மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் எழுதிய கடிதம்!எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

‘‘மேகநாதனை சிறையில் அடைப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து அவருடைய அண்ணன் ஜெயக்குமாரைப் பிரித்துவிடச் சதி நடந்திருக்கிறது.’’ - ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட போது இப்படித்தான் விமர்சனம் எழுந்தது.

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

மேகநாதனை எப்படியும் சிறையிலிருந்து வெளியில் எடுத்துவிட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். போயஸ் கார்டனை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார். ஒரு கட்டத்தில் ஜெயக்குமார் வீட்டின் டெலிபோன் இணைப்பே (தொலைபேசி எண் 444987) துண்டிக்கப்பட்டது. ஆனாலும் சளைக்காமல் வெளியே போய் போனில் பேசினார். கார்டனிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். ‘‘முதல்வரின் அண்ணன் பேசுகிறேன். அவசரமான விஷயம். முதல்வரிடம் பேச வேண்டும்’’ என ஒரு முனையில் ஜெயக்குமாரின் கதறல் கேட்டும் எதிர்முனையில் பதிலே இருக்காது. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டால், ‘‘தகவலைச் சொல்கிறோம்’’ என்பார்கள். அடுத்தடுத்து பேசினால், ‘‘முதல்வரிடம் சொல்லிவிட்டோம். அவர்கள் எதுவும் சொல்லவில்லை’’ எனச் சொல்வார்கள். போயஸ் கார்டனுக்கு நேரில் போனபோதுகூட தங்கையைச் சந்திக்க முடியவில்லை. இப்போது தீபாவுக்கு ஏற்பட்ட நிலைதான் அன்றைக்கு அவரது அப்பா ஜெயக்குமாருக்கும் ஏற்பட்டது.

எல்லா முயற்சியும் அடைபட்ட நிலையில் கடைசியில் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ‘ஜெ.ஜெயக்குமார் BA, சந்தியா இல்லம், 9 சிவஞானம் ரோடு, தியாகராய நகர், சென்னை - 17’ என்ற முகவரியுடன் கூடிய தனது லெட்டர் பேடில் ஜெயக்குமார் விரிவாகக் கடிதம் ஒன்றை எழுதி அதை கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பினார். ஜெயலலிதாவை ‘அம்மு’ என்று ஜெயக்குமாரும், ஜெயக்குமாரை ‘பாப்பு’ என்று ஜெயலலிதாவும் அழைப்பார்கள். 1993-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியிட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?    

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

பிரியமுள்ள அம்மு!

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். நானும் என் குடும்பமும் பெரிய சிக்கலில் இருக்கிறோம். உன்னுடன் தொலைபேசியில் பேசுவதற்காக மூன்று வாரங்களாக முயற்சி செய்கிறேன். நடந்தவை எதுவுமே எங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் மேகநாதன் குற்றவாளி கிடையாது. அவன் அப்பாவி. அடுத்து என்ன நடக்கும் என புரியாமல் பீதியில் நாங்கள் உள்ளோம். என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நீ செவிசாய்த்து, மேகநாதனை விடுவிப்பாய் என நம்புகிறேன். எதற்கும் நான் மேகநாதனையே சார்ந்திருக்கிறேன். எனக்கு மேனேஜர், உதவியாளர், டிரைவர் எல்லாமே அவன் ஒருவன்தான். கடந்த மூன்று வாரங்களாக எனக்கு உதவ யாருமின்றி தவித்து வருகிறேன். உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன. வேறு வழில்லாமல்தான் கடைசி முயற்சியாக இந்தக் கடிதத்தை உனக்கு ஃபேக்ஸ் செய்கிறேன். என் வேண்டுகோளை நீ மதிப்பாய் என நம்புகிறேன். நன்றி!

உன் அன்புள்ள பாப்பு (ஜெயக்குமார்)

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

‘‘பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். அம்முவுடன் பேச முடியவில்லை. கடைசியாக ஒரு கடிதம் அம்முவுக்கு எழுதியிருக்கிறேன். அது அவளிடம் போய்ச் சேர்ந்தால் போதும். எங்கள் குடும்பம் இப்படி தவிப்பது தங்கைக்குத் தெரிந்தால் நிச்சயம் உதவி செய்ய ஓடோடி வருவாள்!” என தனது உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். இந்தக் கடிதம் போயஸ் கார்டனைத் தொட்டது. கிடைக்க வேண்டியவர்கள் கையில் போய் சேர்ந்தது. அவர் ஜெயலலிதா அல்ல. சசிகலா.

குடும்பத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதைக் கடிதமாக எழுதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைப்பார் ஜெயக்குமார். அந்தக் கடிதத்தை மேகநாதன்தான் கார்டனுக்கு எடுத்துப் போவார். அப்படி கடிதத்தைக் கொண்டு போனவரையே ‘காப்பாற்றுங்கள்’ என கெஞ்சும் நிலைக்கு போனது சூழல். போயஸ்

சசிகலா ஜாதகம் - 26 - “உதவ யாருமின்றி தவிக்கிறோம்!”

கார்டனுக்குள் சகஜமாக போய் வந்து கொண்டிருந்த மேகநாதனுக்கு திடீரென பிரேக் விழுந்தது. கார்டனில் வேலை பார்க்கிற யாரையாவது வெளியிடங்களில் சந்திக்க நேரிட்டால் ஜெயக்குமார் குடும்பத்தினரை பற்றிய தகவல்களை அவர்களிடம் சொல்லி, முதல்வரிடம் சேர்க்கச் சொல்லி வந்தார் மேகநாதன். இது கார்டனில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேகநாதன் கைதாவதற்கு முன்பு மீன் வளர்ப்புப் பண்ணை ஒன்றை ஆரம்பித்திருந்தார் ஜெயக்குமார். இதில் மேகநாதனை ஜெயக்குமார் சேர்த்துக் கொண்டார். மேகநாதனுக்கு மீன் பண்ணை வைப்பதற்கு எப்படி பணம் வந்தது என்கிற ரேஞ்சில் கார்டன் தரப்பு விசாரணையில் இறங்கியது. இதன் தொடர்சியாகத்தான் அவர் கைது செய்யப்பட்டார் எனப் பேச்சுகள் கிளம்பின.

ஜெயக்குமாரின் தி.நகர் வீட்டுக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுக்குமான ‘லிங்க்’கை ஏற்படுத்தும் மேகநாதனை ‘கட்’ செய்துவிட நினைத்தார்கள். அதன் எதிரொலிதான் மேகநாதன் வளைக்கப்பட்டது. இதையும் தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. இப்போது ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’யை ஆரம்பித்து அரசியலில் குதித்திருக்கும் தீபாதான் அந்தக் காரணம். அப்போது ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருந்த தீபா என்ன செய்தார்?

(தொடரும்)