Published:Updated:

தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் 20013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் பன்னீர் செல்வம்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி்த் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்.

இதைத் தொடர்ந்து அவர் வாசித்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் வருமாறு

* வெள்ளத்தடுப்புக்கு தமிழக அரசு செலவழித்த 395 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை.

* வரி வருவாய் இலக்கு 86065.40 கோடி

* புதிய வரிகளோ, வரி விகித ஏற்றமோ இல்லை.

* சென்ற ஆண்டு தமிழக அரசு பெற்ற கடன் 15.675 கோடி

*  2013-14 மூலதன திட்டங்களுக்காக 21142 கோடி கடன் வாங்க திட்டம்.

* நிதி பற்றாக்குறை 19889.31 கோடியாக இருக்கும்.

* வருவாய் உபரி 664.06 கோடியாக இருக்கும்.
 

* இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்கு 110 கோடி ஒதுக்கீடு.

* இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி.

* ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப நல நிதி உதவித்தொகை  50 ஆயிரமாக உயர்வு.

* மத்திய வருவாயில் இருந்து மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பங்கு 500 கோடி குறைந்துள்லது.

* மாநில அரசுக்கு விரோதமான மத்திய அரசின் நிதி மசோதாவின் பிரிவை நீக்க வேண்டும்.

* கூட்டாட்சி தத்துவத்துக்குஎதிரான கருத்துகள் நிதி மசோதாவில் உள்ளன.
 



* இந்திரா வீட்டு வசதி திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

* தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 117.93 கோடி.

* சென்னையில் புதிதாக 4 மேம்பாலங்கள்.

* கரும்பு அரவை கழிவுகளில் இருந்து 183 மெகாவாட் மின் உற்பத்தி.

* சுயவேலைவாய்ப்பு திட்டத்துக்கு 5 கோடி.

* பேரூராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடை.

 * சென்னை பெரு நகர மேம்பாட்டுக்கு 500 கோடி.

* வீடு தோறும் கழிவறை திட்டத்துக்கு 72.6 கோடி.


 


* ஆதி திராவிடர் பழங்குடியின மாணவ மானவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க 56 கோடி.

* ஆதிதிராவிடர் துணைதிட்டங்களுக்கு 7042 கோடி ஒதுக்கீடு.

* ஆதி திராவிடர் வீட்டு வசதி திட்டத்துக்கு 13.26 கோடி.

* நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதம்.

* சுய உதவிக்குழுக்களுக்கு 6 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு.

* விலையில்லா மிக்ஸி வழங்க 1500 கோடி.

* திருமண உதவி திட்டத்துக்கு 750 கோடி

* சத்துணவு திட்டத்ததுக்கு 1492.86 கோடி.

* பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு 105 கோடி.
 

* 10 புதிய பல்தொழில்நுட்ப கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், 8 கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும்.


* விளையாட்டுத்துறைக்கு 112.50 கோடி.

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி.
  கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4887.69 கோடி.
   நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3539.36 கோடி.

* சாலை இனணப்புக்கு 45 புதிய பாலங்கள் அமைக்கப்படும்.

* மாநில நெடுஞ்சாலைகள் ஆனணயம் அமைப்பு.
 

*கல்வித்துறை மேம்பாட்டுக்கு 16 ஆயிரத்து 965 கோடி ஒதுக்கீடு.
 
*10, 11,12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க 381 கோடி ஒதுக்கீடு.

*அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு 700 கோடி ஒதுக்கீடு.

*கல்வித்துறைக்கான நபார்டு திட்டங்களுக்கு 293 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத கழிப்பறை, குடிநீர் வசதிக்கு இலக்கு.

*இலவசப் புத்தகம் வழங்க 217 கோடி.

*தேசிய இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு 366.57 கோடி ஒதுக்கீடு.

*இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு 323.7 கோடி.
 

* இலவச மருத்துவ ஊர்தி (108 )திட்டத்துக்கு 77.59 கோடி.

* மருத்துவ காப்பீட்ட்டு திட்டத்துக்கு 270 கோடி.

* மருத்துவ மேலாண்மை தகவல் முறை திட்டத்துக்கு 117.93 கோடி.

* தஞ்சை, நெல்லை மருத்துவக்கல்லூரிகளில் புற்றுநோய் சிகிச்சை.

* மின் உற்பத்தி திட்டங்கள்

வல்லூரில் 500 மெகாவாட் அலகு அக்டோபரில் தொடங்கும். வடசென்னையில் 600 மெகாவாட் அலகு மே மாதம் தொடங்கும்.

தூத்துக்குடியில் 2 அலகுகள் 2013 டிசம்பர், 2014 மார்ச்சில் தொடங்கும்.

 உடன்குடியில் தலா 660 மெகாவாட் அலகு மின் உற்பத்தி திட்டங்கள்.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் அலகு மின் உற்பத்தி திட்டங்கள்.

* சுற்றுலாத்துறைக்கு 153.95 கோடி

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட தினக்கூலி 148 ஆக அதிகரிப்பு.

* 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டி தரப்படும்

*தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்க சிப்காட் மூலம் நிலவங்கி.

* 1.72 கோடி வேட்டிகள், 1.73 கோடி சேலைகள் இலவசமாக வழங்கப்படும்

* கைத்தறி தள்ளுபடி மானியத்துக்கு  78.45 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத்துறைக்கு 6452.77 கோடி ஒதுக்கீடு.

* 1000 கிமீட்டர் ஒருவழி சாலை இருவழி சாலையாக மாற்றப்படும்.
 

* கால்நடை மருத்துவமனைகள் தொடங்க 117 கோடி.

* 12000 பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் 1.5 லட்சம் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்படும்.

* மீன்வளத்துறைக்கு 467.44 கோடி ஒதுக்கீடு.

* உணவு மானியத்துக்கு4900 கோடி.

* விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதே காரணம்.

* காய்கறி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு.

 * பயிர்க்கடனுக்கு 4500 கோடி ஒதுக்கீடு.

* மாநிலத்தின் சாகுபடி பரப்பை 8.2 லட்சம் ஏக்கராக அதிகரிக்க முடிவு.

* தேசிய உணவு பதப்படுத்தும் திட்டத்துக்கு 20 கோடி.

* கிராமப்புற வறுமையை போக்க 350 கோடி.

* வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம்
 

* 46 கோடி செலவில் உழவர் திருவிழா
 

* தொழில் முனைவோர் திட்டத்துக்கு 5 கோடி ஒதுக்கீடு
 

* புதுவாழ்வு திட்டம் 350 கோடியில் 110 வட்டங்களுக்கு விரிவுபடுத்தல்
 

* வேளாண் துறைக்கு 5189 கோடி ஒதுக்கீடு.
 

*திட்ட வடிவமைப்பு திட்டத்துக்கு 200 கோடி ஒதுக்கீடு.
 

*292 சிறைக்காவலர்கள் நியமனம்.

* காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் நிவாரணம்.
 

* 50 சதவீத பயிர் இழப்புக்கு 15 ஆயிரம் நிவாரணம்
 

* புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் திட்டம் நிறைவேற்றப்படும்.
 

* மின் ஆளுமை நிர்வாக முறையை கொண்டு வர நடவடிக்கை.
 

* காவல்துறைக்கு 4706.17, நீதித்துறைக்கு 695.28 கோடி
 

* 2 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க இலக்கு.
 

*நகர்ப்புற வறுமையை போக்க 2006 கோடி ஒதுக்கீடு.


* பொருளாதார வீழ்ச்சியால் சேவைத் துறையின் வளர்ச்சியும் பாதிப்பு

* மின் உற்பத்தி, சாலை அமைப்பு மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.

*நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு

* கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட சமூகப் பயன்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி.

* தமிழகத்துக்கான நடப்பு ஆண்டு மாநில திட்ட ஒதுக்கீடு ரூ.2.11 லட்சம் கோடி.

* பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தை குறைக்கவும் மத்திய பட்ஜெட்டில் நடவடிக்கை இல்லை.

* பொருளாதார வீழ்ச்சியால் சேவைப் துறையின் வளர்ச்சியும் பாதிப்பு.

* 2013-14 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு ரூ.37,000 கோடி.