Published:Updated:

`திசைதிருப்பும் செயல்!’ - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கொந்தளிக்கும் திருமாவளவன்

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிலர் மூலைச்சலவை செய்தனர் என்பது துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் திசை திருப்பும் முயற்சி" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

`திசைதிருப்பும் செயல்!’ - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கொந்தளிக்கும் திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலிக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். அந்த ஆலையை நாட்டில் எந்த இடத்திலும் அனுமதிக்கக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஜூலை 17-ம் தேதி திருவண்ணாமலையிலும் 20-ம் தேதி சேலத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பொதுமக்களின் கருத்துகளை அறிந்து அவர்களின் இசைவு பெற்ற பிறகே திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்குப் பல்வேறு நோய்கள் பரவி வருவதாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்களை எந்த அமைப்பும் மூளைச் சலவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான கோரிக்கைக்காக மக்கள் போராடிய போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் காவல் துறையும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் சேர்ந்து அவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றன" என்றார்.