Published:Updated:

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்
பிரீமியம் ஸ்டோரி
இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

படங்கள் : ப.சரவணகுமார்

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்
பிரீமியம் ஸ்டோரி
இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகச் சுவர்களில், ‘சேது சமுத்திரத் திட்டம் என்னவானது?’, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ போன்ற முழக்கங்கள் நிறைந்திருந்தன. முக்கியமான திட்டங்கள் எல்லாம் வட மாநிலங்களுக்கே போகின்றன; வட மாநிலங்களே வளர்ச்சியடைகின்றன; தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற முழக்கங்கள் வீதிக்கு வீதி ஒலித்தன.

இப்போது, தாமிரபரணி, கூடங்குளம், கெய்ல், நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், இணையம் துறைமுகம் திட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் ஓய்வு ஒழிச்சலில்லாமல் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவை ஒருபுறமிருக்க, ‘தென் மாநிலங்கள் அசுர வளர்ச்சி கண்டுவிட்டன. வட மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியைச் சரிசெய்யாவிட்டால், விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்ற கருத்தோடு ஓர் ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசத்தையும் ஒப்பிட்டு ‘The paradox of India’s North south Divide’ என்ற நூலை கலா சீதாராமன், ஸ்ரீதர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் உண்மை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்து வேலை தேடித் தென்னகம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள், செய்ய விரும்பாத எந்த வேலையையும் குறைவான கூலிக்குச் செய்கிறார்கள். எந்த வசதியும் இல்லாத மாட்டுத் தொழுவங்கள் போலிருக்கும் குடியிருப்புகளில் இடித்து நெரித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

கடந்த இருபது ஆண்டுகளில் தென் மாநிலங்களின் வளர்ச்சி, முழுவேகம் பெற்றுள்ளது. தமிழகம் உச்சக்கட்ட வளர்ச்சி பெற்ற மாநிலமாகக் கருதப்படத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில்தான்,  நகரங்களில் வணிகமும் தொழில்களும் கொழிக்கின்றன. மிகச் சிறந்த மருத்துவ வசதிகளுக்கும் கல்விக்கும் தமிழக நகரங்கள் மையங்களாக விளங்குகின்றன.

தமிழ் மாநில செல்வத்தின் பெரும்பகுதியை இழைத்து உருவாக்கிய நெடுஞ்சாலைகளில், இரவும் பகலும் சரக்கு லாரிகள் முடிவில்லாத வரிசைகளில் பறந்துகொண்டிருக்கின்றன. ஒண்டுக் குடித்தனங்களில் வாழ்ந்த மத்தியதர வர்க்கத்துக்கு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடும் காரும் சாத்தியமாகி இருக்கின்றன. 

‘உன் காருக்கோ, இருசக்கர வாகனத்துக்கோ பெட்ரோல் வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்துக்கு வளைகுடாவில் இருந்து இறக்குமதி செய்வது?’ என்று கேட்கிறது அரசு. ‘பழையபடி முள்ளு வெட்டி அடுப்பெரிக்க முடியுமா? நெடுவாசல் வேண்டுமல்லவா?’ என்று நமக்குப் புரியவைக்கக் கடுமையாக முயல்கிறார்கள் அரசியல்வாதிகள். ‘உனக்காகத்தானே எல்லாம்’ என்று சினேகபாவத்துடன் பேசுகிறார்கள்.  ‘மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியும்? பத்து மணி நேர மின்வெட்டில் எப்படித் துடித்துப்போய்விட்டீர்கள். எனவே, கூடங்குளம் வேண்டுமல்லவா? மின்சாரமும் பெட்ரோலும் இல்லாமல் வளர்ச்சி எப்படி சாத்தியம்?’

அவர்களது இத்தகைய கேள்விகளில் ஏதோ நியாயம் இருப்பதுபோலத் தெரிகிறது. ‘தொழிற்சாலைகள் நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்றார் நேரு. ‘தொழில்கள் வேண்டும்.... வேண்டும்!’ என்று சொல்லிவிட்டு, அவை வரும்போது தவிர்க்க நினைப்பது நியாயமா?

ஆனால், நம்மிடமும் சில கேள்விகள் இருக்கின்றன. அணுமின் நிலையம், அனல் மின் நிலையம் கட்டி மின்சாரம் தயாரிப்பது இருக்கட்டும். இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் மின்சாரம் யாருக்குப் பயன்படுகிறது? இதுவரை அடைந்த வளர்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன? விடை காண இந்த  வளர்ச்சிக் கதையின்  பூர்வோத்திரத்தைக் காண்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்


ண்மைக்கால வரலாற்றில், ஒருபோதும் தமிழகம், எந்த ஒரு  வட மாநிலத்தையும்விட பின்தங்கி இருந்ததில்லை.

இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருந்தவை மூன்று பகுதிகள். அவை, பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகியவை (ரங்கூனையும் கராச்சியையும் விட்டுவிடலாம்).   

ஆங்கிலேயர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட 200 ஆண்டுக்கால அனுபவம்பெற்ற அரசுத் துறைகள், அதிகார வர்க்கம், வலிமை வாய்ந்த காவல் துறை, போக்குவரத்து வசதிகள், கல்வியறிவு பெற்ற மக்கள், கடற்கரை, துறைமுகங்கள் என    வளர்ச்சிக்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற  சூழல் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாகத்தான், விடுதலைக்குப் பிறகான அடுத்தடுத்த ஆண்டுகளில், ஏராளமான அரசுத் துறை நிறுவனங்கள் இங்கே வந்து குவிந்தன. ஒருபுறம் தொழில் வளம் பெருகினாலும்,   இன்னொருபுறம் பஞ்சமும் கொள்ளை நோய்களும் கொந்தளிப்பான சமூக நிலைமைகளும் அறுபதுகள் முழுவதும் நீடித்தன. எலிக்கறி, சப்பாத்திக் கள்ளியைச் சாப்பிட்டது போன்ற கதைகளை இன்னும் பெரியவர்களிடம் நாம் கேட்கலாம். உத்தேசமாக, 1965-க்குப் பின்னர் தொடங்கிய பசுமைப் புரட்சியும் புதிதாக உருவான நீர்ப்பாசனத் திட்டங்களும் இந்த நெருக்கடியைக் கொஞ்சம் குறைத்தன.

ரேஷன் கடைகளில் நீண்ட வரிசைகள், கட்டுமானப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு என நிலைமை இருந்தாலும், முந்தைய நெருக்கடிகளின் உக்கிரம்  பத்துப் பதினைந்து ஆண்டுக்காலத்தில் மெள்ள மெள்ளத் தணிந்து வந்தது. அரிசி கிடைத்தது. வரிசையில் நின்றால் மண்ணெண்ணெய், சர்க்கரை கிடைத்தது. பென்ஷன் கிடைத்தது. இனி, எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருந்த காலத்தில்தான், எதிர்பாராத இடத்திலிருந்து பிரச்னை ‘தொடங்கியதே தெரியாமல்’ தொடங்கியது.

1980-களின் இறுதியிலும், 1990-களின் தொடக்கத்திலும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருந்து முதல் மக்கள்அலை புறப்பட்டது. கிராமங்களில் இருந்து சிறுவிவசாயிகளும் விவசாயக் கூலிகளும் படை படையாகக் கிளம்பிவந்து, கோவை போன்ற இரண்டாம் தர நகரங்களின் பிளாட்ஃபாரங்களில் அடைக்கலமானார்கள். குழந்தை குட்டிகள், கைகளில் கடப்பாரை, மண்வெட்டி போன்ற உழைப்புக் கருவிகள், பைகளில் புகைப்படங்கள் என்று வித்தியாசமாகத் தெரிந்த இவர்களைப் பார்த்து, நகரவாசிகள் வியந்துபோனார்கள். அதுவரை பிளாட்ஃபாரங்களில் வாழ்பவர்கள் பிச்சைக்காரர்கள் என்ற எண்ணம்தான் சிறுநகர மக்களிடையே இருந்தது. நில உடைமையாளர்கள், கம்பீரமும் வலிமையும் மிக்கவர்கள், சுயமரியாதை உள்ளவர்கள் நடைபாதைகளில் வாழ்வது ஆச்சர்யமளித்தது.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

எரிச் மரியா ரிமார்க் எழுதிய ‘ஃப்ளாட்ஸம்’ (Flotsam) என்ற நாவல், நாஜிகளால் விரட்டப்பட்ட யூதர்கள்  நாடு நாடாக அலைந்து திரிவதைப் பற்றியது. அதைப் போன்றிருந்தது இவர்கள் கதை. யாரும் விரட்டவில்லை; ஆனாலும், இவர்கள் அகதிகள்தாம். ஒரு மழை வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. பஞ்சங்கள் தமிழகத்துக்குப் புதிதா என்ன?

ஆனால், நிலைமை சரியாகவில்லை. அடுத்த அலை தென்மாவட்டங்களில் இருந்து கிளம்பியது. மேம்பாலங்கள், சாலையோரங்கள், ரயில்பாதைகள் என்று கிடைத்த இடங்களில் எல்லாம் மக்கள் வந்து குவிந்தனர். புதுப்புதுச் சேரிகள் உருவாகின.    கழுத்தளவு உயரமுள்ள குடிசைகளைக் கொண்ட சேரி திடீரென்று உருவாவதும் காணாமல்போவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. எல்லோரிடமும் ஒரே பதில்தான் இருந்தது. ‘மழை இல்லை; விவசாயம் பொய்த்துவிட்டது.’ இவ்வாறு நகரம் நகரமாக அலைந்து திரியும் மக்கள் ஒரு தனிச் சமூகமாகவே ஆகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒவ்வொரு நகரமாக அலைந்து திரிந்து இறுதியாக, சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களுக்குப் போய்ச் சேர்ந்தனர்.

பசுமைப் புரட்சி, தமிழகத்தில் 25 ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆறுகளிலும் பள்ளங்களிலும் நீர்வரத்து குறைந்துகொண்டே வந்தது. வரைமுறை இன்றி உறிஞ்சப்பட்ட கிணறுகளும் ஏரிகளும் வற்றிப்போயின. குளங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கருவேல மரங்கள் நடப்பட்டு, அவை மேடுதட்டிப் போயின. மரங்கள் வளர்ந்திருந்த பகுதிகள் வனத்துறையின் பாதுகாப்பில் இருந்ததால், அந்த இடங்களைத் தூர் எடுக்க முடியாமல் போனது. குளங்களின் நீர் பிடிப்புப் பகுதி மூன்றில் ஒன்றாகச் சுருங்கியது. எனவே, அதை நம்பியிருந்த ஏரிப் பாசனமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வானம்பார்த்த பூமியில் எளிமையாக, அமைதியாக நடந்துவந்த விவசாயம் சாத்தியமில்லாமல் போனது.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

சோளத்தட்டுகூடக் கிடைக்காத வறட்சி அடுத்தடுத்து வந்தது.

தூங்கி வழியும் அமைதியான சிறு நகரங்கள், கடுமையான உழைப்பின் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கைகொண்டிருந்த நடுத்தர வர்க்கம், தொழிலாளர்கள், அதே நேரம் அனைத்து நம்பிக்கையையும் இழந்து ஊரைவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்த விவசாயிகள், தரிசாகி வந்த மேட்டு நிலங்கள்... இந்தியாவில் தாராளமயமாக்கல் தொடங்கிய காலகட்டத்தில், தமிழ்நாடு இப்படித்தான்  ‘உரு’மாறியது.

1991 -ம் ஆண்டில் நரசிம்மராவ் அரசு, அந்நிய நாட்டுக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் கடும் நெருக்கடியைச் சந்தித்தது.

ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகியவற்றின் உதவியை நாடியது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏழை நாடுகளைக் காப்பதற்கு என்றே உருவெடுத்த இந்த இரு அமைப்புகளும் ஓடோடி வந்தன. ஒரு சிறிய நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டது. தங்களின்  ‘ஆளான’ மன்மோகன் சிங்கை இந்தியாவின் நிதியமைச்சராக உட்காரவைக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய நிதியமைச்சரான மன்மோகன் சிங்கின் முன்முயற்சியோடு, ‘Structual Adjustment Process (SAP)’ - அதாவது, நாட்டின் அடிக்கட்டுமானத்தை மாற்றியமைக்கும் பணி தொடங்கியது. 

அடிக்கட்டுமானத்தை மாற்றுவது என்றால் எப்படி? முதலாவது, தனியார் மயம். கொஞ்சம் கொஞ்சமாக அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது.  இரண்டாவது, நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது.
இந்த நோக்கங்களைச் செயல்படுத்து வதற்காக,  மாநிலங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.

1. சீர்திருத்தங்களைச் செயல்படுத்த  முன்னணி மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

2. அடுத்த நிலையில், ஹரியானா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இருந்தன.

3. பின்தங்கியவை என்று, அஸ்ஸாம், பீகார், கேரளா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வகைப்படுத்தப்பட்டன.

நான்கு மாநிலங்கள் முன்னணி மாநிலங்கள் என்றாலும், இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் தமிழகமும் ஆந்திராவும் மற்ற இரண்டு மாநிலங்களையும்விட முன்னணியில் நின்றன.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

1998-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 72,345 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்து குவிந்தது. ஃபோர்டு, மிட்சுபிஷி, ஹூண்டாய் போன்ற பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வந்து இறங்கின. கூடங்குளமும் நெடுவாசலும் ஒரு துளிதான். அதற்கு முன்னரே தமிழகத்தின் மிகச்செழிப்பான கடற்கரைப் பகுதிகளின் மீது கடும் தாக்குதல் தொடங்கிவிட்டன. எண்ணூர், மணலி பகுதியைச் சுற்றி மட்டும் 14 பெரும் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. இவை பெரும்பாலும் பெட்ரோ கெமிக்கல்ஸ், மருந்துகள், உரம்,  வண்ணங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பவை.     எண்ணூர் அனல்மின் நிலையமும், வடசென்னை அனல்மின் நிலையமும் கட்டப்பட்டன. இவை மொத்தம் 488.02 MLD  கழிவு நீரைக் கடலில் கொட்டுகின்றன. இதில் 226 MLD மட்டுமே சுத்திகரிக்கப் பட்டதாகும். கடலூர் சிப்காட்டில் பல கெமிக்கல் தொழிற்சாலைகள் உருவாகி, கடலையும் சுற்றிலும் உள்ள நிலத்தையும் மாசுபடுத்தி வருகின்றன. தஞ்சையில் ரீஃபைனரிகள், புரோமைடு எக்ஸ்ட்ராக்‌ஷன் பிளான்ட் மற்றும் கெமிக்கல் ஆலைகள், ராமநாதபுரத்தில் மக்னீஷியல் குளோரைடு சொல்யூஷன் உற்பத்தி செய்யும் ஆலை, தூத்துக்குடியில் அலுமினியம் ஃபுளோரைடு, யூரியா, அமோனியம் குளோரைடு, காஸ்டிக் சோடா ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகள் என உருவாகிக்கொண்டே வந்தன. அவற்றின் மாசுகள் பெருகிக்கொண்டே வந்தன; வருகின்றன. நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள நன்னிலம் அனல்மின் நிலையம், விம்கோ புரோமைட் எடுக்கும் ஆலை, மேட்டூர் கெமிக்கல் ஆலை, இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில் ஆகியவை தினமும் 14,000 லிட்டர் கழிவு நீரைக் கடலில் விடுகின்றன. இவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர, புதிதாக அமைக்கப்பட்ட சிறிய துறைமுகங்கள், வளர்ச்சியடைந்த பழைய துறைமுகங்கள் காரணமாக கடல் அரிப்பும், அலை ஏற்ற இறக்கத்தின் காரணமாக ஏற்படும் தீவுத்திட்டுகள் அழிவும், வளர்ச்சியின் விளைவாக நமக்கு கிடைத்துள்ளன. உள்நாட்டு நீர்வழிகள் ஏறக்குறைய நாசமாகிவிட்டன. தொடர்ந்து நீர் எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருகிறது.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்பாலாற்றங்கரைகளிலும் திண்டுக்கல்லிலும் மேற்கு மாவட்டங்களிலும் தோல் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் எலெக்ட்ரோ பிளேட்டிங் கம்பெனிகள் போன்றவை சர்வநாசத்தை ஏற்படுத்தின. டாலர் சிட்டி, மாபெரும் அமில அணையான ஒரத்துப்பாளையம் அணையை உருவாக்கியது. பெரும்பாலான நகரங்களில் இன்று நிலத்தடி நீர் மாசுபட்டுப்போய் குடிக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவக்கூட லாயக்கற்றதாக மாறிவிட்டது. கிராமப்புறங்களில், ஐம்பது அறுபதடி ஆழத்தில் கிடைத்துவந்த தண்ணீர், இப்போது ஆயிரம் அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை.

நிலத்தின் மீது விவசாயிகள் உறவு கொண்டாடினாலும் தரைக்குக் கீழே கடும் போர் நடந்துவருகிறது. யார் அதிக ஆழம் துளைக்கிறார்களோ, அவர்களே தங்கத்தை விட மதிப்பு வாய்ந்த நீரை அடைய முடியும்.

தமிழகத்தின் மேற்கு எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிலைமையும் மோசம்தான். நூறு ஆண்டுகளாகவே தேயிலை, காபி, ரப்பர், தேக்குத் தோட்டங்களுக்காகவும் அணைகள், சுரங்கங்களுக்காகவும் பெரும் பெரும் காடுகளும் புல்வெளிகளும் சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டுவருகின்றன.

கூடலூர் தாலுகா, ‘தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இது, சுதந்திரத்துக்கு முன்னர் நிலம்பூர் கோவிலகம் என்ற ஜமீனுக்குச் சொந்தமாக இருந்தது. 1,00,000 ஏக்கர் அற்புதமான பசுமை மாறாக் காடுகளை பெரும் தேயிலை நிறுவனங்களுக்கு அந்த ஜமீன் குத்தகைக்கு விட்டது. அப்போது அதில் 30,000 ஏக்கரில் பயிரிடப்பட்டது; 70,000 ஏக்கரில் காடுகள் இருந்தன. இப்போது 10, 000 ஏக்கரில் மட்டுமே காடுகள் உள்ளன. மீதியை இந்தத் தேயிலை நிறுவனங்கள் விழுங்கிவிட்டன. கேரளாவின் வயநாட்டிலும் கர்நாடகாவின் குடகு மலையிலும்கூட இதே நிலைதான். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடழிப்புக்கு, இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான்.

எனவே, என்ன நடந்தது என்றால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பாய்ந்தோடி வந்துகொண்டிருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஓடைகள் வறண்டுவிட்டன. நொய்யல், மணிமுத்தா நதி போன்ற பல ஆறுகள் இப்போது ஏறக்குறைய வறண்டுவிட்டன. சங்கனூர்ப் பள்ளம் போன்ற பல பள்ளங்களில் தண்ணீரே வருவதில்லை. சிறுவயதில் குளித்து விளையாடிய பன்னிமடை நீர்வீழ்ச்சி, மாங்கரை நீர்வீழ்ச்சி, மதுக்கரை ஓடைகள் எல்லாம் இப்போது இருந்த இடமே தெரியவில்லை. காவிரியில் நீர் குறைந்துபோனதற்கு இவை எல்லாமே காரணம். வருகின்ற நீரையும் இந்த ஆலைகளும் பெரும் நகரங்களும் குடித்துவிட்டு விவசாயிகளை மரணக்குழியில் தள்ளிவருகின்றன.

காவிரி நீருக்காக நாம் கர்நாடகாவுடன் உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும்போது, இந்த வில்லன்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். தேயிலைத் தோட்டங்களும், சுரங்கங்களும் அந்நியச் செலாவணியை ஈட்டிவருகின்றன. அணைகளும் பெரும் மடங்களும் கீழே உள்ள பெருநகரங்களுக்கு மின்சாரமும் தண்ணீரும் ஆன்மிகமும் வழங்கி வருகின்றன. நமது ஆறுகளில் இரவு பகலாக ஆயிரக் கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆற்றுப்படுகைகளில் மிச்சமீதி உள்ள ஊற்றுகளும் வறண்டுவருகின்றன.

போர்க்குணமிக்க சுற்றுச்சூழல்வாதிகள், ஏராளமான புள்ளிவிவரங்களுடன் நம்மைப் பீதியடையவைக்கிறார்கள். ‘காவிரியில் இந்த வேகத்தில் மணல் அள்ளப்பட்டால், தமிழ்நாடு விரைவில் பாலைவனமாகிவிடும்’ என்று சரியாகவே எச்சரிக்கிறார்கள்.
சூற்றுச்சூழல் ஆர்வம்கொண்ட நண்பர்கள், கோவையில் கூட்டங்களில் பேசும்போது, “நாளையிலிருந்து சிறுவாணித் தண்ணீர் வரவில்லை என்றால்...” என்று கேள்வியை எழுப்பிவிட்டு ஓர் இடைவெளி கொடுப்பார்கள். கூட்டத்தில் மயான அமைதி நிலவும். கோவைவாசிகள் நினைத்துப் பார்க்கவும் நடுங்கும் சூழல் இது. காடுகள் அழிக்கப்பட்டால், விலங்குகள் கொல்லப்பட்டால், சிறுவாணி வற்றிவிடும். திருப்பூருக்கு அப்பால் சராசரி தமிழன் குடிக்கும் சப்பைத் தண்ணீரையே குடிக்க வேண்டி வரும் என்பது கோவைவாழ் மக்களுக்கு கூடங்குளத்தைவிட பீதியூட்டக்கூடியது. 

சுற்றுச்சூழல்வாதிகள் சொல்வது உண்மைதான். ஆனால், அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே. பிரச்னை, சொல்லாமல் விட்டதில்தான் இருக்கிறது. மணல் மாஃபியாவைத் தடுத்து நிறுத்த வேண்டும்; ஆறுகளைக் காக்க வேண்டும்; சரிதான். ஆனால், யாருக்காக மணல் அள்ளப்படுகிறது? சுரங்கங்கள் வெட்டி காடுகள் அழிக்கப்படுவது யாருக்காக? மலைகளை மொட்டை அடித்து தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள் போடுவது யாருக்காக? டஸ்ட் டீ குடிக்கும் நமக்காகவா அல்லது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகவா?

முழுவேகத்தில் நடந்துவரும் நகரமயத்தைக் கட்டுப்படுத்தாமல் ஆறுகளில் மணல் அள்ளுவதை, மணல் கொள்ளையை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? மக்களை எல்லாம் நகரங்களில் கொண்டுவந்து குவித்துவிட்டு, மீதியுள்ள பகுதிகளை எல்லாம் கனிமங்களுக்காகப் புரட்டிப்போடும் திட்டத்துடன் இருக்கும் அரசைக் கட்டுப்படுத்தாமல், மணல் கொள்ளையை எப்படி நிறுத்த முடியும்?

அணுமின்நிலையமாக இருந்தாலும், காவிரி மணலாக இருந்தாலும், ஹைட்ரோ கார்பனாக இருந்தாலும் அது நமக்காக எடுக்கப்படுவது இல்லை. சந்தைக்காகவே எடுக்கப்படுகிறது. பெருநகரங்கள் உலகமயமாக்கலுக்கானவை. அணுசக்திக்குப் பதில் சூரியசக்தி, காற்றாலை, ஆற்று மணலுக்குப் பதில் பிளை ஆஷ் என்பதெல்லாம் தொழில்நுட்பத் தீர்வுகள். சூரியசக்தியாக இருந்தாலும், அது யாருக்குப் பயன்படப்போகிறது என்ற கேள்வி வருகிறது. நமக்கு என்ன தேவையோ, அதை ஒட்டியே உற்பத்தி இருக்க வேண்டும். மிக அடிப்படையான கேள்வி, இந்த நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களும் மலைகளில் விளையும் தேயிலையும் நமது மக்களுக்கானவையா? இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

எனவே, எங்கிருந்தோ ஒரு நிறுவனம் இங்கே வந்து உற்பத்தி செய்கிறது. இங்கே குறைந்த கூலிக்கு தொழிலாளர்களும் நீரும் அரசுச் சலுகைகளும் கிடைக்கும் என்று வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எங்கோ உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்கிறது. இவற்றுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் கணிசமான அளவை இவை உறிஞ்சிவிடுகின்றன.  ‘அதிகரிக்கும் மின்தேவையைச் சரிகட்ட அணுமின் நிலையம் தேவை’ என்கிறது அரசு. முதலீடு, வளர்ச்சிக்கு வித்திடுகிறது. வளர்ச்சிக்கு மின்சாரமும் சுரங்கங்களும் தேவை என்பதை மறுக்க முடியாத வாதமாக முன்வைக்கிறது.

2014-2015 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஒரு மனிதர் சராசரியாக ஆண்டுக்கு 1,000 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார். சீனாவில் ஒருவர் 4,000 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார். அதேநேரம், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் ஒரு நபருக்கு 15,000 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் குறைந்த அளவையே மக்கள் பயன்படுத்துகின்றனர். பெரும் பகுதி பெரும் ஆலைகளுக்கும் வணிகக்கூடங்களுக்குமே வழங்கப்படுகிறது. எனவே, அணுமின் நிலையமாக இருந்தாலும் சரி; வேறு எந்தவிதமான மின்சாரமாக இருந்தாலும் சரி; அதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்கள் இந்தப் பெரும் தொழில் நிறுவனங்கள்தாம்.

‘ஏன் அணுமின் நிலையம்?’ என்பதற்கு, ஒரு சுவாரஸ்யமான பதில் கிடைக்கிறது. புவி வெப்பமடைவதைத் தடுக்க, ஆலைகளில் கார்பன் டை ஆக்ஸைடு  உற்பத்தியாவதைத் தடுக்க அல்லது குறைக்க வேண்டுமாம். கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றாத தொழில்நுட்பமே தூய்மையான தொழில் நுட்பம் என்று கருதப்படுகிறதாம். அணுஉலைகளில் அணுவைப் பிளக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு உருவாவதில்லை. எனவே, அது இயற்கைக்கு உகந்த தொழில்நுட்பம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது; சிறப்பு.

ஆனால், அணுவைப் பிளக்கும்போது கதிர்வீச்சு உருவாவதாகச் சொல்கிறார்களே? அதனால், கார்பன் டை ஆக்ஸைடைவிட அதிக பிரச்னைகள் உருவாவதாகச் சொல்கிறார்களே? கார்பன் டை ஆக்ஸைடுக்கு மார்க்கெட் இருக்கிறது. அதைக் குறைப்பதன் மூலம் சலுகைகளும் பணமும் பெறலாம். கதிர் வீச்சைக் குறைக்க, சந்தை ஏற்படும்போது அதைக் கவனிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் நம்மிடம் சொல்லக்கூடும். எனவே, கார்பன் டை ஆக்ஸைடுக்குப் பதில் கதிர்வீச்சையும், நீருக்குப் பதில் பெட்ரோலியப் பொருட்களையும் அவர்கள் நமக்குத் தந்து, அது வளர்ச்சி என்று புரியவைக்கக்கூடும்.

இன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்

சரி, நாம் இப்போது கட்டுரை தொடங்கிய இடத்துக்கு வருவோம். விவசாயம் வீழ்ச்சி அடைந்தது; ஆனால், தொழில்கள் பல மடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டன. எனவே, நடைபாதைகளில் அடைக்கலமான மக்கள் என்னவானார்கள்? அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நன்றாக இயங்கிவந்த பல ஆலைகள் மூடப்பட்டன. அதாவது, ஒவ்வோர் ஆலையும் மூன்றாக நான்காக உடைக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். புதிதாக உருவான மில்களில், செத்துப்போன கிராமப்புறங்களில் இருந்து 16, 17 வயது பெண்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். டெக்ஸ்டைல் பள்ளத்தாக்கில், உற்பத்தியின் மையம் மந்தை மந்தையாக அடைத்து வைக்கப்பட்டு, அற்பக் கூலிக்கு இரவு பகலாக வேலை வாங்கப்படும் இந்தச் சிறுபெண்களின் நிலை சொல்லுக்குள் அடங்காதது. இப்படி ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு தொழில்; ஒவ்வொரு துயரக் கதை.

உரிமைகள் பெற்ற தொழிலாளர்களின் இடத்தில் இன்று இந்த அப்பாவிப் பெண்கள். இவர்களுக்கும் அதிக செலவு ஆகிறதென்று பீகாரிகள்... இப்போது அஸ்ஸாம் தொழிலாளர்களுக்கு இன்னும் குறைந்த கூலி கொடுத்தால் போதும் என்று தெரிய வந்திருக்கிறது. எத்தியோப்பியாவில் இருந்தும் சோமாலியாவிலிருந்தும் ஆட்களைக் கொண்டுவந்தால், கூலியும்கூட கொடுக்க வேண்டியதில்லை என்று இந்த நிர்வாகங்கள் முடிவு செய்தால், நாம் நமது தெருக்களில் நைஜீரியர்களோடு சோமாலியர்கள், எத்தியோப்பியர்களின் முகங்களையும் பார்க்கலாம்.

மத்தியதர வர்க்கம் தனது வாழ்க்கையைக் காத்துக்கொள்ள உக்கிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறது. அது, இந்தப் போராட்டத்தில் வென்றே தீர வேண்டும். ஏனென்றால், திரும்பிப் போகக் கிராமங்கள் இல்லை. குடும்பத் தொழில்கள் இல்லை. எனவே, காலை மூன்று மணிக்கு பள்ளி விண்ணப்பம் வாங்குவதற்காக குடும்பத் தலைவர்கள் வரிசையில் நிற்கின்றனர். ஒவ்வொரு குழந்தையையும் சகலகலா வல்லவளாக (வல்லவனாக) வளர்த்தெடுக்க, குடும்பம் மொத்தமும் போராடுகிறது. பள்ளிப் பிள்ளைகள், பத்து மணி நேரம் உழைக்கின்றனர். மூத்தவர்களும் கண்மூடித்தனமான ஓட்டத்தில் இருக்கின்றனர். கரணம் தப்பினால் மரணம். ஓட்டம் ஓட்டம் நாக்கு தள்ளத்தள்ள நுகர்வுக் கலாசாரத்தை நோக்கி, திடீர் நட்டங்களில் இருந்து  தப்பிக்க ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த மூச்சுத் திணறவைக்கும் நெருக்கடிக்கு மருந்துகள் போதவில்லை. எனவே, ரம்மியமான சூழலில் மன அமைதியையும் வலிக்காமல் வாழ்வதையும் போதிக்க, கார்ப்பரேட் சாமியார்களையும் உலகமயம் உருவாக்கியிருக்கிறது.

இந்த லாபவெறிபிடித்த யுகத்தில் நோயும் மருந்தும்கூட சந்தைக்கானவைதாமே? நாம் கவனம்கொள்ளவேண்டிய நோய் எது? மருந்து எது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism