Published:Updated:

தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!

தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!

தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!

டந்த 26.3.17 ஜூ.வி இதழில் ‘திவாகரன் Vs தினகரன் - சசிகலா குடும்பச் சண்டை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வெளியாகி இருந்தது. வீட்டுக்குள் ரகசியமாக அப்போது நடந்த சண்டை, இப்போது வீதிக்கு வந்திருக்கிறது. சசிகலாவின் தம்பி திவாகரன், ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசியபோது,  டி.டி.வி.தினகரனை வெளிப்படையாகத் திட்டித் தீர்த்திருக்கிறார்.     

தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!

திருவோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மகன் திருமணம், ஏப்ரல் 2-ம் தேதி ஊரணிபுரத்தில் நடைபெற்றது. இதற்கான ஃப்ளக்ஸ்களில் திவாகரனின் பெயர் போடாமல், அவருடைய படத்தை மட்டுமே போட்டிருந்தார்கள். அவர் வரமாட்டார் என நினைத்த அ.தி.மு.க-வினருக்கு ஷாக் கொடுக்கும்படி வந்த திவாகரன், தனது பேச்சிலும் ஷாக் கொடுத்தார்.

‘‘நான் இந்தக் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்க்காதவன், எதையும் தியாகம் செய்யக்கூடியவன். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், தன்னை வளர்த்துவிட்டவர்களின் படத்தை மறக்காமல் போட்டிருக்கிறார். கட்சியில் இப்படித்தான் நிர்வாகிகள் இருக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சிக் கொடியையும் மீட்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தினகரன் மீது பாய்ந்த திவாகரன்!

எது நடக்கக்கூடாது என்று எதிர்பார்த்தோமோ, அது நடந்துவிட்டது. கட்சியில் கண்டவர்களும் உள்ளே புகுந்து உட்கார்ந்துகொண்டு, அவர்களின் இஷ்டத்துக்கு செய்துகொண்டிருக்கிறார்கள். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியைக் கெடுத்துவிட்டார்கள்.

ஆனால், நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மறுபடியும் கட்சியை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிடுவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில்தான் நானும் இருக்கிறேன். சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சி சின்னத்தையே முடக்கவிட்டுவிட்டார்கள். கார் வாங்கிக்கொண்டு, நான்கு பேரோடு சென்னைக்குப் போய், ரூம் போட்டுத் தங்கிப் பதவியை வாங்கிவிடலாம் என்ற நிலைமைதான் அ.தி.மு.க-வில் இப்போது இருக்கிறது. ஓ.பி.எஸ் நல்லாத்தான் ஆட்சி நடத்துகிறார் என்று சொன்னோம். அதை மற்றவர்கள் கேட்கவில்லை’’ என்று ஆவேசமாகப் பேசினார் திவாகரன். திருமணத்துக்கு வந்திருந்த நடராஜனின் அண்ணன் சாமிநாதனின் பெயரைக் குறிப்பிட்ட திவாகரன், டாக்டர் வெங்கடேஷின் மாமனார் பண்ணைவயல் பாஸ்கரனின் பெயரைச் சொல்லவில்லை.

‘நான் சொல்கிறவரை யாரும் சென்னைப் பக்கம் போகக்கூடாது, யாரும் தினகரன் படம் போட்டு ஃப்ளக்ஸ் வைக்கக்கூடாது’ என உத்தரவிட்டிருக்கிறாராம் திவாகரன். மகாதேவனும் இப்படிச் சொல்லியிருக்கிறாராம்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களத்தில், அனல் பறக்கிறது. கூடவே, சசிகலா உறவுகளின் முட்டல், மோதலும் சூடுபிடித்துள்ளது.  

- ஏ.ராம்