 வழிச் சாலை. ஏற்கெனவே இருக்கும் சாலையை விரிவுபடுத்தினாலே போதுமானது. பா.ஜ.க., அ.தி.மு.க., கட்சிகளைத் தவிர, மற்ற அனைத்து கட்சிகளையும், விவசாய அமைப்புகளையும் ஒன்றிணைத்து 8 வழிச் சாலையைத் தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும். இத்திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை போலீஸை கொண்டு அடக்குகிறார்கள். தப்பு செய்கிற அரசுக்கு காவல்துறை பாதுகாப்பாகவும், தவறு செய்கிற காவல்துறைக்கு அரசு பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். இருவரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு மக்களைப் பாடாய் படுத்துகிறார்கள். 31,000 போராட்டங்கள் நடந்தும் நாங்கள் ஆட்சி நடத்திவருவதாகக் கூறுகிறார். இது, முதல்வர் பதவிக்கு அழகில்லை. பொதுமக்கள் கிளிப்பிள்ளைகள் இல்லை. அவர்களும் சிந்தித்தே இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்'' என்றார்.