Published:Updated:

அழகிரி, நெப்போலியன் தவிர தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா!

அழகிரி, நெப்போலியன் தவிர தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா!
அழகிரி, நெப்போலியன் தவிர தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா!
அழகிரி, நெப்போலியன் தவிர தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா!

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து  தி.மு.க. வெளியேறியதையடுத்து அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை.

இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. நேற்று  வெளியேறியது.

இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம், ஜெகத் ரட்சகன், காந்தி செல்வன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

##~~##
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகியோர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை . இவரும் தனித்தனியாக பிரதமரை சந்தித்து கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசி தகவல் :

நீண்ட இழுபறிக்கு இடையே மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் மதியம் 1.20 மணிக்கு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 
இருவரும் தனித் தனியாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.