Published:Updated:

கருணாநிதியின் அறிவிப்பு எதிர்பாராதது: பி.எஸ்.ஞானதேசிகன்

கருணாநிதியின் அறிவிப்பு எதிர்பாராதது: பி.எஸ்.ஞானதேசிகன்
கருணாநிதியின் அறிவிப்பு எதிர்பாராதது: பி.எஸ்.ஞானதேசிகன்
கருணாநிதியின் அறிவிப்பு எதிர்பாராதது: பி.எஸ்.ஞானதேசிகன்

சென்னை: மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக கருணாநிதி அறிவித்து இருப்பது, எதிர்பாராததாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இலங்கை பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும்,மத்திய அரசும் எப்போதுமே அக்கறை செலுத்திவந்திருக்கிறார்கள்.வருகிறார்கள்.இலங்கைத்தமிழர்களுடைய உரிமைகள், மறுகுடியமர்த்தல், பயமற்ற வாழ்க்கைமுறை இவைகளுக்கு மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில்,அமெரிக்கா கொண்டுவருகிற தீர்மானத்தை,கடந்த முறை இந்தியா ஆதரித்தது போல்,இந்த முறையும் ஆதரிக்கும் என்பதில்லை மாறுபட்ட கருத்து இல்லை.இதற்கிடையே அந்த தீர்மானத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்,சோனியா காந்தி ஆகியோருக்கு, கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதி, பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.

கருணாநிதியின் கருத்துக்கு மதிப்பளித்து திங்கட்கிழமையே,மத்திய மந்திரிகள் 3 பேர் சென்னைக்கு வந்து கருணாநிதியுடன் பேசி,அவர் தெரிவித்த கருத்துக்களை, டெல்லிக்குப்போய் பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு தெரிவிப்பதாக பேட்டி அளித்தார்கள்.

##~~##
எல்லா அரசியல் கட்சிகளிடமும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் மத்திய அரசு இருக்கிறது.இதற்கிடையில்,மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது,எங்களுக்கு எதிர்பாராத அறிவிப்பாக இருக்கிறது.மாநிலங்களவையில் நான் பேசும்போதுகூட,‘இந்தியா,இந்தப்பிரச்னையை முன்னெடுத்து செல்லவேண்டும்’ என்று குறிப்பிட்டேன்.சல்மான் குர்ஷித் அறிக்கையில் திருத்தம் சொன்னேன். இலங்கைத்தமிழர் நல்வாழ்வில்,தமிழக அரசியல் கட்சிகள் கொண்டிருக்கிற உணர்வைத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கொண்டுள்ளது.
மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளோடும் கலந்துபேசி, திருத்தங்களை பொறுத்தமட்டில் மற்ற நாடுகளையும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறி உள்ளார்.