

சென்னை: பழிவாங்கும் நடவடிக்கையாகவே காங்கிரஸ் கட்சி சிபிஐ மூலம் மு.க.ஸ்டாலின் வீட்டில் இந்த சோதனை நடத்தியுள்ளது என்று தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சி.பி.ஐ அதிகாரிகள் இன்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய சில நாட்களிலேயே சிபிஐ சோதனை நடத்தியிருப்பது திமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், மத்திய அரசு சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறது என பரவலாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளியேறிய அடுத்த நாளே அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வீட்டில் இது மாதிரி சோதனை நடத்தப்படுவது மத்திய அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துவது உண்மை என்பதையே நிரூபித்துள்ளது என்றார்.
##~~## |