தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

? டி.டி.வி.தினகரனுக்குத் ‘தொப்பி’ சின்னம் பொருத்தமானதா?

! பொதுவாகவே எல்லா அரசியல்வாதிகளுக்கும் ‘தொப்பி’ சின்னம் பொருத்தமானதுதான். ‘தொப்பியைப் போட்டுவிட்டான்’ என்றால், ‘அபகரித்துவிட்டான்’, ‘ஆட்டையைப் போட்டுவிட்டான்’ என்று சொல்வது சில வட்டாரங்களில் வழக்கம்.

பிரியதர்ஷினி, குடந்தை-1.

? இரட்டை இலையை தினகரன்தான் மீட்டாராமே?

! ஆமாம். எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தி வைத்ததே அவர்தான்(!). இவர் சொல்லித்தான் கொ.ப.செ பதவியை ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்தார்(!).

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

? ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்பட்டால், அ.தி.மு.க-வின் இரு பிரிவினரும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள்தானே?

! மீண்டும் முதல்வர் பதவியை பன்னீருக்கு யார் வழங்குவது? எடப்பாடி பழனிசாமியா... அது அவர் கையில் இல்லை. தினகரன் தாரை வார்த்தால் மட்டும்தான் அது சாத்தியம். அப்படிச் செய்வதற்குத் தினகரன் என்ன அப்பாவியா? இதற்காகவா போயஸ் கார்டனை இத்தனை ஆண்டுகள் வளைத்து வைத்திருந்தார்கள்? தினகரன் இந்த இடைத்தேர்தலில் தோற்று, அவருக்குக் கட்சியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீக்கப்பட்டால்... அப்போது வேண்டுமானால் இரண்டு அணிகளும் இணையலாம். அல்லது, எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு தினகரன் முதல்வராக முனையும்போது, மீண்டும் ஒரு முறை கட்சி உடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்போது பன்னீர் அணியுடன் அவர்கள் கைகோக்கலாம்.
இதுபோல் பல்வேறு சாத்தியக் கூறுகளை நோக்கி அ.தி.மு.க அரசியல் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.

? ஆர்.கே.நகரில் தி.மு.க-வுக்கு வெற்றி சுலபம்தானே? (களத்தில் இரட்டை இலை இல்லையே?!)

! அப்படிச் சொல்லிவிட முடியாது. இரட்டை இலை இல்லாவிட்டால் என்ன? அ.தி.மு.க இருக்கிறதே? ஆட்சி இருக்கிறதே? அதிகாரம் இருக்கிறதே? அனைத்தையும் தாண்டி, பணம் இருக்கிறதே? இவை எல்லாமே பலமான சக்திகள் அல்லவா? வெற்றி, தோல்வியை ஏதோ ஒரு விஷயம் தீர்மானிப்பது இல்லை. பல விஷயங்களில் ஏதோ ஒன்று பலமானதாக இருக்கும். அது அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை இரட்டை இலை. அந்த பலமான இரட்டை இலை, மிக மோசமான தோல்வியை 1996 சட்டமன்றத் தேர்தலிலும், 2004 நாடாளு மன்றத் தேர்தலிலும் அடைந்துள்ளது என்பதையும் நினைவில் வைக்கவும்.

ஆர்.கே.மனோஜ், நாமக்கல்.

? வெற்றிபெற்ற பின்னால் மக்களை மதிக்காத அரசியல்வாதிகளுக்கு உங்களது அறிவுரை?

! ‘உங்களை வெற்றி பெறவைத்த அதே மக்களால், உங்களைத் தோல்வி அடைய வைத்து வீட்டுக்கு அனுப்பவும் முடியும்’ என்பதை நினைவில் வையுங்கள். ஆக்கவும் அழிக்கவும் வல்லவர்கள் வாக்காளர்கள் என்பதை மறந்தவர்களால், நீண்ட காலம் அரசியலில் நிலைத்திருக்க முடியாது.

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

? ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் யாருக்கு பலன் தரப்போகிறது?

! ஒரு வேட்பாளர் ஒதுக்கி இருக்கும் பணத்தைப் பார்த்தால், அந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏராளமான பலன் கிடைக்கப் போகிறது என்றுதான் சொல்ல முடியும்.

ஏ.கணேசன், தூத்துக்குடி-1.

? ‘இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என்று தினகரன் எந்த தைரியத்தில் கூறுகிறார்?

! தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக்கொள்கிறார் போலும்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-1.

? இலங்கைப் பயண விஷயத்தில் இன அரசியல் சர்ச்சையில் சிக்க வேண்டாம் என்று ரஜினிக்கு வேண்டுகோள் வைத்தாரே திருமாவளவன்?

! தமிழ் மக்களைக் கொன்று குவித்த ரத்தம் காய்வதற்கு முன்பே, ராஜபக்ஷேவைப் போய் தி.மு.க., காங்கிரஸ் அணியினருடன் திருமாவளவன் சந்தித்தது தவறு இல்லை என்றால், ஆறு ஆண்டுகள் கடந்தபிறகு அந்த நாட்டுக்கு ரஜினி செல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? வைகோ, திருமா வளவன், வேல்முருகன் ஆகியோர் என்ன குறை காண்கிறார்கள்?

‘ரஜினி இதுவரை ஈழப்பிரச்னை குறித்து ஏன் கருத்துச் சொல்லவில்லை’, ‘புனிதப் போர் என்று இன்று சொல்வதற்கு என்ன அர்த்தம்’ என்று கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அதற்காக இலங்கைக்கே போகக் கூடாது என்பது என்ன நிலைப்பாடு? அடுத்து, ‘இலங்கையில் இனி தமிழர்கள் யாருமே வாழக்கூடாது’, ‘புலம் பெயர்ந்த தமிழர்கள்கூட தங்கள் சொந்தங்களைப் பார்க்கக் கூடாது’ என்றெல்லாம் இந்தத் தலைவர்கள் சொல்ல ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அதேசமயம், ரஜினி போய் சில வீடுகளுக்குத் திறப்பு விழா நடத்திவிடுவதால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் நன்மை விளைந்துவிடப் போவதும் இல்லை, சிங்கள இனவாதத்தின் கொடூரக் குணம் மறைந்துவிடப் போவதும் இல்லை என்பதே உண்மை.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

? ‘நடிகர்களை நம்பி பி.ஜே.பி இல்லை’ என்று சொல்லி இருக்கிறாரே தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்?

! ஐயோ பாவம்... தமிழிசை இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரே? ரஜினிக்காக மோடியும் அமித் ஷாவும் தவம் இருப்பதும், கமல்ஹாசனுக்கு வலை வீசுவதும், விஜய் வரமாட்டாரா எனக் காத்திருப்பதும், சூர்யா சிக்குவாரா என்று யோசிப்பதும் அவருக்கு இன்னுமா தெரியவில்லை? இல்லை என்றால் அவர்களுக்குக் கட்டையைப் போட நினைக்கிறாரா தமிழிசை?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!