Published:Updated:

சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது (படம் )

Vikatan Correspondent
சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது (படம் )
சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது (படம் )

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு வரும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி காட்ட இருந்த நாம் தமிழர் கட்சியினர் உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரத்துக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது (படம் )

பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு இன்று மாலை 5 மணிக்கு வர உள்ளார்.

##~~##
இவரது வருகையை கண்டிக்கும் விதமாக காரைக்குடியி்ல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 24 பேரும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 10 பேரும்  கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் வருவதற்கு முன்பே அவர்களை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

- சாய் தர்மராஜ்