Published:Updated:

அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க மாட்டோம்: கருணாநிதி

Vikatan Correspondent
அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க மாட்டோம்: கருணாநிதி
அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க மாட்டோம்: கருணாநிதி
அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்யாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க மாட்டோம்: கருணாநிதி

சென்னை: இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்காது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, 
"நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி இருவருக்கும் தனித் தனியாக ஒரு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறேன். இதைத் தமிழிலே கூறவேண்டுமென்றால்,"இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

நம்பக்த் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஆரம்பத்தில் இருந்தே இந்த விசயத்தில் நீங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும்,  மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே?


மத்திய அரசு சீரியசாக நான் குறிப்பிட்டு இருக்கும் இந்த திருத்தங்களோடு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம்.

பிறமாநில பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?
 

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம்.

நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?


எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால்,எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்.நீடிக்காது என்பது உறுதி.

இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவும் செய்யவில்லையே?

அதுதான் தமிழனின் தலை எழுத்து.
 

தற்போதைய சூழ் நிலையில் மத்தியில் இருந்து யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா?

யாரும் என்னோடு பேசவில்லை.

இவ்வாறு  கருணாநிதி மேலும் கூறினார்.