Published:Updated:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறேன் : பிரதமர்

புதுடெல்லி, மார்ச் 3,2011

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பில் பி.ஜே. தாமஸை நியமனம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாம் மதிப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ##~~##  

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர், "நான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன்," என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் அறிக்கை ஒன்றை பிரதமர் வாசிக்கவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் பி.ஜி.தாமஸை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட உயர்க் குழுவே நியமித்தது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பிஜேபி மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தாமஸ் நியமனத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் பிரதமரும், உயர்க் குழுவின் மற்றொரு உறுப்பினரான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தாமஸ் நியமனத்தில் உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு