Published:Updated:

தீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்!

தீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்!
தீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்!

தீவிரமடையும் பி.ஜே.பி - காங்கிரஸ் கருத்து மோதல்கள்... வேகமெடுக்கும் தேர்தல் வேலைகள்!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாழ்வில் பல்வேறு திட்டங்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் முக்ஸார் மாவட்டத்தின் மாலௌட் என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மோடி இவ்வாறு குறிப்பிட்டார். இந்தப் பேரணியில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், விஜய் சாம்ப்லா, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல், பஞ்சாப் மாநில பி.ஜே.பி. தலைவர் மாலிக், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பிரதமர் மேலும் தனது உரையில், "மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நலன் கருதி, கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தியுள்ளது. ராணுவத்தினருக்கான 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' என்ற திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதனை தமது தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விவசாயிகளுக்கான எந்தவொரு சிறப்பான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை" என்று குறை கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தை உணவு தானிய உற்பத்தி மண்டலமாக மாற்றியிருப்பதற்காக விவசாயிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்ததுடன், நாட்டின் வேளாண் உற்பத்தித்துறை வளர்ச்சியில் அளவிடற்கரிய பங்களிப்பை வழங்கி வருவதற்காக விவசாயிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த பிரதமர் அளித்த வாக்குறுதியின் ஒரு அம்சமாக, 'கரீஃப்' பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏறக்குறைய அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இன்னும் எவ்வளவு காலம்தான் காங்கிரஸ் கட்சி மீதே பிரதமர் குறை சொல்லிக் கொண்டிருப்பார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பிரதமர் மோடி மேடைகளில் காங்கிரஸை விமர்சிப்பதும், காங்கிரஸ் பி.ஜே.பி அரசை விமர்சிப்பதும் அதிகரித்திருக்கிறது. அதற்காகவே வலுவான டேட்டாக்களுடன் இருதரப்பும் களமிறங்கி வேலை செய்கிறார்களாம். இதுபற்றி காங்கிரஸ் - பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரிக்கத் தொடங்கினோம்..

தமிழ்நாடு பி.ஜே.பி. நிர்வாகி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றிய திட்டங்களைத்தான் பட்டியலிடுகிறது. செய்யாததை நாங்கள் சொல்லவில்லை. எனவே, விவசாயிகளின் மேம்பாட்டிற்காக, இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி அரசு செய்துள்ளது என்பதை பிரதமர் தெரிவிக்காமல் வேறு யார் தெரிவிக்க முடியும்?. புள்ளி விவரங்களுடன் அவர் எடுத்து வைப்பதற்கு உரிய பதில்களை அவர்கள் முன்வைப்பதில்லையே" என்கிறார்.

பி.ஜே.பி-யின் குற்றச்சாட்டு பற்றி சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தபோது, "பிரதமர் மோடி தன்னுடைய நான்காண்டு கால ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி மீது குறைசொல்வதிலேயே கடத்தி விட்டார். இன்னும் சொல்லப்போனால், நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்பட நாடு முழுவதும் பி.ஜே.பி. தற்போது செயல்படுத்தி வரும் பல திட்டங்களும் முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டவை என்பதை இந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்குச் சாதகமாக மறைத்து விடுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, ஓராண்டுக்கும் குறைவாகவே கால அவகாசம் உள்ள நிலையில், அவர்கள் செய்த சாதனைகள் என்றால் சாமான்ய மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை, குழப்பத்துடன் கூடிய ஜி.எஸ்.டி நடைமுறை அமல் என்பதை மட்டுமே சொல்லலாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு