Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

எஸ்.பவதாரணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

  ‘ஜெயலலிதாவின் சமாதியை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று சொல்கிறாரே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன்?


 அது நினைவகமாக இல்லாமல், யோகா மையமாக மாறிக்கொண்டு இருப்பதால் இருக்கலாம்!

அ.குணசேகரன், புவனகிரி.

 இரட்டை இலை முடக்கப்பட்டால் யாருக்கு லாபம்?


விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்

இன்றைய சூழலில், சூரியனுக்குத்தான்! 1989 தேர்தலில் இரட்டை இலை முடக்கப்பட்டு, ஜானகி அணிக்கு இரட்டைப் புறாவும், ஜெயலலிதா அணிக்குச் சேவலும் தரப்பட்டன. 14 ஆண்டுகள் கழித்து கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி-54.

 அரசியல்வாதிகளில் ஜாக்பாட் அடித்த யோகக்காரர் யார்?


 இன்றைய தேதிக்கு தினகரன்தான். அம்மா இறந்து, சின்னம்மாவும் சிறைக்குப் போய், சித்தப்பாவுக்கும் உடம்புக்குச் சரியில்லாமல் போய், இதுவரை இருந்த முகமூடியும் (ஓ.பன்னீர்) கட்சியை விட்டு வெளியேறி... எந்த இடைஞ்சலும் இல்லாமல் ராஜ்யம் கிடைத்துள்ளது தினகரனுக்கு. கஷ்டமே இல்லாமல் லட்டு கிடைத்துள்ளது. இது எவ்வளவு பெரிய ஜாக்பாட் என்பது, பத்து வருஷம் வீட்டுச் சிறைக்குள் அகப்பட்ட அவருக்குத்தான் தெரியும்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

 டெல்லி உயர்கல்வி நிலையங்களில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறக்கிறார்களே?


 படிக்கச் சென்ற இடத்தில் காட்டப்பட்ட பாகுபாடுதான் இதற்கும் காரணம். எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்துக்குச் சென்ற சரவணன்,  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குப் போன முத்துகிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் மர்மமான முறையில் இறந்தார்கள். இதற்கு முன் ரோகித் வெமுலா இறந்து போனார். மிக அடித்தட்டுக் குடும்பங்களிலிருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் இதுபோன்ற உயர்தரமான கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள். சக மாணவர்களால் கிண்டலடிக்கப்படுகிறார்கள். அங்குள்ள சில ஆசிரியர்களால் மட்டம் தட்டப்படுகிறார்கள். சாதியைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அடிமட்ட வகுப்பாக இருந்தால் குத்திக் காட்டப்படுகிறார்கள். ‘உனக்கு ஆராய்ச்சி வராது, உன்னால் இங்கெல்லாம் படிக்க முடியாது, இதெல்லாம் எங்களுக்கு மட்டும்தான் சாத்தியம்’ என்பது போன்ற குத்திக் காட்டல்கள் செய்கிறார்கள். ஆங்கிலமும் இந்தியும் மிகச் சரளமாக இல்லை என்பதற்காகவே அவமானப்படுத்தப்படும் மாணவர்கள் அதிகம். இவைதான் தற்கொலையில் போய் முடிகின்றன.

கழுகார் பதில்கள்

பொதுவாக இத்தகைய அவமானங்கள் எல்லா பெரிய கல்வி நிறுவனங்களிலும் நிகழ்கின்றன. சென்னையில் அப்படி பாகுபாடு காட்டப்பட்டால் அதனை எதிர்க்க ஒரு குழு கூடிவிடும். ஆனால், டெல்லி போன்ற இடங்களில் அப்படி எதிர்ப்புக் குழுக்கள், குரல்கள் சாத்தியம் இல்லை. மனரீதியாக, தான் அனுபவிக்கும் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ளவும் சரியான தோழமை இருக்காது. இவை அனைத்தும்

கழுகார் பதில்கள்

சேர்ந்துதான் முத்துகிருஷ்ணன் போன்றவர்களைத் தற்கொலை செய்துகொள்ள வைக்கிறது. எதன் பொருட்டும் தற்கொலை தீர்வாகாது என்பதை இந்த இளைஞர்கள் உணர வேண்டும்.

சம்பத்குமாரி, பொன்மலை.

 எது ஆபத்தானது... ‘மைனாரிட்டி’ ஆட்சியா... ‘பினாமி’ ஆட்சியா?

! ‘பினாமி’ ஆட்சிதான்! மைனாரிட்டி ஆட்சிகள் அமைவது சகஜம்தான். அவை தவிர்க்க முடியாதவை. ஆனால், பினாமி ஆட்சிகள் அமைவது நாட்டுக்கே ஆபத்து. அரசியலமைப்புச் சட்டப்படி எடுக்கும் பதவிப் பிரமாணத்துக்கே எதிரானவை.

கழுகார் பதில்கள்

அம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.

 தமிழக பட்ஜெட் பற்றி..?


 வரியும் இல்லை. சலுகையும் இல்லை. வெறும் வார்த்தைகள்தான் இருந்தன. வெறும் கையால் முழம் போட முடியாது என்பது தெரிகிறது!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக ஆர்.கே.நகரை மாற்றிக் காட்டுவேன்’ என்கிறாரே ஜெ.தீபா?

 அதிகாரம் பொருந்திய அவருடைய அத்தையே அப்படிச் செய்யவில்லை. இவரால் எப்படி முடியும்?

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘தேர்தல் முடிவுகள் ஒன்றும் மோசமாக அமையவில்லை’ என்கிறாரே ராகுல்?


 ‘அந்தந்த மாநிலங்களில் ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள்’ என்கிறார் ராகுல். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டாம். மரியாதையான வாக்குகள், சொல்லிக்கொள்வது மாதிரியான தொகுதிகளையாவது கைப்பற்றி இருக்க வேண்டாமா? ராகுல் எதற்கு கட்சி நடத்துகிறார் என்றே தெரியவில்லை!

கழுகார் பதில்கள்

மு.ரா.பாலாஜி சொர்ணகுப்பம், கோலார் தங்கவயல்.

 சங்கர மடத்தை அவமதித்த சசிகலா குடும்பத்துக்கு உதவப் போன சுப்பிரமணியன் சுவாமி பற்றி..?


 ‘பெரியவர்’ தண்டிப்பார்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

 ‘அ.தி.மு.க.வின் இரட்டை இலை மோடியின் கையில் இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறாரே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்?

 அ.தி.மு.க.வைப் பற்றியே அதிகம் கவலைப்படும் இவர், யார் கையில் இருக்கிறார்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!