Published:Updated:

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

ஜெயலலிதாவுடன் அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் நெருக்கமாவதையும் செல்வாக்குப் பெறுவதையும் சசிகலா குடும்பத்தினர் விரும்பவில்லை. விளைவு, ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் பழிவாங்கப்பட்டார்.

கஞ்சா வழக்கில் மேகநாதன் சிறைக்குள் தள்ளப்பட்டதுமே அவரின் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு போட்டார். அதில் இருந்த வாசகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘ஜெயக்குமார் குடும்பத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் உண்டாக்க என் கணவர் முயன்றார். அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் உத்தரவின் பேரில்தான் போலீஸ் அதிகாரிகள், என் கணவர் மீது கஞ்சா வைத்திருப்ப தாகப் பொய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்’ என மனுவில் சொல்லியிருந்தார்.

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜெயக்குமார் குடும்பத்துக்கு நண்பராக... உதவியாளராக... விசுவாசமான காப்பாளராக இருந்தவர் மேகநாதன். உடல்நலமில்லாத ஜெயக்குமாரால், மேகநாதன் உதவி இல்லாமல் இருக்க முடியாது. வழக்கம் போல ஜெயக்குமாருக்கு உதவிகள் செய்து வந்த மேகநாதன், 1993-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி இரவிலிருந்து திடீரென காணாமல் போனார். ‘‘மேகநாதன் எங்கே?’’ என அவரது மனைவி ரேணுகாதேவியும், ஜெயக்குமாரும் ஊர்முழுக்க தேடி, களைத்துப் போன நிலையில்தான், ‘கஞ்சா கடத்தல் வழக்கில் கைது’ என்கிற செய்தி வந்து சேர்ந்தது. ‘மேகநாதன் மீது சுமத்தப்பட்டிருப்பது வீண்பழி. அவரை விடுவிக்க வேண்டும்’ எனச் சட்டபூர்வமாக ஒருபுறம் போராடிக் கொண்டிருந்த போதும், தன் தங்கை ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்லி மேகநாதனை மீட்கவும் முயற்சிகள் எடுத்தார் ஜெயக்குமார். முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டும், ஜெயலலிதாவுடன் பேச முடியவில்லை. முதல்வருடன் அவருக்கு இணைப்பு தரப்படவில்லை. ஜெயக்குமார் நொந்துபோனாலும், எந்த நேரத்திலும் முதல்வர் வீட்டில் இருந்து தொடர்புகொள்வார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தார். போயஸ் கார்டனில் இருந்து அவருக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை; ரெட் சிக்னல்தான் விழுந்தது.

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

தி.நகரில் இருந்த ஜெயக்குமாரின் வீட்டைச் சுற்றி உளவுப்பிரிவு போலீஸ் கண்காணித்துக்

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

கொண்டிருந்தது. கைதானது மேகநாதன் என்றபோதும், ஜெயக்குமார் குடும்பத்தைப் பற்றியே பலரும் பேச ஆரம்பித்திருந்தார்கள். அதனாலோ, அல்லது ‘யாருடைய கோபத்துக்கோ(!) ஆளாகி விட்டார்கள்’ என்பதாலோ, ஜெயக்குமார் வீட்டை உளவு பார்த்தார்கள். மேகநாதன் கைதானதால், அவரின் மனைவி ரேணுகாதேவி ஜெயக்குமாரின் வீட்டில்தான் அப்போது வசித்தார் என்பதும் நோட்டமிடுவதற்குக் காரணம். கார்டனுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேச ஜெயக்குமார் முயன்றுகொண்டிருந்ததால், அவர் வீட்டு டெலிபோன் இணைப்பே துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தொலைபேசித் துறையிடம் ஜெயக்குமார் புகார் அளித்தார். வீட்டுக்கு வந்த டெலிபோன் ஊழியர் சோதனை செய்துவிட்டு, “சரி செய்ய முடியவில்லை. எக்ஸ்சேஞ்சிலேயே ஏதோ பிரச்னை” என்றார். மேகநாதன் கைதுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அதேநேரம், சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைபட்டிருந்த மேகநாதன், நடந்த சம்பவங்களைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். ‘‘பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் பாபு எனக்குத் தெரிந்தவர்தான். மார்ச் 5-ம் தேதி இரவு என்னை நட்புடன் கண்பத் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கே போனதும் அவரின் நடவடிக்கைகள் மாறின. இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் அங்கு காத்திருந்தார்கள். இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தார்கள். வெளியே போகவிடவில்லை. காலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார்கள். அப்போதுதான் என் மீது கஞ்சா கடத்தல் வழக்கு போடப்பட்டிருப்பதே தெரிந்தது. ‘பிரவுன் ஷுகர்’ கடத்தியதாக என்மேல் வழக்குப் போட்டுப் பத்து வருடங்கள் உள்ளே தள்ளுவதுதான் முதலில் திட்டமாம். ‘நீ எனக்கு நண்பன் என்பதால், கஞ்சா கேஸ் மட்டும் போட ஒப்புக்கொண்டேன்’ என இன்ஸ்பெக்டர் பாபுவே என்னிடம் சொன்னார்’’ என நடந்த விஷயங்களை மேகநாதன் சொல்ல... அது ஜெயக்குமாரின் காதுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

சசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா!’’

மேகநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு பெண் மேகநாதனிடம் ஓடிவந்தார். ‘‘முதல்வரின் அண்ணி போயஸ் கார்டனில்தான் இப்போது இருக்காங்க. அவங்களுக்கு முக்கியமான விஷயம் ஏதாவது சொல்லணும்னா என்கிட்டே சொல்லுங்க’’ என கேட்டார். ஆனால், அந்தப் பெண்ணும் போலீஸ் செட்டப் செய்த ஆள்.

தன்னை சிறையில் வந்து பார்த்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘‘சசிகலாவுக்கு என்னைப் பிடிக்காது. போயஸ் கார்டனுக்கு நான் வருவதையும் அவர் விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடராசனுடன் நான் போயஸ் கார்டனுக்குள் போனேன். உடனே ‘ஏன் மேகநாதனையெல்லாம் உள்ளே அழைத்து வருகிறீர்கள்?’ என நடராசனிடம் சசிகலா சத்தம் போட்டார். சசிகலாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாகத்தான் பேசுவேன். ஆனாலும், என் மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் ஏதாவது பாவம் செஞ்சிருந்தா... என்னைக் கடவுள் தண்டிக்கட்டும்’’ என புலம்பினார் மேகநாதன்.

மேகநாதனை வெளியில் கொண்டுவர ஜெயக்குமார் அடுத்து எடுத்த நடவடிக்கை என்ன?

(தொடரும்)