ஏப்ரல் 19-ம் தேதி... தமிழகத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் தலைமைச் செயலகத்தில் ஒரு பரபரப்பான காட்சி...

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சிலர் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அவர்கள் கையில் மனு ஒன்றை வைத்திருந்தனர். அதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுப்பதற்கு நேரம் கேட்கின்றனர். எதிர்பார்த்ததுபோலவே நேரம் கிடைக்கவில்லை. அதன்பிறகு, சபாநாயகர் தனபாலைச் சந்திக்கின்றனர். “2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நிறைவடையவில்லை; பாதியில் நிற்கிறது. இன்னும் அதில், துறைரீதியான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அமைச்சர் பதில் உரை இருக்கிறது. இதை எல்லாம் ஆர்.கே.நகர் தேர்தலைக் காரணம்காட்டி ஒத்திவைத்தீர்கள். தற்போதுதான் ஆர்.கே.நகர் தேர்தல் இல்லை என்றாகிவிட்டதே!

அதனால், விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி துறைவாரியான விவாதங்களை நடத்துங்கள். அதை முடித்து, அமைச்சர் பதில் உரையும் நிறைவடைந்தால்தான், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அதன்பிறகுதான், சம்பந்தப்பட்ட துறைகள் வேலைகளைத் தொடங்க முடியும்” என சபாநாயகரிடம் விளக்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அமைதியாக விஷயத்தைக் கேட்டுக்கொண்ட சபாநாயகர், “எங்கள் அமைச்சர்களிடம் கலந்து பேசிவிட்டு சட்டமன்றத்தைக் கூட்டும் தேதியை அறிவிக்கிறேன். துறைவாரியான விவாதங்களுக்கு அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்துகொள்ளவே அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்கிறேன்'' எனப் பதில் அளித்துள்ளார். ஆனால், அமைச்சர்கள் அந்தப் பக்கம் வந்தால்தானே அவர் சட்டமன்றத்தைக் கூட்டுவார்.

தமிழக சட்டமன்றம்... அதாவது, தமிழகத்தின் நிர்வாக அமைப்புகளுக்கு உத்தரவிடும் ஆட்சி அதிகார அமைப்பு செயல்படும்விதம் இதுதான். இதற்கு முன்பு இருந்த அரசுகளில் பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்படும்; நிதி ஒதுக்கப்படும்; அதையடுத்துத் தொடங்கப்படும் வேலைகளில் தாமதம் இருக்கும். சில நிறை-குறைகளோடு வேலைகள் முடிக்கப்படும்.

ஏதோ ஒருவகையில் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், இந்த அரசாங்கத்தில் அதற்கும் வழியே இல்லை. காரணம், எந்த வேலைகளையும் இப்போது தொடங்கவே முடியாத நிலை. நிதி ஒதுக்கப்பட்டால்தானே வேலைகள் துவங்கும்!

வருவார்... போவார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தினமும் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். ஆனால், அவர் அங்கு வருவது அரசாங்க வேலைகளுக்காக அல்ல. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஆலோசனைகளும், கட்சியை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பற்றிய ஆலோசனைகளை நடத்த மட்டும்தான். தினகரனை ஒதுக்கிவைப்பதற்கான உத்தரவுகள் தலைமைச் செயலகத்தின் அறையில் வைத்துதான் பிறப்பிக்கப்பட்டன. பன்னீர்செல்வம் பக்கம் இருப்பவர்களை இழுப்பதற்கான திட்டங்கள் முதல்வர் அறையில் இருந்துதான் தீட்டப் படுகின்றன. பன்னீர்செல்வத்துக்கான பேரங்கள் முதல்வர் அறையில் வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. இப்படி அ.தி.மு.க என்ற கட்சிக்கான வேலைகளும், அவரவர் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வேலைகளும்தான் முதல்வர் அறையில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆட்சி நிர்வாகத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள், முயற்சிகள், திட்டங்கள் குறித்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவும் நடப்பதில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 60 நாள்கள் கடந்துவிட்டன. அவர் முதல் அமைச்சர் பொறுப்பேற்றதும், 500 மதுக்கடைகளை உடனடியாக மூடுவது, பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்குவது, ஏழைக் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியுதவியை அதிகரிப்பது, மீனவர்களுக்குத் தனி வீட்டுவசதித் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்தர உதவித்தொகையை இருமடங்காக அதிகரிப்பது என்று ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆனால், அந்தக் கோப்புகளும் இன்னும் கோமாவில்தான் கிடக்கின்றன.

நான்கு முக்கியப் பிரச்னைகள்!

தமிழகம் இன்று நான்கு முக்கியப் பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல், தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு, அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம். இந்த விவகாரங்களை இந்த அரசாங்கம் எப்படிக் கையாண்டுகொண்டிருக்கிறது என்று பார்த்தாலே, அரசாங்கம் எந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை விளங்கிவிடும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தச்சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு மேல் உத்தரவு போடுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனே, அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்த தமிழகத் தேர்தல் ஆணையம் இப்போது தேர்தல் தேதியை அறிவிக்காமல் இழுத்துக்கொண்டே போகிறது. வாக்காளர் பட்டியல் சரி செய்ய வேண்டும், அதற்கு ஆள்கள் போதவில்லை; அவகாசம் போதவில்லை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நூறாண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் தற்போது நிலவுகிறது. தமிழகம் முழுவதையும் வறட்சி மாநிலமாக அறிவித்து மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், அதை எதிர்கொள்ளப் புதிதாக எந்தத் திட்டமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வறட்சி பாதித்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் தங்களின் ஆய்வை முடித்து அறிக்கை கொடுத்துவிட்டன. அந்த அறிக்கைகள் அப்படியே செக்ரட்டரியேட் கோப்புகளில் செல்லரித்துக் கிடக்கின்றன. வறட்சியைச் சமாளிக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் 4,000 கோடி ரூபாய் தேவை என்று அந்த அறிக்கைகளின் மொத்தக் கணக்கு குறிப்பிடுகிறது. ஆனால், அந்த நிதியை உருவாக்கவும், மத்திய அரசிடம் இருந்து அதற்காக நிதி உதவியைப் பெறுவதற்கும் எந்த வேலைகளும் நடைபெறவில்லை.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இப்போது வரை தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்கவில்லை. மே மாதம் 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டதோடு அது நிற்கிறது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கும் எந்த வேலையும் இதுவரை தொடங்கவில்லை; நடக்கவில்லை. இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருமானவரிச் சோதனையில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அரசு ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதி

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற 2016-17 பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ நிதி 468 கோடி என்று ஒதுக்கப்பட்டது. அதாவது, ஒரு எம்.எல்.ஏ-வின் தொகுதிக்கு இரண்டு கோடி என்று கணக்கு. அந்த இரண்டு கோடியில் எம்.எல்.ஏ-க்கள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த திட்டங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், பல எம்.எல்.ஏ-க்களிடம் இருந்து அப்படி எந்தத் திட்டமும் இதுவரை வரவில்லை. கடந்த ஆண்டே திட்டங்களைக் கொடுத்த எம்.எல்.ஏ-க்களின் கோப்புகளுக்கும் தலைமைச் செயலகத்தில் தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறர்கள்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது பட்ஜெட் கூட்டம் முடிந்துள்ளது. இப்போதும் எம்.எல்.ஏ-க்கள் நிதி என்று 468 கோடியை அறிவித்துவிட்டனர். ஆனால், அது எப்போது ஒதுக்கப்படும், அதில் எம்.எல்.ஏ-க்கள் என்னென்ன திட்டங்களை தங்கள் தொகுதிகளில் நிறைவேற்றப்போகிறார்கள், அதில் எப்போது வேலைகள் தொடங்கும் என்று தெரியாமல் இருக்கிறது. அதாவது, ஒரு எம்.எல்.ஏ தன் தொகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால்கூட, இப்போது அவரால் செய்ய முடியாது. அவர் வெறுமனே பொதுமக்களிடம் குறைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கலாம்.

மக்களுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசாங்கத்தில் புதிய திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை; அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லை; அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளும் இதுவரை நடக்கவில்லை; அன்றாட அரசாங்க அலுவல்களைச் செய்யும் அரசு ஊழியர்களையும் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அதனால், அவர்கள் விரைவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப் படவில்லை.

செயல்படாத அரசாங்கம், அதன் ஊழியர்களையும் செயல்படாத நிலைக்குத் தள்ளி, தமிழகத்தை ஊனமாக்கிவைத்துள்ளது.

டாஸ்மாக் முக்கியம் அமைச்சரே!

தமிழக அரசு ஆர்வம் காட்டும் ஒரே வேலை டாஸ்மாக் மட்டுமே. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு மாற்றாக புதிய கடைகளை வேறு எந்த இடத்தில் தொடங்கலாம் என்கிற வேலைகள் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. புதிய கடைகள் வேக வேகமாகத் திறக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை மாநகர, மாவட்டச் சாலைகளாக மாற்றும் வேலைகள் இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன!