Published:Updated:

இலங்கை விவகாரம்: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்!

இலங்கை விவகாரம்: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்!
இலங்கை விவகாரம்: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்!
இலங்கை விவகாரம்: கருணாநிதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்!

புதுடெல்லி: இலங்கை விவகாரம் தொடர்பான  திமுகவின் கோரிக்கை குறித்து மத்திய அரசிடமிருந்து தமக்கு இன்னமும் பதில் வரவில்லை என்று அக்கட்சித் தலைவர் கூறிய நிலையில், இவிவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், போர்க் குற்றவாளிகள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை சேர்க்க வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்றும் திமுக. தலைவர் கருணாநிதி நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தமது கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடமிருந்து தம்மை யாரும் இதுவரை தொடர்புகொண்டு பேசவில்லை என்று கூறியிருந்தார்.
 

##~~##
இந்நிலையில் டெல்லியில் இனு இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயண சாமி," இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக, தமிழக மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும். தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான, முக்கியமான பிரச்னையாகும்.
எனவே, திமுக தலைவர் கருணாநிதி தனது உணர்வுகளை குறிப்பிட்டுள்ளார். இதில் உள்ள அனைத்து அம்சங்களையும் பிரதமர் மன்மோகன் சிங் நிச்சயமாக பரிசீலனை செய்வார்.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்." என்றார்.