என்.காளிதாஸ், சிதம்பரம்.

‘ஈழத்தமிழர் படுகொலையில் தி.மு.க-வின் துரோகத்தை நினைவூட்டவே சிறைக்குச் செல்கிறேன்’ என்று வைகோ சொல்கிறாரே?

அதை வைகோ நினைவூட்டத் தேவையில்லை. மக்களும் அதனை மறக்க மாட்டார்கள். அந்தக் குற்றவுணர்ச்சி தி.மு.க-வுக்கு அதன் வரலாறு முழுக்கவே நீடிக்கும். 2008 - 2010 காலகட்டத்தில் மாநிலத்தை ஆண்ட தி.மு.க-வும், மத்தியில் ஆண்ட காங்கிரஸும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகங்கள் யாராலும் நினைவூட்டத் தேவையில்லாத கரும்புள்ளிகள்!

எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

சமீபத்தில் தங்கள் மனதை பாதித்த விஷயம்?

திருப்பூர் சாமளாபுரத்தில் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி-யான பாண்டியராஜன் கொடூரமாக அடித்த காட்சியை வீடியோவில் பார்க்கும் எவருக்கும் மனம் பதறும். இதயத்தை அறுத்து வெளியில் எறிந்துவிட்டு காக்கியை மாட்டிக்கொண்டாரா அந்த பாண்டியராஜன்? ஈஸ்வரி என்ன ரவுடியா... திருடினாரா... கொலை செய்தாரா... கஞ்சா விற்றாரா? தங்கள் பகுதியில் மதுக்கடை வேண்டாம் என்கிறார். அவ்வளவுதான். இதனை, முடிந்தால் மேலிட அதிகாரியிடம் சொல்லி அவர்களைப் பதில் சொல்ல வைத்திருக்க வேண்டும். அதைவிட்டு, அடிக்கும் உரிமையை பாண்டியராஜனுக்கு யார் கொடுத்தது?

ஈஸ்வரிக்குக் காது கேட்கவில்லை என்கிறார்கள். பாண்டியராஜன் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டாமா? ‘காவல் துறை நண்பன்’ என்கிறோம். ஈஸ்வரி என்ன எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தவரா? எதற்காக அடிக்க வேண்டும்? சென்னையில் ஒரு போலீஸ்காரர் ஆட்டோவுக்குத் தீ வைத்தார். பெண் போலீஸ் ஒருவர், கூரைக்குத் தீவைத்தார். போலீஸ் புத்தி மாறாது.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுகள், நீதிமன்ற வழக்குகள், பினாமி ஆட்சி முறை... இவற்றை சாதகமாகப் பயன்படுத்துவதில் தி.மு.க-வுக்கு வேகமும் விவேகமும் இல்லைதானே?

உண்மைதான். அ.தி.மு.க அடைந்துள்ள தேக்கம், ஆட்சியில் ஏற்பட்டுள்ள சுணக்கம் ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் தி.மு.க சரியாக வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. மேலும், அ.தி.மு.க அடைந்துள்ள பலவீனம் என்பது தி.மு.க-வுக்கு சாதகமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மைதான். அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்காதவர்கள் இனி தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

விவசாயிகளின் போராட்டத்தால் சில அரசியல் கட்சித்தலைவர்களுக்குத்தான் பயன்கிடைக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைப்பதாகத் தெரியவில்லையே?

விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் உலகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தார்கள்; அதனை உணர்த்திவிட்டார்கள். இதுதான் பெரும்பயன்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

புதுச்சேரி கவர்னரை மாற்றுவதற்கு மத்திய அரசு ஏன் தயங்குகிறது?

காங்கிரஸ் அரசைக் கலகலக்க வைப்பதற்காகத்தான் கிரண் பேடி கவர்னராக அனுப்பப்பட்டார். அவரை எப்படி மாற்றுவார்கள்?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

சசிகலா குடும்பத்தினர் தவிர்த்து அ.தி.மு.க இனி செயல்பட வாய்ப்பு இல்லையா?

அதற்கான காலம் கனிந்து விட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

தமிழகத்துக்குத் தண்ணீர் விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அந்த மாநிலம் கண்டுகொள்ளவில்லையே?

இந்த நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் மரியாதை அவ்வளவுதான். உச்ச நீதிமன்றம் ஒரு கேள்வி எழுப்பினால், மத்திய அரசு உடனடியாகப் பதில் தருகிறது. செய்ய முடியவில்லை என்றாலும் சமாளிக்கவாவது செய்கிறது. ஆனால், ஒரு மாநில அரசு மிக அலட்சியமாக நடந்துகொள்கிறது என்றால், அங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?

அப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத ஒரு மாநிலத்தை மத்திய அரசாவது கேள்விகள் கேட்க வேண்டாமா? அதுவும் செய்யவில்லை.

தமிழர் பிரச்னை என்றாலே எல்லா மட்டங்களிலும் வறட்சி வந்துவிடுகிறது.

ஸ்ரீராமன், பெங்களூர்-32.

‘தமிழக முதல்வருக்கு இணையான பதவி எனது பதவி’ என்று துணை சபாநாயகர் தம்பிதுரை சொல்கிறாரே?

அதனால் என்ன?

சொல்லிவிட்டுப் போகட்டும். முதலில் பன்னீருக்குக் குடைச்சல் கொடுத்தார். இப்போது எடப்பாடிக்குக் கொடுக்கிறார். நாளை தினகரன் முதல்வர் ஆன பிறகும் இப்படிச் சொல்வாரா?

வி.ஐ.பி. கேள்வி

தொல்.திருமாவளவன்,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி - என மக்கள் நலக் கூட்டணி சார்பில் நாங்கள் முன்வைத்த மாற்று அரசியலை மக்கள் ஏற்கவில்லையா? மக்களிடம் சேர்க்கவில்லையா?

தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக மிகச் சரியான நிலைப்பாடுகள் கொண்டதாக மக்கள் நலக் கூட்டணி உருவானது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. கூட்டணி ஆட்சி, இதன் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. யாரையும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம் என்றதும் சரியானது. ஆனால், திடீரென விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, ‘இது கேப்டன் அணி’ என்று வைகோ அறிவித்ததிலிருந்து அதலபாதாளத்துக்கு மக்கள் நலக் கூட்டணி போனது.

‘கூட்டணியின் நோக்கம் மாற்று அரசியல் அல்ல, மாற்றுத் தலைவர் மட்டும்தான்’ என்று ஆனது. உங்களது மாற்று அரசியலின் நோக்கமும் தேவையும் குறித்துப் பேசாமல் விஜயகாந்தை நியாயப்படுத்துவது மட்டுமே நோக்கம் ஆனது. கூட்டணி ஆட்சி என்று நீங்கள் சொன்னதை, விஜயகாந்த் ஏற்கவில்லை. அதை அவர் சொல்லவே இல்லை.

வைகோ பேச்சு ஒரு மாதிரியாகவும், நீங்களும் கம்யூனிஸ்ட்டுகளும் பேசியது வேறு மாதிரியாகவும் இருந்தன. இந்தக் குழப்பங்கள்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரான விஷயங்கள்.

இதை மாற்று அரசியலின் தோல்வி என்று சொல்ல முடியாது. எது மாற்று அரசியல் என்பதை மக்களுக்கு உணர்த்தாததுதான் இந்த தோல்விக்குக் காரணம். யாரைக் கேட்டாலும் தி.மு.க., அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள். ‘இவர்களை ஏன் நம்மால் ஒருங்கிணைக்க முடியவில்லை’ என்பதை இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விவாதிக்க வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!