Published:Updated:

யாருக்கான தலைவர் இவர்?

யாருக்கான தலைவர் இவர்?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கான தலைவர் இவர்?

அதிஷா

யாருக்கான தலைவர் இவர்?

அதிஷா

Published:Updated:
யாருக்கான தலைவர் இவர்?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கான தலைவர் இவர்?
யாருக்கான தலைவர் இவர்?

`அய்யோ இந்த ஆளா?' - உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியானதும், இந்தியா முழுவதும் எழுந்த முதல் ரியாக்‌ஷன் இதுதான். காரணம் அன்னாரின் பழைய ரெக்கார்டுகள் அப்படி. அதற்கு ஏற்ப, இந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் இருக்கின்றன... பதவியேற்ற நாள் முதல் அவர் செய்கிற கோமாளித்தனங்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்னை கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சிறுதொழில் செய்பவர்கள் எல்லோரும் வேலை பார்க்க இயலாமல் முடங்கிப்போயிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் முந்தைய சமாஜ்வாடி ஆட்சிக்கு வேட்டுவைத்த காரணிகளில் இதுவும் ஒன்று. மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பது விவசாயம்தான். அதுவும் நசிந்துகிடக்கிறது. கரும்பு விவசாயிகள் எல்லாம் உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்னையால் பன்டல்காண்ட் பகுதி முழுவதும் வறட்சியில் சிக்கித்தவிக்கிறது. அங்கு மீண்டும் தனி மாநிலக் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் பாருங்கள், யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதும் என்னென்ன விஷயங்களை ஆர்வத்தோடு செய்ய ஆரம்பித்தார் தெரியுமா?

ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலையாக `ராம் ராமாயண மியூசியம்' ஒன்றைத் திறப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதற்கு என அயோத்தியிலேயே 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி,
154 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.

மாநிலம் முழுவதும் இருக்கும் அனுமதி இல்லாத இறைச்சிக் கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார். இதனால், இறைச்சி சாப்பிடுகிற அத்தனை மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆடு, கோழி, எருமை இறைச்சி விற்றுக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் போராட்டத்தில் குதித்துள்ளனர். மிருகக் காட்சிச் சாலைகளில் இருக்கிற சிங்கம் புலிகளுக்கு எல்லாம் போதிய இறைச்சி கிடைக்காமல் பட்டினி போட்டிருக்கிறார்கள்.

யாருக்கான தலைவர் இவர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ஆன்டி ரோமியோ ஸ்குவாட்' எனப்படும் புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார் யோகி. ­`பெண்கள் பாதுகாப்புக்கு என்று அறிவிக்கப் பட்டிருக்கும் இந்தக் காவல் படையினர், பெண்களை ஈவ்டீஸிங் செய்கிறவர்கள், பாலியல் தொல்லை தருபவர்களிடமிருந்து காப்பாற்றுவார்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படையோ ஊரில் இருக்கிற காதலர்கள் எல்லோரையும் குறிவைத்து விரட்டி அடிப்பது, அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது, கணவன் மனைவி ஒன்றாக சாலைகளில் பொதுஇடங்களில் திரிந்தால்கூடப் பிடித்து விசாரிப்பது... என மோசமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்ட மூன்று காவலர்களை சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். 

இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது யோகியின் புதிய ஆட்சி. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 312 எம்.எல்.ஏ-க்களையும் விட்டுவிட்டு ஏன் ஒரு எம்.பி-யை முதலமைச்சராக பா.ஜ.க தேர்ந்தெடுத்தது? அதுவும் எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுகிற, அவர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிற ஒருவரை எப்படி நியமித்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடை யோகி ஆதித்யநாத்தின் பூர்வீகத்தில் இருக்கிறது.

கோரக்பூர்தான் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை. இங்கே யோகியின் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு கோஷம் மிகப் பிரபலமானது. `கோராக்பூர் மே ரெஹ்னா ஹே தோ... யோகி யோகி கெஹ்னா ஹே...’ (கோரக்பூரில் வாழ வேண்டும் என்றால் யோகியின் பெயரை ஜெபிக்கணும்). இப்போது அதே கோஷம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

யாருக்கான தலைவர் இவர்?

கோரக்பூரை 1998-ம் ஆண்டு தொடங்கி 19 ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கிற காவி உடை அணிந்த காட்ஃபாதர்தான் யோகி ஆதித்யநாத். அவருடைய மாஃபியாவின் ஒற்றை ஆயுதம் இந்து மதம். அதன் பேரால்தான் மக்களை எப்போதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் அச்சத்தில்வைத்திருக்கிறார் இந்த யோகி. அதன் பேரால்தான் இதுவரை ஏராளமான வன்முறை வெறியாட்டங்களை உத்தரப்பிரதேசம் முழுவதும், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

ஆதித்யநாத் இன்று நேற்று அல்ல, கடந்த 20 ஆண்டுகளாகத் தேசிய அரசியலில் முக்கியப்புள்ளி. 1998-ம் ஆண்டு தொடங்கி ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். கடைசியாக 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். யோகி ஆதித்யநாத்தின் இயற்பெயர் அஜய் சிங் பிஸ்த். 1972-ம் ஆண்டு பிறந்தவர். கோரக்பூரில் இருக்கிற கோரக்நாத் மடத்தில் ஆன்மிகப் பயிற்சிபெற்று வளர்ந்தவர்.

23 ஆண்டுகளுக்கு முன்னர் கோரக்பூரில் மாணவர்களுக்கும் ஒரு துணிக்கடைக்காரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு முதன்முதலாக மாணவர்களுக்குத் தலைமை ஏற்று களத்தில் இறங்கினார் ஆதித்யநாத். அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்த இளைஞர் இவர். காவல் துறை அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு நடத்திய அந்தப் போராட்டம் கோராக்பூர் மக்கள் மத்தியில், அஜய் சிங்கைப் பிரபலமாக்கியது. கோபக்கார இளைஞனாக அவர் வளரத் தொடங்கினார். மாணவர் போராட்டங்களில் முன்னுக்கு நின்றார். மக்கள் அஜய் சிங்கை, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மகந்த் திக்விஜய் நாத்துடன் ஒப்பிட்டுக்கொண்டனர்.

கோரக்பூரில் மிகப்பெரிய ஆன்மிகச் சக்தியாக இருந்தது கோரக்பூர் மடம்தான். அது கோபக்கார இளைஞனான அஜய் சிங்கை யோகி ஆதித்யநாத்தாக வளர்த்தெடுத்தது. அந்த மடத்தின் மடாதிபதியான அவைத்ய நாத், ஆதித்யநாத்தைத் தன் வாரிசாக உருவாக்கினார். கோராக்பூர் மடம் பல ஆண்டுகளாக அரசியலில் முக்கியச் சக்தியாக விளங்கிவந்த ஒன்று. அது முதன்முதலாக தன் ஆள் ஒருவரையே எம்.பி-யாக ஆக்க தீர்மானித்தபோது பக்கத்தில் கைக்கட்டி நின்றுகொண்டிருந்த ஆதித்யநாத்தையே வேட்பாளராக அறிவித்தது. 1998-ம் ஆண்டில் மடத்தின் ஆதரவோடு நாடாளுமன்றத் தேர்தலில் 26 வயதே ஆன ஆதித்யநாத் களமிறங்கி 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு யோகி ஆதித்யநாத் தோற்கவே இல்லை.

யாருக்கான தலைவர் இவர்?

ஆதித்யநாத் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது கோரக்பூரைத் தங்கள் பிடியில் வைத்திருந்தது இரண்டு பேர். ஒருவர் ஹரிசங்கர் திரிவேதி; இன்னொருவர் வீரேந்திர பிரதாப் சாஹி. இருவரும்தான் கோரக்பூரின் இருபெரும் சக்திகளாக இருந்தனர். அரசு டென்டர் தொடங்கி, கட்டப்பஞ்சாயத்து வரை எல்லாமே இவர்களுடைய பிடியில்தான் இருந்தன. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராகத்தான் ஆதித்யநாத் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், அந்த இருவரிடமும் இல்லாத ஓர் ஆயுதம் ஆதித்யநாத்திடம் இருந்தது. அது மதம். மதத்தைத் தன்னுடைய ஆயுதமாக மாற்றினார். கோரக்பூரின் அரசியல் முழுமையாக மதம் சார்ந்த ஒன்றாக மாறியது அப்போதுதான். இதைச் சாத்தியமாக்க உதவியது `இந்து யுவ வாகினி' என்ற அவருடைய அமைப்பு.

ஆதித்யநாத் முதல்முறையாக எம்.பி-யானதும் பசு பாதுகாப்பை வலியுறுத்தி தொடங்கிய அமைப்புதான் `இந்து யுவ வாகினி'. கிராம வளர்ச்சியும் பசு பாதுகாப்பும்தான் இந்த அமைப்பின் முக்கிய வேலைகள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு அதோடு இன்னும் பல வேலைகளில் இறங்கியது. அதில் முக்கியமானது சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினர் மீது வன்முறைகளில் ஈடுபடுவது.

பதவி ஏற்ற அடுத்த ஆண்டு, துப்பாக்கிகளை ஏந்தியபடி தன் சகாக்களோடு பஞ்ச்ருக்கியா என்ற கிராமத்தில் இருக்கிற ஓர் இஸ்லாமியச் சுடுகாட்டைக் கைப்பற்ற முடிவெடுத்துக் கிளம்பினார். அங்கே அவருக்கு முன்பாகக் காவல் துறை காத்திருந்தது. வந்த எல்லோரையும் விரட்டி அடித்தது. கோபத்தோடு அங்கிருந்து கிளம்பிய யோகியும் அவருடைய சகாக்களும், வழியில் வேறொரு விஷயத்துக்காக பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சியினரைத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் காவல் துறை அதிகாரி ஒருவர் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்காக யோகி ஆதித்யநாத் மீதும் அவருடைய `இந்து யுவ வாகினி' அமைப்பினர் மீதும் வழக்குகள் பதிவாகின. அந்த வழக்குகள் இன்னமும்கூட விசாரணையில்தான் இருக்கின்றன.

இதுவரை யோகியும் அவருடைய இந்த அமைப்பும் 50-க்கும் அதிகமான மதக் கலவரங்களை உத்தரப்பிரதேசத்தில் நிகழ்த்தியுள்ளனர். இந்தக் கலவரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் அது தொடர்பான 12 வழக்குகள் இந்து யுவ வாகினி அமைப்பினர் மற்றும் யோகி ஆதித்யநாத் மீது பதிவாகியுள்ளன. ஆனால், இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது குற்றம்சாட்டப்பட்டவரே முதலமைச்சராக ஆகிவிட்டதால், இனி அந்த வழக்குகள் எல்லாமே நீர்த்துப்போகும் என்று நிச்சயமாக நம்பலாம்.

யாருக்கான தலைவர் இவர்?

யோகி ஆதித்யநாத்தும் அவருடைய சகாக்களும் சாதாரண கிரிமினல் குற்றங்களைக்கூட மதக்கலவரங்களாக மாற்றுகிற வித்தையை அறிந்துவைத்திருந்தனர். ஓர் இந்துப் பெண்ணை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கற்பழித்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவியது. அதை அடுத்து அதை அப்படியே மதக்கலவரமாக மாற்றி, அப்பாவி இஸ்லாமியர்கள் குடியிருப்புகளில் புகுந்து சூறையாடி, 50-க்கும் அதிகமான வீடுகளை எரித்தது யோகியின் படை. இப்படிப்பட்ட மதக்கலவரங்களைத் தானே முன்னின்று தலைமைதாங்கி வழிநடத்துவதில் யோகி ஆதித்யநாத் ஒரு கில்லாடி. ஒருபக்கம் இந்த வன்முறை ஆட்டங்களால் யோகி ஆதித்யநாத் மீது எதிர்ப்புகள் கிளம்பினாலும், பெரும்பான்மை இந்துக்களிடம் ஆதரவு பெருகியது. இந்து யுவ வாகினியின் வன்முறை ஆட்டம் யோகி ஆதித்யநாத்துக்குத் தேவையான பாப்புலாரிட்டியை வாரிவழங்கியது. ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வெற்றி விகிதம் அதிகரித்தபடி இருந்தது. முதல் தேர்தலில் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இரண்டு விஷயங்களுக்காக பா.ஜ.க யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சராக ஆக்கியுள்ளது. முதலாவது... யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆக்கியதன் மூலம் அந்த மாநிலத்தின் பா.ஜ.க-வில் நிலவிவரும் அதிகாரப் போட்டியை முற்றிலுமாகக் குறைப்பது. சாதி ரீதியாக பா.ஜ.க-வின் தலைமைகள் பிளவுண்டு போட்டிப்போட்டு வருகின்றன. யோகி ஆதித்யநாத் போன்ற முரட்டுத்தனமான தலைமை இந்த அதிகாரப் போட்டியை முடக்கும் என பா.ஜ.க நம்புகிறது. இரண்டாவது... ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேசத்தின் மோடியாக மாற்றுகிற முயற்சியாகவும் இதைக் கருதலாம். `தேஷ் மேன் மோடி... ப்ரதேஷ் மேன் யோகி' என்ற முழக்கங்கள் அங்கே முன்னெடுக்கப் படுகின்றன. பிறபடுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில், யோகி ஆதித்யநாத்தை ஒரு ரட்சகராக, ராபின்ஹுட்டாக பா.ஜ.க முன்வைக்க விரும்புகிறது. அவர்களுடைய வாக்குகள்தான் பா.ஜ.க-வுக்கு உ.பி தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்தன.

உத்தரப்பிரதேசத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக, ஒரு புதிய இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கிறது பா.ஜ.க. அப்படிப்பட்ட ஒன்றை யோகி போன்ற ஒரு மதவாதியால் மட்டும்தான் சாத்தியப்படுத்த முடியும் என நம்புகிறது. அதனால்தான் இந்தப் புதிய முதலமைச்சர், `மாட்டு இறைச்சியை ஒழிக்கிறேன்’, `காதலர்களை அழிக்கிறேன்’ எனப் புதிய புதிய திட்டங்களோடு புறப்பட்டிருக்கிறார். `சூரிய நமஸ்காரம் செய்ய விருப்பம் இல்லை என்றால், நாட்டை விட்டே ஓடுங்கள்’ என அறிக்கைவிட்ட ஆள் ஆச்சே!

சமீபத்தில் உ.பி-யைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், `மாட்டு இறைச்சி சாப்பிடுகிறவர்களை மட்டும் அல்ல, மாட்டைப் பற்றி தவறாகப் பேசினாலே அவர்களுடைய முட்டியை உடைத்துவிடுவேன்' என வீர உரையை நிகழ்த்தியுள்ளார். முட்டி சிலிர்க்கிறது. நல்லவேளையாக நாம் வாழ்வது தமிழ்நாட்டில்!

யாருக்கான தலைவர் இவர்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism