Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

தொடர்ச்சியான போராட்டங்கள்தான் தெலங்கானா என்ற மாநிலத்தையும் உருவாக்கின. சந்திரசேகர ராவ் அங்கு தேர்தலில் வென்று முதல்வராகவும் முடிந்தது. போராட்டங்களால் பதவிக்கு வந்த ராவ், இப்போது போராட்டங்களை வெறுக்கிறார். தலைநகரம் ஹைதராபாத்தில் இருக்கும் இந்திரா பார்க்கில் எப்போதும் ஏதாவது போராட்டங்கள் நடந்தபடி இருக்கும். ஆனால், இப்போது இங்கு போராட்டங்களுக்குத் தடைவிதித்துள்ள மாநில அரசு, தலைநகருக்கு வெளியே நான்கு இடங்களைப் போராட்டங்களுக்கு என்று ஒதுக்கித் தந்துள்ளது. ‘‘யாருமே இல்லாத இடத்தில் எப்படி போராட்டம் நடத்த முடியும்?’’ எனப் புலம்புகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், பழம்பெரும் நடிகை ரேகாவும் ராஜ்ய சபா எம்.பி-க்களாக நியமிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இந்த ஐந்து ஆண்டுகளில் ரேகாவின் அட்டெண்டன்ஸ், வெறும் ஐந்து சதவிகிதம். டெண்டுல்கர் கொஞ்சம் பரவாயில்லை. எட்டு சதவிகிதம் அட்டெண்டன்ஸ் வாங்கியிருக்கிறார். ஐந்து ஆண்டுகளில் சச்சின் ஒருமுறைகூட ராஜ்ய சபாவில் பேசியதில்லை. வெறும் 22 கேள்விகள் மட்டுமே கேட்டிருக்கிறார். இதனால் பல கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் அவர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் நாற்காலிக்கு மேலே கத்தி தொங்குகிறது இப்போது. பெரிதும் பேசப்பட்ட லாவ்லின் ஊழல் விவகாரத்தில் விஜயன் பெயர் அடிபட்டது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு இப்போது கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இதன் முடிவை படபடப்போடு எதிர்நோக்கும் விஜயன், சீனியர் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை தனக்காக வாதாடுவதற்கு நியமித்திருக்கிறார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பீகார் தலைவர் சுசீல்குமார் மோடியை முன்னிறுத்தி தேர்தலில் நின்று, அங்கு தோற்றுவிட்டது பி.ஜே.பி. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை வம்பிழுத்து இருக்கிறார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அவரை ஒப்பிட்டு, ‘‘சுசீல்குமார் மோடியும் மொட்டை அடித்து, காது குத்தி கடுக்கன் போட்டுக்கொண்டு, காவி டிரெஸ் அணிந்தால், அவருக்கு ஒருவேளை கட்சித்தலைமையின் ஆசீர்வாதம் கிடைக்கலாம். பதவிகளும் கிடைக்கலாம்’’ என்கிறார் லாலு.