Published:Updated:

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’
உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’

பிரீமியம் ஸ்டோரி

‘மாநில வளர்ச்சிக்காக இருவரும் இணைந்தே செயல்படுவோம்’ என்று சில மாதங்களுக்கு முன்பு சொன்ன புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு இடையிலான அதிகார மோதல் தற்போது உச்சத்தை எட்டியிருக்கிறது.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - புதுச்சேரி ‘அக்னி நட்சத்திரம்’

மோதலுக்கான காரணம் என்ன?

கிரண் பேடி புதுச்சேரி கவர்னராகப் பதவியேற்றதில் இருந்து தன்னிச்சையாகப் பல அதிரடிகளைச் செய்கிறார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாக சர்ச்சை கிளம்பியது. இந்த நிலை தொடர்ந்ததால், முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் வெடித்தது.

 தற்போது என்ன பிரச்னை?

 சமீபத்தில், கிரண் பேடியின் உத்தரவுப்படி முதலியார்பேட்டை பகுதியில் குப்பை அள்ளுதல் தொடர்பாகப் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் நடத்தினார். தனக்குத் தெரிவிக்காமல் தன் தொகுதியில் கூட்டம் நடத்துகிறார் என ஆணையர் மீது சட்டசபையில் உரிமை மீறல் புகாரைக் கொண்டுவந்தார் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கரன். அதையடுத்து, சந்திரசேகரனை காத்திருப்புப் பட்டியலில் வைத்து, ஆணையராக வேறு ஒருவரை நியமிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். ‘என் அனுமதியின்றி சபாநாயகரின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது’ என்று தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார் கிரண் பேடி. மீண்டும் சந்திரசேகரனை ஆணையராக நியமிக்கவும்  உத்தரவிட்டார் கிரண் பேடி. இதுதான் தற்போதைய மோதலுக்குக் காரணம்.

 இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா?


காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ரங்கசாமி, தனிக்கட்சியை ஆரம்பித்து 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அப்போது, மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியின் நண்பரான கட்டாரியா, புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். வந்த வேகத்தில் ஆய்வுகள், பொதுமக்கள் சந்திப்பு என கட்டாரியாவின் அதிரடி செயல்பாடுகளால், கதறினார் ரங்கசாமி.

அப்போது, ‘கவர்னர் தன் அதிகாரத்தின்படிதான் செயல்படுகிறார். யூனியன் பிரதேசங்களில் கவர்னருக்குத்தான் முழு அதிகாரம். மாநில அரசு, அவருடன் இணக்கமானப் போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சொன்னவர், தற்போதைய முதல்வரான நாராயணசாமி. இப்போது கிரண் பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் கதறுகிறார் அதே நாராயணசாமி. ‘உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?’ என்று இந்த மோதலை ரசித்துக்கொண்டிருக்கிறார் ரங்கசாமி.

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு