Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

கழுகார் பதில்கள்!

‘தமிழகத்தில் பி.ஜே.பி விரைவில் ஆட்சி அமைக்கும்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது காமெடியாக இருக்கிறதே?

சட்டமன்றத்தில் ஓர் இடம் கூட இல்லாமல், தமிழக அளவில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமாக ஒன்றே ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார் என்றால், இது காமெடி அல்ல... சீரியஸாகக் கவனிக்க வேண்டிய விஷயம். அவர், ஏதோ செய்யப் போகிறார். விஷயம் இல்லாமல் வாயை விடமாட்டார் பொன்னார்.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

 ‘தமிழகத்துக்குத் தேர்தல் வந்தால் நல்லது’ என்கிறாரே திருநாவுக்கரசர்?


 அவருக்கு நல்லதுதானே?! அந்த அர்த்தத்தில் சொல்லி இருக்கலாம்.

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

அன்று 2ஜி வழக்கில் தி.மு.க-வை மத்திய அரசின் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ மிரட்டியதற்கும், இன்று அ.தி.மு.க-வை மத்திய அரசு மிரட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?


எந்த வகையில் மிரட்டினாலும் சமாளிக்கும் கருணாநிதி அன்று தி.மு.க-வுக்குத் தலைவராக இருந்தார். இன்று அ.தி.மு.க-வுக்கு அத்தகைய ஜெயலலிதா இல்லையே!

விவகாரம் உண்மையானதாகவே இருந்தாலும், ஆளுமைமிக்க தலைவர்கள் சமாளிப்பார்கள். மற்றவர்கள் அடிபணிந்து கிடப்பார்கள்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் கூர்ந்து கவனிக்கவேண்டியது என்ன?


தமிழ்நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று நடக்கவில்லை. அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. முதலமைச்சராக இருப்பவருக்கு எந்தக் கனவுத்திட்டமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதனைச் செயல்படுத்துவதற்கு நிதிகள் இல்லை. மொத்தத்தில், யாராலும் ஆளப்படாத அநாதை நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. இதனை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டாம்... சாதாரணமாகவாவது கவனித்தார்களா எனத் தெரியவில்லை.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘மத்திய அரசைக் குறை சொல்வதிலேயே கவனம் செலுத்தாமல், காங்கிரஸ் கட்சியைச் சீரமைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சொல்லி இருக்கிறாரே?

காங்கிரஸ் கட்சியைச் சீரமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு முன்னதாக அந்தக் கட்சிக்கு யார் தலைவர் என்பது முடிவாக வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் சோனியா. அவரால் ஆக்டிவ் அரசியலை இனி செய்ய முடியாது. அவர் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வர வேண்டும். எனவே, ‘சோனியாவிடம் இருந்து தலைமைப் பதவியை வாங்கி, ராகுலுக்குத் தர வேண்டும்’ என காங்கிரஸில் சில தலைவர்கள் பேசுகிறார்கள்.

ராகுல் காந்திக்கே தீவிர அரசியலில் ஆர்வம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அவரும் திடீர் திடீரென தலைமறைவு ஆகிவிடுகிறார். அரசியலில் வெற்றிபெறுகிறோம், தோற்கிறோம் என்பதெல்லாம் அப்புறம். முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். அதனை ராகுல் நிரூபிக்க வேண்டும். அதன்பிறகுதான் எந்தச் சீரமைப்பும் செல்லுபடி ஆகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

எம்.செல்லையா, சாத்தூர்.

‘ஊழல் ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. அதன் ஹீரோவாக இருந்தவர் பன்னீர்செல்வம்தான்’ என்கிறாரே ஸ்டாலின்?

பன்னீர், முதலமைச்சராக இருந்தவரை அதனை ஏன் ஸ்டாலின் சொல்லவில்லை?

ஸ்ரீராம், சேலையூர்.


தமிழகம் ஏதோ ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யூ-வில் இருப்பது போல் தோன்றுகிறது. பிழைக்குமா? பிழைக்காதா?


எனக்கென்ன தெரியும்? ரிச்சர்ட் பியெல்தான் அறிவார்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க-வில் எதிர்ப்புக் கிளம்பி இருப்பதாக வெளிவரும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை?


அது முழு உண்மை அல்ல. அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்’ ஏட்டின் முதல் பக்கத்தில், இன்னமும் டி.டி.வி.தினகரன்தான் இடம்பெற்று வருகிறார். அவரது படங்களைத்தான் வெளியிட்டு வருகிறார்கள். கடந்த 25-ம் தேதி, அந்த ஏட்டின் முதல் பக்கத்தில், ‘அம்மா அமைத்துத் தந்த அரசு, இந்திய நாட்டுக்கே முன்னோடியான விவசாயிகள் நலம் பேணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும்’ என்று அவரே முதல்வர், அவரே பொதுச்செயலாளர், அவரே துணைப் பொதுச் செயலாளர் என்ற தொனியில் பிரசுரம் செய்துள்ளார்கள். எனவே, தினகரனுக்கு அ.தி.மு.க-வில் எதிர்ப்புக் கிளம்பி இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?

எடப்பாடி பழனிசாமி ஆட்கள் தினகரனை இதுவரை எதிர்த்துப் பேசவில்லை. தினகரனைக் கட்சியை விட்டு நீக்கவில்லை. எனவே, இவர்களது எதிர்ப்பு நம்பும்படியாக இல்லை. ‘நான் ஒதுங்கிவிட்டேன்’ என்று சொல்வது எல்லாம் நாடகம் மாதிரித்தான் தெரிகிறது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

உண்மையிலேயே தீபா ஆரம்பித்திருப்பது பேரவையா... கட்சியா?

இரண்டும் இல்லை என்பதைத்தான் அவர் தினம் தினம் நிரூபிக்கிறாரே?

துரைமுருகன்
முதன்மைச் செயலாளர், தி.மு.க

கழுகார் பதில்கள்!

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உயரிய கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவிக் கொண்டு இருக்கிறதே மோடி அரசு?

ந்தியா என்பது ஒரு மதம், ஒரு இனம், ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் நாடு அல்ல. பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் நாடு. வேறுபட்ட கலாசாரமும் பண்பாடும் கொண்ட மனிதர்கள், தங்கள் வேறுபாட்டை மறக்காமல், யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாமல், மற்றவர்கள் பண்பாட்டைக் குறைச் சொல்லாமல், மனப்பூர்வமான ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இதுதான் இந்தியாவின் குணம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் நம்முடைய தாரக மந்திரம். இந்த ஒற்றுமை உணர்வுதான், ‘இந்தியர்’ என்ற பெருமிதத்தோடு நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்யக்கூடாது; எதற்காகவும் செய்யக்கூடாது.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பி.ஜே.பி-க்கு வாக்களிக்க வில்லை. ‘உ.பி-யில் முஸ்லிம்கள் கூட எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள்’ என்று அக்கட்சி சொல்கிறது. எனவே இந்துப் பண்பாட்டை பொதுப்பண்பாடு ஆக்கும் காரியத்தை மோடி அரசு செய்யக்கூடாது. அப்படிச் செயல்பட மாட்டோம் என்று அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில், இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற காரியங்கள், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று இல்லாமல் வேற்றுமையில் வேற்றுமையை விதைப்பதாகவே அமையும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!