Published:Updated:

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

சொந்தக் கட்சிக்காரர்களாலேயே இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார் தினகரன். அவரது தலை எப்போது வேண்டுமானாலும் உருளலாம்.

தினகரனை மையமாக வைத்து அ,தி.மு.க-வில் அனல் கிளம்பி உள்ளது. அவருக்கு எதிராக அமைச்சர்களே அணி திரள ஆரம்பித்துள்ளார்கள் என்பதுதான் அதிர்ச்சி கலந்த உண்மை.

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

‘‘பதவி விலகுங்கள்!”

அமைச்சர்கள் சிலர் இப்படிச் சொன்னதாக அ.தி.மு.க வட்டாரத்தில் செய்தி பரவிக் கிடக்கிறது.

‘‘உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுங்கள். இதுதான் பெரும்பாலான நிர்வாகிகளின் கோரிக்கை.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- இப்படிச் சொன்னாராம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

“அம்மாவின் ஆட்சியையும் கட்சியையும் அவரது வழியில் நாங்கள் நடத்திக்கொள்கிறோம். பிரிந்து சென்றவர்களைச் சேர்த்து, அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள்தான் இப்போதைக்கு பிரச்னை...”

- இப்படிச் சொன்னாராம் அமைச்சர் தங்கமணி.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தினகரன், “டெல்லி காவிகளின் காலில் விழச் சொல்கிறீர்களா? வேண்டுமானால் நீங்கள் காவி டிரஸ்ஸை போட்டுகிட்டு போயி அவுங்க காலில விழுங்க... எனக்கு அவசியமில்லை. நான் கட்சியை விட்டு விலகிடணும்னு நீங்கள் எதிர்பார்க்கிறீங்களா? ஓகே... நான் விலகிக்கொள்கிறேன். ஆறு மாதங்கள் பார்ப்பேன். ஆட்சிக்கு ஆபத்து என்றால்... வீடு தேடி வந்து காலரைப் பிடித்துத் தூக்கிக் கேள்வி கேட்பேன். நீங்கள் சம்மதிக்கிறீர்களா?” என்று சத்தம் போட்டாராம்.

கோபமாக அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் வெளியேற, சிலர் ஓடிவந்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், அவர்கள் இறுக்கமான முகத்தோடு காரில் ஏறிக் கிளம்பிப் போய்விட்டார்கள். சில நிமிடங்களில் தினகரன் வெளியில் வந்து, ‘‘எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்தார்.

இதுபற்றி அமைச்சர்கள் வட்டாரத்தில் விசாரித்தால், ‘‘நீங்கள் கேள்விப்பட்ட அனைத்தும் உண்மைதான்.  இப்படி ஆக்ரோஷமான மோதல் காட்சிகள் சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், சித்திரை வருடப்பிறப்பு நாளன்று நடந்தன” என்கிறார்கள்.

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

‘‘பிரிந்தவர் கூடினால் போனது கிடைக்கும்!”

சசிகலா - பன்னீர்செல்வம் என்று அ,தி.மு.க இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணிக்கு ‘தொப்பி’ சின்னமும் பன்னீர் அணிக்கு ‘இரட்டை மின்கம்பம்’ சின்னமும் தரப்பட்டன. சசிகலா அணியினர்  ‘அ.தி.மு.க அம்மா’ என்றும், பன்னீர் அணியினர் ‘அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இரண்டு அணியினரும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் இரட்டை இலையை மீட்க முடியும் என்பது இப்போதைய நிலை.

சசிகலா அணியில் இருக்கும் சிலர், ‘‘பன்னீரை இணைத்துக்கொண்டு கட்சியை ஒன்றுபடுத்தலாம்’’ என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நேரத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் ரத்தாகி, தினகரனின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், தங்களின் ஆசையை சிலர் இன்னும் வேகமாக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

‘‘சசிகலா, தினகரன் ஆகிய இருவரையும் கழற்றிவிட்டு... இரண்டு கோஷ்டியினரும் கைகோக்க முடிவெடுத்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் கட்சியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் க்ளைமாக்ஸை எட்டியுள்ளன. சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.கழக தலைமை அலுலவலகத்தில் திடீர் பிரஸ் மீட் நடத்தி, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் தினகரன் அதிரடியாக நீக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிடத் தயாராகிவிட்டனர். இதற்கான பேச்சுவார்த்தைகளில் சீனியர் அமைச்சர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்” என்றும் பரபர தகவல்கள் உலவுகின்றன.

தினகரனின் எதிரிகள்!

ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு வட்டாரத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் தினகரனுடன் அவ்வளவாக ஒட்டவில்லை. ‘‘முதன்முதலாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதனைப் பெறுவதற்கு கவர்னரை மனமாற்றம் செய்ய நாம்தான் பெரிய இடத்துச் சம்மதம் வாங்கினோம். அன்று நாம் முயற்சி எடுக்கவில்லை என்றால் கவர்னர் இதற்குச் சம்மதித்திருக்க மாட்டார். ‘நீங்கள்தான் நிரந்தர முதல்வர்’ என்று சொல்லித்தான் எடப்பாடியை பதவி ஏற்க வைத்தார்கள். பன்னீரை அவமானப்படுத்தியது போல, இப்போது எடப்பாடியையும் அவமானப்படுத்த நினைக்கிறார்கள்” என்று சொல்லி வருகிறார்களாம் அவர்கள்.

கடந்த சில நாட்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர். ‘தினகரன் அவராகவே பதவி விலகவேண்டும்’ என்று அவரிடம் சொல்லும் பொறுப்பை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர் சீனியர்கள்.

கருத்து மோதல்களின் தொடக்கம்!

சித்திரை வருடப்பிறப்பு நாளான கடந்த வெள்ளியன்று, டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சீனியர் அமைச்சர்கள் சென்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலந்துகொள்ளவேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்களாம். அதனால், அவர் வரவில்லை. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.பி-க்கள் தம்பிதுரை, வேணுகோபால் உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர், தங்களின் வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்தனர். வேறு சிலர், தங்கள் ஆதரவை வேலுமணி தரப்பினருக்கு போனில் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் தினகரனின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தார்களாம்!

‘‘நாங்கள் நிற்கச் சொன்னோமா?”

“எங்களைக் கேட்டா நீங்கள் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? ஆட்சிமன்றக்குழுவை நிர்பந்தப்படுத்தி நீங்களாகவே அறிவித்துக்கொண்டீர்கள். உங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த மறுநாளே... உங்களை முதல்வர் பதவியில் அமரவைக்க உங்களுடன் இருக்கும் சிலர் திட்ட மிட்டார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். இப்படிப் பட்டவர்கள் தான் உங்கள் பின்னணியில் இருக்கி றார்கள்” என்று அமைச்சர் வேலுமணி குரலை உயர்த்திப் பேசியிருக்கிறார். இதே நேரத்தில், அமைச்சர் ஜெயக்குமார், “விஜயபாஸ்கரை தவிர்த்திருக்கலாம். அவரால்தான் இத்தனை பிரச்னை” என்று சொல்ல... மீண்டும் வேலுமணி குறுக்கிட்டு, ‘‘அவருக்கு யார் இவ்வளவு அதிகாரம் கொடுத்தது? யாரு தைரியம் கொடுத்தது... நீங்கள்தானே?” என்று சீறியிருக்கிறார்.

“வருமானவரித் துறை ரெய்டில் சிக்கியதற்குக் காரணமே விஜயபாஸ்கரின் அனுபவம் இன்மைதான். தொகுதியில் பூத் செலவுக்களுக்குப் பணம் கொடுத்ததைக் கூட பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டார்கள். சில இடங்களில் பணத்தைப் பெற்றதற்கான கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அவைதானே இப்போது சிக்கலில் மாட்டிவிட்டது. முதல்வர் எடப்பாடியார் கூட ஒரு கட்டத்தில், ‘ஏன் இப்படியெல்லாம் ஃபைல் போடுறீங்க’ என்று விஜயபாஸ்கரிடமே கண்டித்துப் பேசினார். இப்போது ஆட்சிக்கே அவமானம்” என்று சீனியர் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

“இனி நீங்கள் வேண்டாம்!” - தினகரனுக்கு எதிராக கத்தி தீட்டும் அமைச்சர்கள்!

‘‘இதுக்கெல்லாம் பயந்தா...”

ஆனால், இதையெல்லாம் தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லையாம். “நான்கூட கடந்த 23 வருடங்களாக ஃபெரா வழக்குகளைச் சந்தித்து வருகிறேன். தேர்தல்ல பணம் கொடுத்ததா சொல்ற இந்த சாதாரண கேஸ்களுக்குப் பயந்தால் நடக்குமா? இதற்காக, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டியதில்லை” என்றாராம். அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் கமிஷனில் இருக்கிறது. அதை நாம் பெறுவது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்” என்றாராம். தினகரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்.

‘‘எனக்கு எதிராக அணி அமைக்கிறீர்களா?”

ஜெயக்குமாரிடம் அமைதிகாத்த தினகரன், அமைச்சர்கள் வேலுமணியையும், தங்கமணியையும் ஒரு பிடி பிடித்தாராம். ‘‘நீங்கள் யார் யாரிடம் எப்படி எப்படிப் பேசுகிறீர்கள் என்று எல்லாமே எனக்குத் தெரியும். எனக்கு எதிராக அணி அமைக்கிறீர்களா? வைத்திலிங்கத்திடம் போய் எனக்கு எதிராகப் பேசுகிறீர்கள். எம்.எல்.ஏ அருண்குமார் என்னை எதிர்த்துப் பேசியது... அமைச்சர் சி.வி.சண்முகம் எனக்கு எதிராகப் பேசியதன் பின்னணி எல்லாமே எனக்கும் தெரியும். இவ்வளவு பேசுகிற நீங்கள் இதுவரை ஏன் சின்னம்மாவைச் சிறையில் போய்ப் பார்க்கவில்லை?” என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு வேலுமணி, ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் நீங்கள் சின்னம்மாவின் போட்டோவையோ, பெயரையோ போடவில்லையே... அது ஏன் என்று இப்போது சொல்லுங்கள்’’ என்று மடக்க... தினகரன் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினாராம்.

கோள்மூட்டுவது யார்?

சரத்குமார் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்ட நாளன்று, அவர் தினகரனைப் பார்க்க வந்திருக்கிறார். அப்போது சோபாவில் தனியாக தினகரன் உட்கார்ந்திருந்தாராம். அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மற்ற அமைச்சர்களும் அமர்ந்திருந்தார்களாம். இந்தக்காட்சி புகைப்படமாக வெளிவந்துவிட்டதாம். ‘கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து என்னென்னவோ கேட்கிறார்கள்’ என்கிற ரீதியில் வேலுமணி கமென்ட் அடித்தாராம். அங்கேயிருந்த தளவாய் சுந்தரம்,  இதை வேறு மாதிரி தினகரனிடம் போட்டுக்கொடுத்துவிட்டாராம். ‘நீங்க சி.எம். மாதிரி நடந்துக்கிறீங்கன்னு வேலுமணி சொல்லிச் சிரிக்கிறார்’ என்றாராம் தளவாய். டென்ஷனான தினகரன், வேலுமணியைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம். ‘‘இப்படித்தான் நாங்கள் சாதாரணமாகப் பேசிக்கொள்வதைத் திரித்துச் சொல்கிறார் தளவாய். தனது மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட கட்சியை ஜெயிக்க வைக்கமுடியாத நபர் அவர். இப்போது கட்சியைக் குழப்பி வருகிறார்’’ என்று பதிலுக்குப் பேசினாராம் வேலுமணி. இதற்கு தளவாய் பதில் பேச... ஒரே கூச்சல், குழப்பம்.

இந்தக் கூட்டத்தில் தினகரனுக்கும், வேலுமணிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்த நேரம் இது!

‘‘இது அம்மா கொடுத்த பதவி!’’

வேலுமணியின் முகத்தைப் பார்த்து, “தமிழக கவர்னர் என்னிடம் சொன்னார், தமிழக அமைச்சர்களில் நீங்கள்தான் ரொம்ப மோசம் என்று! நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். வேண்டுமானால் நீங்கள் ராஜினாமா பண்ண வேண்டியதுதானே? உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு யாரும் இருக்ககூடாதுனு நினைக்கிறீங்க. அதெல்லாம் என்கிட்ட நடக்காது...” என்று தினகரன் சொன்னாராம். உடனே வேலுமணி, ‘‘இது அம்மா கொடுத்த பதவி. என்னை நீக்க உங்களால் முடியாது. எங்களுக்குக் கட்சிதான் முக்கியம். பதவி அல்ல’’ என்றாராம் காட்டமாக.

இதுபற்றி தினகரன் ஆதரவு பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “கடந்த எட்டு மாதங்களாக கட்சிக்கு மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிதியை அமைச்சர்கள் யாரும் செலுத்தவில்லை. கூவாத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குச் செலவு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் செலவு... இரண்டுக்கும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? என்பது பற்றிய கணக்கு தினகரனிடம் இருக்கிறது. எட்டு மாத நிதிக்குக் கூட கணக்குக் கேட்கவில்லை. இனிவரும் காலத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டாம். மக்களிடம் நல்ல பெயரை வாங்கவேண்டும். கட்சி நிதி கூட தேவையில்லை என்றுதான் தினகரன் பேச முயன்றார். வேலுமணிக்கு அது பிடிக்கவில்லை. அவரது மாவட்டத்தில் போலீஸ் மாறுதல் என்றால் கூட, அவரிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். கான்ட்ராக்ட், டெண்டர்கள் எல்லாம் அவரே முடிவுசெய்வார்.  யாரும் கேள்வியே கேட்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். இதை தினகரன் எதிர்க்கிறார். இதுதான் பிரச்னை. இதை மனதில் வைத்து போர்க்்கொடி தூக்கியிருக்கிறார் வேலுமணி” என்றார் அவர்.

திவாகரனின் வேண்டுகோள்!

தினகரனுக்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டுவது அனைத்தும் திவாகரன்தான் என்ற செய்தியும் உலவுகிறது. தஞ்சையில் மகாதேவன் இறந்த நாளன்று துக்கம் விசாரிக்க அமைச்சர்கள் பலர் போயிருந்தனர். அவர்களைப் பார்த்த திவாகரன், ‘‘எங்க குடும்பத்துல யாருக்கும் எந்தப் பதவியும் வேணாம். பிரிந்து கிடக்கும் நீங்க ஒண்ணா ஆகணும். ஆட்சியும் நாலு வருடம் நல்லபடியா நடக்கணும். கட்சி ஒற்றுமையா இருக்கணும். அதுக்கு முதல்ல வழி பண்ணுங்க’’ என்றாராம். . ஆனால், தினகரனின் ஆதரவாளர்களோ, ‘‘அண்ணனை கட்சிப்  பதவியிலிருந்து விலகவைக்க சதி நடக்குது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், இந்த ஆட்சியே கவிழும். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்கள்.

நேரடி மோதல் தொடங்கிவிட்டது. வெடிப்பு நிச்சயம்!

- ஜூ.வி டீம்