Published:Updated:

13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது
13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது

13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது

பிரீமியம் ஸ்டோரி

னைவி, மகள் பெயர்களில் அதிக சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன... தினகரனின் கடன்கள் அடைக்கப் பட்டுள்ளன... மனைவி கடனாளி ஆகியிருக்கிறார்... என டி.டி.வி.தினகரன் தாக்கல்செய்த வேட்புமனுவில் நிறைய அதிரடி விஷயங்கள் இருக்கின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியிருக்கும் தினகரனின் சொத்து மதிப்பில் நிறைய ஆச்சர்யங்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்திருந்தார் தினகரன். அதில் தோல்வி அடைந்தபிறகு, ராஜ்ய சபா எம்.பி-யானார். அப்போது, அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலுடன் ஆர்.கே.நகர் வேட்புமனுவோடு தரப்பட்ட சொத்துப் பட்டியலை ஒப்பிட்டபோது, தினகரனின் மனைவி மற்றும் மகள் பெயர்களில் சொத்துகள் அதிகமாகியிருக்கின்றன. 

13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது

கர்நாடகா மாநிலம், சிம்மகளூரில் பி.இ படிப்பைத் தொடராமல் இடையில் நின்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார் தினகரன். தனக்கு எதிரான ஃபெரா வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி வெளியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2004-ல் தனக்கு, அசையும் சொத்துக்களாக (ரொக்கம், வங்கிக்கணக்கு உள்ளிட்டவை) 43,05,185 ரூபாய் உள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவரின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 11,45,781 ரூபாய். 2004-ம் ஆண்டில் குறிப்பிட்டிருக்கும் 41,78,648 ரூபாய் மதிப்புள்ள எல்.ஐ.சி பாலிசி மற்றும் 35,299 ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஆகியவை இப்போதைய பட்டியலில் மிஸ்ஸிங். 

மனைவியுடன் சேர்ந்து வாங்கிய வீட்டின் மதிப்பு 50,34,893 ரூபாய் என 2004-ல் சொல்லியிருந்தார். இப்போது, அதே வீட்டின் மதிப்பு 57,44,008 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். ‘சென்னையில் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் அடையாறு பகுதியில் உள்ள வீட்டின் மதிப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, வெறும் 7 லட்சம் ரூபாய்தான் உயர்ந்திருக்கிறதா’ என்ற ஆச்சர்யக் கேள்வியும் எழாமல் இல்லை. 2004-ல் தம்முடைய பெயரில் 36,47,971 ரூபாய் கடன்கள் இருந்ததாகக் கூறியிருந்தார் தினகரன். இப்போதோ, ‘கடன்கள் ஏதும் இல்லை’ எனச் சொல்லியிருக்கிறார். எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டார்போல!

2004-ல் மனைவி அனுராதா பெயரில் இருந்த அசையும் சொத்துகளின் மதிப்பு 2,62,47,854 ரூபாய். இப்போது 7,18,66,055 ரூபாய். 13 ஆண்டு காலகட்டத்தில் மனைவியின் பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 4,56,18,201.23 ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 1,048 கிராம் தங்க நகைகள் அனுராதா பெயரில் உள்ளன. இவற்றின் மதிப்பு, 13,96,107 ரூபாய். 37.17 கிராம் வைர நகைகளின் மதிப்பு, 15,02,360 ரூபாய்.

13 வருஷத்துல வீட்டின் மதிப்பு 7 லட்சம்தான் உயர்ந்திருக்காம்! - தினகரன் சொல்லும் கணக்கு இது

2004-ம் ஆண்டு, தன் மனைவியின் பெயரில் உள்ள மயிலாப்பூர் வணிகக் கட்டடம், அடையாறு வீடு (இது மட்டும் இருவர் பெயர்களிலும் பதிவு செய்யப்பட்டது) ஆகியவற்றின் மதிப்பு 62,43,808 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, தன் மனைவி பெயரில் 2,40,71,687 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளதாகக் கூறியிருக்கிறார். இப்போதைய சொத்துப்பட்டியலில் திண்டிவனம் அருகில் உள்ள பொம்மையர்பாளையம், கிராமத்தில் பண்ணை வீடு இருப்பதாக புதிதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 1,73,39,239 ரூபாய்.

2004-ம் ஆண்டில் தாக்கல்செய்த வேட்புமனுவில் மனைவி பெயரில் கடன்கள் இருப்பதாகக் குறிப்பிடவில்லை. இப்போது மனைவி பெயரில் 5,40,04,946 ரூபாய் கடன்கள் இருப்பதாகக் கூறி உள்ளார்.

மகள் பெயரில், 49,54,942 ரூபாய் டெபாசிட் தொகை இருப்பதாகக் கூறியிருக்கும் தினகரன், இவை வெவ்வேறு காலகட்டங்களில் தனித்தனித் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளன எனச் சொல்லியிருக்கிறார். மகள், மைனர் என்பதால் இந்த டெபாசிட்டின் பாதுகாவலராக (கார்டியன்) அனுராதா இருக்கிறார்.

இப்போது ஆர்.கே. நகரில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் இணைத்துள்ள அஃபிடவிட்டில், தம் பெயரில் கார் ஏதும் இல்லை என்றும், மனைவி அனுராதா பெயரில் டாடா சஃபாரி கார் இருப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு, 13,88,681 ரூபாய்.  

- கே.பாலசுப்பிரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு