Published:Updated:

ஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
ஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
ஐ.மு.கூ. அரசுக்கான திமுக ஆதரவு வாபஸ் கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் திமுக ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் கடிதத்தை டி.ஆர்.பாலு தலைமையிலான அக்கட்சியின் எம்.பி.க்கள்,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நேரில் வழங்கினர். 

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் கடுமையான வாசகங்களுடன் கூடிய திருத்தம் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்தார்.

அவரை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் பேச்சு நடத்தினார்கள்.

ஆனால் மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நேரம் செவ்வாய்க்கிழமையே முடிந்துவிட்டது. 

அதனால் ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் இலங்கை அரசு இனப் படுகொலையில் ஈடுபட்டது என்ற வார்த்தையைப் போடுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. அதனால் கூட்டணி தொடர்பாக திமுக மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருணாநிதி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனையடுத்து, நேற்று இரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக எம்.பி.க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான கடிதத்தை வழங்கினர்.

திமுக அமைச்சர்கள் இன்று ராஜினாமா

இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அவரிடம் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்க முடிவு செய்துள்ளனர்.