Published:Updated:

திமுகவை சமாதானப்படுத்த நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து தீர்மானம்!

திமுகவை சமாதானப்படுத்த நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து தீர்மானம்!
திமுகவை சமாதானப்படுத்த நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து தீர்மானம்!
திமுகவை சமாதானப்படுத்த நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து தீர்மானம்!
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற திமுக முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, அக்கட்சியை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. 
திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் நோக்கில், இத்தீர்மானத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த தீர்மானத்தை வரைவு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
##~~##
ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி இன்று அறிவித்த பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 
இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும்,, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கூட்டத்தில் இலங்கைகு எதிராக வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி கொண்டுவந்தால் திமுக தனது விலகல் முடிவை மறு பரிசீலனை செய்யும் என்றும் கருணாநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது,.