Published:Updated:

20 வருடம் சிறை... கசையடிகள்... ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்குத் தண்டனை!

20 வருடம் சிறை... கசையடிகள்... ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்குத் தண்டனை!
20 வருடம் சிறை... கசையடிகள்... ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்குத் தண்டனை!

20 வருடம் சிறை... கசையடிகள்... ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்குத் தண்டனை!

ஒரு நாட்டை ஆளும் அரசை சார்ந்த ஒருவர் அந்த நாட்டில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்து அதற்கு அந்த அரசின் பிரதமரே உரிமையாளராக இருந்து அரசின் சலுகைகளைப் பெறுவார் என்றால் அது எப்படி ஜனநாயக அறமாக இருக்காதோ.. அதேபோல் ஒரு விஷயம்தான் மலேசியாவில் அரங்கேறியுள்ளது. மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் பில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. மலேசிய நாட்டின் பிரதமராக ஏப்ரல் 2009-ம் ஆண்டு முதல் மே 2018-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவர் செப்டம்பர் 2008-ம் ஆண்டு முதல் மே 2018-ம் ஆண்டு வரை நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மலேசியாவின் ஆறாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே 'மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்' என்கிற அரசுத் தொழிலகம் ஒன்றை ஆரம்பித்தார். அரசுத் துணையுடன் இயங்கக்கூடிய அந்தத் தொழிலகத்துக்கு நஜீப் ரசாக்தான் உரிமையாளர். 

இந்த தொழிலகத்தின் நோக்கம் 'உலகளாவிய பங்குதாரர்களை உருவாக்குவது, நேரடி வெளிநாட்டு முதலீடு' ஆகியவை என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் கிட்டத்தட்ட 4.5 கோடி அமெரிக்க டாலர் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் மிகப்பெரும் ஊழல் என்று சொல்லப்படும் இந்த ஊழல் வழக்கின் விசாரணைக்காக முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அரசாங்கத்தின் நிதியை கையாடல் செய்த குற்றத்தின் பேரில் 3 குற்றச்சாட்டுகளும் ஊழல் புகாராக ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. வழக்கை அட்டார்னி ஜெனரல் டாமி தாமஸ் விசாரித்தார். எந்தவிதக் குற்றச்சாட்டையும் நஜீப் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த நஜீப் ரசாக் ``என் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்" என்றார். ஜாமீனில் நஜீப் ரசாக்கை விட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தார் நீதிபதி. மேலும் நஜீப்பின் இரண்டு தூதரக பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நஜீப்பின் வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையின் பேரில் நீதிமன்றம் இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு எவ்வாறு நடக்கிறதோ அதை மட்டுமே ஊடகங்களால் காண்பிக்கமுடியும். `1எம்.டி.பி ஊழலைச் சுற்றி எந்த விவாதமோ, கருத்து பகிர்தலோ, அதன் பாதகங்களை ஊடகங்கள் விவாதிப்பதோ கூடாது என்பதுதான் அது.

ஆகஸ்ட் 2011-ம் ஆண்டு முதல் மார்ச் 2015-ம் ஆண்டு இடையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி , 1எம்.டி.பி நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து நஜீப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கசையடிகளும் தண்டனையாக வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், நஜீப்புக்கு 64 வயது ஆகின்றதால் கசையடிகள் தண்டனையாகக் கொடுக்கப்படாது என்று தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் கையாடல் செய்யப்பட்ட நிதியை விட குறைந்தது 5 மடங்கு அதிகமாக அபராதம் செலுத்தப்படவிருக்கும்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமையன்று நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக ஊழல் தடுப்புப் பிரிவினர் முன் ஆஜர்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை 8 மணியளவில் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார். வரும் வழியில் அவரது ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டி கரகோசகங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.  சென்ற ஆண்டு நஜீப்பை கோமாளி போல சித்திரித்த கேலிசித்திரத்தை வரைந்த ஃபாமி ரெஸா என்ற மலேசிய ஓவியர் கைது செய்யப்பட்டார். நஜீப்பின் கைது குறித்து பேசிய அவர் ``இப்பொழுதாவது அறம் வெல்லும் என எதிர்பார்க்கிறேன்." என்றார்.

மலேசியாவின் மிகப்பெரும் ஊழல் என்று சொல்லப்படும் 1எம்.டி.பி ஊழல் மூலம் பல பில்லியன் டாலர் பணம் மோசடி செய்யப்பட்டு பல்வேறு வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படத்தில் முதலீடு செய்வது, ஆடம்பர சொத்துகள் வாங்குவது, தனிப் படகு வாங்குவது எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து தன் மேல் வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த நஜீப் சென்ற வாரம் உள்ளூர் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் "என்னுடைய தூய்மையை நான் நிரூபித்து, வழக்கிலிருந்து விடுபடுவேன். சட்டப்படி நடக்கின்ற நல்ல ஆட்சியமைப்பின் மூலம் மட்டுமே என்னை நிரபராதி என்று நிரூபிக்கமுடியும். ஆட்சியமைப்பு எல்லோரும் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தர வேண்டும்" என்றார். 

அதேசமயம் நஜீப்பின் ஆதரவாளர்கள். இது நஜீப் மீது தற்போதுள்ள அரசு காட்டும் அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்றனர். ஜாமீனில் வெளிவந்த பின்னர் பேசிய நஜீப் ``என் மீதுள்ள அவப்பெயரை போக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மலேசிய நாட்டு மக்களுக்காக நான் 42 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். அதற்கு இதுதான் பரிசு என்றால் அதை மனதார ஏற்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு